For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உங்க சிறுநீர் நாற்றமடிக்குதா?... அதுக்கு இதுதாங்க காரணம்...

  |

  வெந்தயம் (ட்ரைகோநெல்லா பொயெணம் க்ரெகும்) தெற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் தாவிர வகை. இது பழுப்பு மற்றும் அடர்ந்த மஞ்சள் வண்ண விதைகளை கொண்ட செங்குத்தாக வளரும் வருடாந்திர செடியாகும்.

  health

  இந்தியில் மேத்தி எனவும், தமிழில் வெந்தயம் எனவும் அழைக்கப்படுகிறது. பொதுவாக தென்னிந்திய மற்றும் வட இந்திய சமையலிலும், பாட்டி வைத்தியத்திலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சத்துகள்

  சத்துகள்

  வெந்தய செடியின் விதைகளும், இலையும் மிகுந்த நறுமணமும், சுவையும் கொண்டது. விதைகள் சிறிது துவர்ப்பு சுவை உடையது. ஆனால் வறுத்து உபயோகிக்கும் போது இதன் துவர்ப்பு சுவை மாறிவிடுகிறது. இதில் தையமின், போலிக் அமிலம், ரிபோபிளேவின், நியாசின், வைட்டமின் A, B6, C இவற்றுடன் தாமிரச் சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம், செலினியம், துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் மக்னீசியம் நிறைந்து காணப்படுகிறது. வெந்தய கீரையில் வைட்டமின் K அதிக அளவில் உள்ளது.

  வெந்தயத்தின் பலன்கள்

  வெந்தயத்தின் பலன்கள்

  வெந்தயத்தில் ட்ரைகோனெலின், லைசின் மற்றும் எல்-டிரிப்டோபான் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. விதைகளில் அதிக அளவு சப்பொனின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. பல்வேறு தருணங்களில் வெந்தயத்தின் உபயோகத்தைப் பார்ப்போம்.

  கொழுப்பைக் குறைக்கிறது.

  கொழுப்பைக் குறைக்கிறது.

  கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ள கொழுப்பை அதிக அளவில் நம் உடல் கிரகிக்காமல் செய்ய வெந்தயத்தில் உள்ள சபோனின்கள் உதவுகின்றன. LDL எனப்படும் கெட்ட கொழுப்பை நம் உடல் உற்பத்தி செய்யாமல் தடுப்பதில், இந்த சபோனின்களின் பங்கு மிகவும் முக்கியமானது. உதாரணமாக, மைசூர், சி.எஸ்.ஐ.ஆர், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் இருந்து ரெட்டி மற்றும் ஸ்ரீனிவாசன், எலிகளை பயன்படுத்தி செய்த ஆராய்ச்சியில் பித்தப்பையில் இருந்த கொழுப்புக் கற்களைக் கரைக்க வெந்தயம் பயன்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் வெந்தயம் கொழுப்புகளை குறைப்பதை உறுதிப்படுத்தினர்.

  நீரிழிவை கட்டுப்படுத்துகிறது

  நீரிழிவை கட்டுப்படுத்துகிறது

  வெந்தயத்தில் மட்டுமே காணப்படும் மிக அரிதான அமினோ அமிலம் (4HO-Ile) ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி ஹைபர்கிளசிமிக் நிலைமைகளின் கீழ் இன்சுலின் சுரக்க உதவுகிறது. க்யூம் பல்கலைக்கழகத்திலிருந்து ஈரானிய ஆய்வாளர்கள் டைப் 1 நீரிழிவு மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்களின் சிகிச்சைக்கு அமினோ அமிலம் (4HO-Ile) தேவையான ஒன்று என்று கண்டுபிடித்துள்ளனர்.

  தாய்ப்பாலை அதிகரிக்கிறது.

  தாய்ப்பாலை அதிகரிக்கிறது.

  பழங்கால மூலிகை மருத்துவத்தில் வெந்தயம் பால்சுரப்பி மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெந்தயம் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப் பாலை அதிகரிக்கவும், தடையின்றி கிடைக்கவும் உதவியுள்ளது. பால்சுரப்புக்காக பயன்படுத்தப்பட்ட மற்ற மருந்துகளாவன நெருஞ்சில், விஷ்னு க்ரந்தி, பெருஞ்சீரகம், சோம்பு போன்றவை. அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயல் திறனுக்கான நவீன தகவல்கள் குறைந்த அளவிலேயே உள்ளன. சில ஆராய்ச்சிகள் வெந்தயம் பயன்படுத்தி தயாரித்த மூலிகை டீ அருந்தும் போது தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதையும், குழந்தை பிறந்த பின் ஆரம்ப கால கட்டங்களில், குழந்தையின் எடை அதிகரிப்பதையும் உறுதி செய்துள்ளது.

  புற்றுநோய்

  புற்றுநோய்

  வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து சிலவகை புற்றுநோய்கள் வருவதை தடுக்கிறது. உதாரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி சென்டர் ஆஃப் பயோடெக்னாலஜியைச் சேர்ந்த ஆய்வாளர்கள், வெந்தயத்தில் உள்ள எஸ்ட்ரோஜெனிக் விளைவுகள், ஹார்மோன் மாற்று சிகிச்சைக்கு (HRT) ஒரு மாற்றாகவும் இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். மற்ற ஆய்வுகள் வெந்தயத்தில் உள்ள சப்போனினும், பசைத்தன்மையும், உணவில் உள்ள நச்சுகளை அகற்றி, மியூகஸ் சவ்வுகளைக் காத்து குடல் புற்று நோயிலிருந்து பாதுகாப்பதையும் உறுதி செய்கிறது.

  டெஸ்டோஸ்டிரோன்

  டெஸ்டோஸ்டிரோன்

  ஆஸ்திரேலிய ஆய்வில், ஆண்களுக்கு வெந்தயம் உடலியலில், பாலியல் உணர்வுகளைத் தூண்டி இயல்பான டெஸ்டோஸ்டிரோன் அளவை பராமரிக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சோதனையில், சமவாய்ப்பிடப்பட்ட, 25 முதல் 52 வயது வரை உள்ள விறைப்புத்தன்மை குறைபாடு இல்லாத 60 ஆண்களுக்கு, டெஸ்டோபின் 600mg (வெந்தய சாறு மற்றும் தாதுக்கள் கலந்தது) அல்லது மருந்துப்போலி, தினமும் 2 மாத்திரைகள் வீதம் 6 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டது. டெஸ்டோபின் 600mg உட்கொண்ட ஆண்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தித் தன்மை கிடைத்ததை இந்த ஆய்வு உறுதி செய்தது.

  செரிமானத்தை எளிதாக்குகிறது

  செரிமானத்தை எளிதாக்குகிறது

  வெந்தயம் நெஞ்செரிச்சல், அமில எதுக்குதல் ஆகியவற்றிக்கு சிறந்த மருந்தாகும். ஏனெனில் அதில் உள்ள பசைத்தன்மை நெஞ்செரிச்சல், அமிலம் அதிகரிப்பதை சரி செய்து இரைப்பை அழற்சியை தடுத்து, குடலில் ஒரு தடுப்புச்சுவர் போல் செயல்படுகிறது. பைட்டோதெரபி ஆராய்ச்சி இதழில் வெளியான ஒரு ஆராய்ச்சி முடிவு: 2 வாரங்கள் தொடர்ந்து வெந்தயத்தை அரை மணி நேரம் உணவுக்கு முன்பு எடுத்துக்கொண்டதில், நெஞ்செரிச்சல் உள்ளோருக்கு அதன் தீவிரம் குறைந்தது. இது ராணிடிடின் 75mg இரண்டு வேளை எடுத்து கொள்வதற்கு ஒப்பாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  எடையை குறைக்க

  எடையை குறைக்க

  வெந்தயம் எடை குறைப்பிற்கு ஒரு வரப்பிரசாதம். இந்த தெர்மோஜெனிக் மூலிகை பசியை அடக்கி எடை குறைப்புக்கு வழி வகுக்கிறது. குறைந்த நேரத்திலேயே சக்தி அதிகரிக்க செய்கிறது. கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை மாற்றியமைக்கிறது.

  வெந்தயம் சமையலுக்கு உதவுவதோடு, பலவகைகளிலும் ஒரு நல்ல இயற்கையான தீர்வாக இருக்கிறது.

  இந்தியா, சீனா மற்றும் கிழக்கிந்திய நாடுகளில் பாரம்பரியமாக வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைட்டமின் E அதிகமுள்ள வெந்தயம் ஊறுகாய் கெடாமல் பதப்படுத்த உதவுகிறது. உலர்ந்த வெந்தய கீரை அசைவ உணவுகளில் மற்றும் சைவ சுவையூட்டியாக பயன்படுகிறது. வெந்தயம், தேன், எலுமிச்சை சேர்த்த மூலிகை தேநீர் காய்ச்சலை சரி செய்ய உதவுகிறது. குழந்தை பிறப்பு சமயங்களில் கருப்பையில் வலியை தூண்டி பிரசவத்தை எளிதாக்குகிறது பாரம்பரியமாக எக்ஸிமா, தீப்புண்கள், ரத்தக்கட்டிகள், கீல்வாதம் போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படுகிறது.

  பெண்களுக்கு ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதற்கும் மார்பகங்களை பெரிதாக்குவதற்கும் பரிந்துரைக்கப்படுகிறது. பிரெஷான வெந்தய கீரை இலைகளை அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் முடி செழுமையாக வளரும். பொடுகுத்தொல்லை நீங்கும்.

  பக்க விளைவுகள்

  பக்க விளைவுகள்

  மிக அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இதில் உள்ள டெராடோஜெனிக் ஆற்றல் காரணமாக பிறவிக் குறைபாடுகள் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் வெந்தயம் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  வெந்தயம் உள் ரத்தப்போக்கிற்கு காரணமாகலாம்.

  தோல் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை ஆகியவை வெந்தயத்தால் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. கடுமையான ஒவ்வாமையின் அறிகுறிகள் மார்பு வலி, முக வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் அல்லது விழுங்குவதில் சிக்கல் ஆகியவை.

  வயிற்றுப்போக்கு, அஜீரணம், நெஞ்செரிச்சல், வாயு, வீக்கம் மற்றும் சிறுநீர் துர்நாற்றம் ஆகியவை வெந்தயத்தின் மற்ற பக்க விளைவுகள்.

  வெந்தயம் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள்

  வெந்தய தேநீர்

  வெந்தய தேநீர்

  1. ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒன்றாண்டாக பொடித்துக் கொள்ளவும்.

  2. இதை நன்றாக கொதிக்க வைத்த ஒரு கப் சுடுநீரில் ஒன்று முதல் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். (அதிகம் ஊறினால் பலன்கள் அதிகம்)

  3. வடிகட்டி, அத்துடன் தேனும், சுவைக்காக எலுமிச்சை சாறும் சேர்க்கவும். சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பருகலாம். இத்துடன் டீ தூள், மூலிகைகள் கலந்து வெவ்வேறு சுவைகளில் தயாரிக்கலாம்.

  வெந்தயம் பாசிப்பருப்பு சப்ஜி / வெந்தயக் கீரை பருப்பு கறி

  வெந்தயம் பாசிப்பருப்பு சப்ஜி / வெந்தயக் கீரை பருப்பு கறி

  1. வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விடவும்.

  2. 1/2 தேக்கரண்டி ஜீரகம் சேர்த்து அது வெடித்தவுடன், நறுக்கிய 1 வெங்காயம், 2 பல் நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சுவைக்கு சேர்க்கவும். ஒரு நிமிடம் வறுக்கவும்.

  3. சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, இரண்டு கப் பொடியாக நறுக்கிய வெந்தய கீரை, உப்பு சேர்த்து வதக்கவும். வெந்தயக் கீரை சீக்கிரம் வெந்து விடும் என்பதை மனதில் கொள்ளவும்.

  4. 1/4 கப் ஊற வாய்த்த பாசிப்பருப்பு, 1/2 கப் வெண்ணீர் சேர்க்கவும்.

  5. சிறிதளவு கடலை மாவை தூவி, நன்றாக சேர்த்து கிளறி வேக வைக்கவும். 10 அல்லது 15 நிமிடங்கள், பாசிப்பருப்பு வேகும் வரை அப்படியே விடவும்.

  6. ரொட்டி அல்லது சாத்தத்துடன் சூடாக பரிமாறவும்.

  வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்

  வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்

  மொத்த கலோரிகள் 323

  புரதம் 23 கி

  கொழுப்பு 0.4 கி

  கார்போஹைடிரேட் 58.4 கி

  ஊட்டச்சத்துக்கள்

  கால்சியம், Ca - 176 மிகி 17.6%

  காப்பர், Cu - 1.11 மி.கி. 55.5%

  இரும்பு, Fe - 33.53 மிகி 186.28%

  மெக்னீசியம், Mg - 191 மிகி 47.75%

  மாங்கனீஸ், Mn - 1.23 மிகி 61.4%

  பாஸ்பரஸ், P - 296 மிகி 29.6%

  பொட்டாசியம், கே - 770 மிகி 22%

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Fenugreek - Health Benefits, Uses, and Side Effects

  Fenugreek seeds and leaves are strongly aromatic and flavorful. The seeds are bitter in taste, but lose their bitterness if lightly roasted.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more