For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இனி தேன் சாப்பிடறதுக்கு முன்னாடி தேன்மெழுகை சாப்பிடுங்க... ஏன் தெரியுமா?

  |

  மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்களால், எண்ணிலடங்காத நன்மைகள் நம்மைச் சுற்றியும் நமக்குத் தெரியாமலும நடந்து கொண்டே இருக்கிறது. நவீன விமானங்களை விட பறக்கும் திறன் கொண்ட இந்த தேனீக்களின் நன்மைகளை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ராணித்தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத்தேனீ என்று இனவாரியாகப் பிரிந்து, அதற்கான வேலைகளை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன அவை.

  health

  ஒரு தொழிலாளியைப் போலச் செயல்படும் பெண் தேனீக்கள், தேன் உற்பத்தியில் அளப்பரிய பங்கு வகிக்கின்றன. அதன் வயிற்றுப் பகுதியில் இயற்கையாக இருக்கும் சுரப்பிகளில் தேன் மெழுகு உற்பத்தியாகின்றன. இனப்பெருக்கத்துக்காகவும், உற்பத்திக்காகவும் தானே தயாரித்துக் கொண்ட தேன் கூட்டில் அவற்றை சேகரித்துக்கொள்கிறது. சேகரிக்கப்பட்ட அந்த தேன் மெழுகை எடுத்து பல்வேறு நோக்கங்களுக்காக தேனீ உற்பத்தியாளர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருகின்றனர்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சர்வ சாதாரணமல்ல

  சர்வ சாதாரணமல்ல

  தேன் மெழுகு தயாரிப்பது அவ்வளவு சர்வசாதாரணமா என்ன. கிடையவே கிடையாது. ஓயாத அதன் உழைப்பை பட்டியல் போட்டால் விழிகளை வியப்பில் விரிய வைத்துவிடும். அந்த அளவுக்கு அசாத்தியமான ஈடுபாடு இருந்தால்தான் சாத்தியமாகும். தேன் கூட்டை கட்டுவதற்காக தேனீயை உருவாக்க வேண்டும். தேன்கூடு தயாரித்து விட்டு சும்மா இருந்து விட முடியாது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீட்டர் பறந்தால்தான் ஒரு பவுண்டு தேன் மெழுகைச் சேகரிக்க முடியும். தேன் மெழுகு எந்தெந்த விதத்தில் பயன்படுகிறது. மெல்லும் தேன் மெழுகு உடல் நலனுக்கு எவ்வாறு உகந்ததாக இருக்கிறது. அதனால் ஏற்படும் பலாபலன்கள் என்னென்ன. அழகுச் சிகிச்சைக்காக அது எப்படி உதவுகிறது என்பதை ஆய்வுகள் கூட கட்டியங்கூறி அதன் நன்மைகளை நிலை நிறுத்துகிறது.

  தேன் மெழுகின் வகைகள்

  தேன் மெழுகின் வகைகள்

  தேன் மெழுகில் மூன்று முக்கிய வகைப்பாடுகள் உள்ளன.மஞ்சள் தேன் மெழுகு முதலாவது பிரிவு. இது தேன்கூட்டில் இருந்து நேரடியாகப் பெறப்படும் ஒரு கச்சாப்பொருள் போன்றது. மஞ்சள் தேனீக்கள் அனைத்துக்கும் அடிப்படையாக உள்ளது. வெள்ளைத் தேன் மெழுகு இரண்டாவது வகை. இது வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருப்பதால் வெள்ளைத் தேன்மெழுகு எனப்படுகிறது. சிகிச்சைக்கு உதவும் ஆல்கஹால் தயாரிக்க மஞ்சள் தேன் மெழுகு பயன்படுகிறது.

  தேன் மெழுகில் அப்படி என்ன இருக்கிறது

  தேன் மெழுகில் அப்படி என்ன இருக்கிறது

  ஆசிட்ஸ் ஈஸ்டர்ஸ்- 1 விழுக்காடு

  கொழுப்பு அமிலங்கள்- 12 விழுக்காடு

  ஆசிட் பாலியஸ்டர்ஸ்- 2 விழுக்காடு

  கொழுப்பு ஆல்கஹால்- 1 விழுக்காடு

  ஹைட்ரோ கார்பன்ஸ்- 14 விழுக்காடு

  ஹைட்ராக்ஸி பாலியஸ்டர்ஸ்- 8 விழுக்காடு

  இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன, தேன் மெழுகை மெல்லுவதால் கிடைக்கும் கிடைக்கும் பயன்கள் எவை என்பதை எடுத்துக்காட்ட ஒரு பெரிய பட்டியலோடு வருகிறேன்

  தோலில் ஈரப்பதத்தை ஏற்படுத்த....

  தோலில் ஈரப்பதத்தை ஏற்படுத்த....

  பொதுவாக சருமங்களை பராமரிப்பதற்கு தேன் மெழுகு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீரிழப்பு ஏற்படும்போது வற்ண்டும், வெடிப்புற்றும் இயல்பான தன்மையை இழந்துவிடும் தோல்களுக்கு. ஈரப்பதத்தை அளித்து நெகிழ வைக்கிறது.சருமத்துக்கு பயன்படும் விட்டமின் 'ஏ' தேன்மெழுகில் உள்ளது. தோலில் ஏற்படும் வில்லங்கங்களை சரிசெய்ய தேன்மெழுகும். தேனும் எவ்வாறு பயன்படுகிறது என்பதை, அஸ்பர்னரின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹைட்ரேட்டை மீளப்பெறுவதுடன், தோலின் உயிர்மங்களை புத்தாக்கம் செய்து மிருதுவாகவும், மென்மையாகவும் பளிச்சிடச் செய்வதாக குறிப்பிடுகிறது. தோலின் நுண்துளைகளில் காற்றுச் சுழற்சியை அனுமதிக்கிறது. இதுதவிர தோல் ஆரோக்கியத்துக்கு இஞ்சித் தேநீரையும் எடுத்துக் கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  உதட்டுச் சிதைவை தடுக்கிறது.

  உதட்டுச் சிதைவை தடுக்கிறது.

  தோலில் ஈரப்பதத்தை ஏற்படுத்துவதோடு மட்டும் நின்று விடாமல், அழகான உதடுகளுக்கு நல்ல தைலமாகவும், வலி நிவாரணியாகவும் தேன்மெழுகு இருக்கிறது. பொதுவாக உதடுகளுக்கு பயன்படும் பெட்ரோலியம் ஜெல்லியை உறிஞ்ச முடியாது. அத்துடன் அது ஒருவித அசூயையும், தலைவலியையும் ஏற்படுத்தி விடக்கூடியது.ஆனால் தேன்மெழுகு சுவையைத் தருவிப்பதோடு, தேவையில்லாமல் உற்பத்தியாகும் உமிழ்நீரையும் கட்டுப்படுத்துகிறது. இதனை நீங்கள் உதடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்காது.

  கல்லீரலுக்கு நன்மை

  கல்லீரலுக்கு நன்மை

  தேன் கூட்டில் பொதிந்துள்ள பொருட்களின் பயன்பாடு குறித்து 2014 ஆம் ஆண்டு கொரியன் ஜர்னல் ஆப் இன்டர்னல் மெடிசின் என்ற அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது. உண்மையில் மனிதனின் கல்லீரலை தேன்கூட்டில் உள்ள பொருட்கள் பாதுகாக்கிறதா என்பது அதன் ஆய்வுப் பொருளாக இருந்தது. கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு 6 மாதங்களாக நீடித்தது. முடிவில் கல்லீரலுக்கு தேன்கூட்டில் உள்ள பொருட்கள் பாதுகாவலாக இருப்பதை உறுதி செய்தது. கல்லீரல் கொழுப்பு நோய்க்கு முற்றிலும் உகந்த மருந்து என்றும் அந்த அமைப்பு அறிவித்தது.

  இஞ்சியும் கூட கல்லீரலுக்கு நலன் பயக்கும் நல்ல மருந்தாகும். இதையும் நீங்கள் தயங்காமல் பயன்படுத்திக்கொள்ளலாம்

  கொழுப்பைக் குறைக்க...

  கொழுப்பைக் குறைக்க...

  மனித உடலில் அடர்த்தியாக உள்ள புரதக் கொழுப்பை கட்டுப்படுத்துவதற்கு தேன் மெழுகு ஒரு நல்ல நிவாரணி. 21 லிருந்து 29 விழுக்காடு வரை கொழுப்பு இருந்தால் அது எதிர்மறையான கொழுப்பு எனப்படுகிறது. 8 விழுக்காட்டிலிருந்து 15 வரை இருந்தால் அது சராசரியான கொழுப்பு ஆகும். உடலுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தை விளைவிக்கும் புரதக் கொழுப்புக்கு தேன் மெழுகு சிம்ம சொப்பனமாக இருக்கிறது.

  அழற்சியை நீக்கும் வலி நிவாரணி

  அழற்சியை நீக்கும் வலி நிவாரணி

  வாதத்தைக் குணப்படுத்தும் நல்ல மருந்தாக தேன் மெழுகு இருப்பதை ஆய்வுகளே உறுதிப்படுத்தியுள்ளன. 2014 ஆம் ஆண்டு கொரியன் ஜர்னல் ஆப் இன்டர்னல் மெடிசின் என்ற நிறுவனம் வாதத்தால் பாதிக்கப்பட்ட 23 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர்.மூட்டுகளில் இருந்துவந்த விறைப்புத்தன்மை இலகுவாகி, உடலின் இயங்குதிறன் சராசரி நிலையை அடையக் கண்டனர். ஆய்வின் முடிவில் அழற்சிக்கும், பூஞ்சைகளால் ஏற்படும் தோல் நோய்களுக்கும் மற்றும் நமைச்சலுக்கும் தேன் மெழுகு ஒரு அரிய மருந்து என்பதை கண்டுபிடித்தனர். தொற்றுகளால் ஏற்படும் தோல் அரிப்பு, ஈரப்பதத்தை இழக்கும்போது ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றுக்கு தேன் மெழுகை பரிந்துரைத்தனர். தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் மெழுகு ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையை, 4 வாரங்களுக்கு தினசரி 3 தடவை பாதிக்கப்பட்ட தோலில் தேய்த்துப் பார்த்தால், பூரண குணம் நிச்சயம்...

  முகப்பருவுக்கு எதிரி

  முகப்பருவுக்கு எதிரி

  தேன் மெழுகில் விட்டமின் 'ஏ' நிறைந்து காணப்படுகிறது. மேலும் அதில் கிருமி நாசினிகளும், அழற்சிக்கு எதிரான தன்மைகளும் இடம் பெற்றுள்ளன. ஆகவே முகப்பருக்களை நீக்குவதற்கும், தடுப்பதற்கும் மருத்துவ குணம் நிறைந்ததாக காணப்படுகிறது. தேன் மெழுகு சிகிச்சை முகத்தை மென்மையாக்கி பொலிவுறச் செய்கிறது.

  வரி தழும்புகளை போக்க

  வரி தழும்புகளை போக்க

  கண்ணில் படக்கூடிய வரித்தழும்புகள் தோலின் அழகை கெடுத்து விடுகிறது. இதனை தேன் மெழுகு மூலமாக நீக்கி விடலாம் என்கிறது கொரியாவின் யோன்செய் யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் மெடிசின் டிபார்ட்மெண்ட். காயத்தை குணப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் கூறுகிறது.தேன் மெழுகு இயற்கையாகவே கொலாஜனை கொண்டிருப்பதால் வரித்தழும்புகளை விரட்டும் சக்தியை பெற்றுள்ளது. கொலாஜன் நிறைந்த பொருட்களான தேனீ வெண்ணெய், கோகோ வெண்ணெய், ராயல் ஜெல்லி, திராட்சை விதை மற்றும் தேங்காய் எண்ணெயுடன் தேன் மெழுகை சேர்ந்து கலவையாக அப்ளை செய்யும் போது, வரித்தழும்புகள் காணாமல் போகக் கடவீர்.

  ஒரு நிவாரண ஊக்கி

  ஒரு நிவாரண ஊக்கி

  சிகிச்சைக்கு உதவும் நறுமணங்களைக் கொண்ட தேன் மெழுகுகள் கேண்டில் வடிவில் தற்போது கிடைக்கின்றன. இவை சுற்றுச்சூழலுக்கும், உடலியக்கத்தின் ஆசுவாசத்திற்கும் சாலச்சிறந்ததாக இருக்கிறது. சாதாரணமாக செய்யப்படும் பாராபின் மெழுகுவர்த்திகளை பயன்படுத்துவது மூச்சுத் திணறலுக்கும், உடல் நலத்துக்கும் கேடு விளைவித்து விடும். அதனை உறிஞ்சும்போது பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டுக்கு உள்ளே ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தேன்மெழுகு கேண்டில்களை பயன்படுத்த துவங்குங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Health Benefits of Chewing Beeswax – Natural Beauty Treatments

  beeswax is a natural wax produced by female worker bees. It is formed by the glands in the abdominal parts of those bees.
  Story first published: Saturday, June 23, 2018, 15:40 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more