For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்த செடிய வீட்ல ஒரு ஓரமா சும்மா வெச்சிருக்கீங்களா?... இது பல நோயை குணப்படுத்துற பொக்கிஷம் தெரியுமா?

  |

  ஸ்நேக் பிளான்ட் என்று அழைக்கப்படும் பாம்பு கற்றாழை ஒரு பிரபலமான மூலிகை செடியாகும். இதன் தாவர பெயர் சான்சவிரியா ஆகும். இது பல்வேறு நன்மைகள் கொண்ட ஒரு மூலிகை செடியாகும். பாம்பு தலை விரிப்பது போன்ற தோற்றத்தை இந்த செடி கொண்டதால் இது பாம்பு கற்றாழை என்று அழைக்கப்படுகிறது.

  health

  இந்தோனேசியாவில் இந்த செடியை அழகு காரணமாக வீட்டின் வரவேற்பறையில் அலங்கார செடியாக வைப்பார்கள். இதன் தனித்தன்மை மற்றும் காண்போரை மயக்கும் அழகு அந்த அறைக்கு மேலும் அழகு சேர்ப்பதாக அறியப்படுகிறது. இந்த செடியின் ஆரோக்கியம், அழகு மற்றும் சுகாதார நன்மைகளைக் கருதியும் இது வீடுகளில் வைக்கப்படுகிறது. எளிதில் இந்த செடியை பராமரிக்க முடிவதும் இதனை எல்லோரும் விரும்பி வளர்ப்பதற்கு மற்றொரு காரணமாகும். உயரமாகவும், செழிப்பாகவும் வளர்வதற்கு குறைந்த அளவு தண்ணீர் மற்றும் சூரிய ஒளி போதுமானது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  குணங்கள்

  குணங்கள்

  image courtesy:

  இதன் இலைகள் மிகவும் வலிமை உடையனவாக உள்ளன. அவற்றின் இலைகளின் கூர்மையான முனை சூழலுக்கான தழுவல் வடிவம் ஆகும், இது சுய-பாதுகாப்பாளராக உள்ளது. கரும்பச்சை மற்றும் கிளி பச்சை நிறத்தில் இருக்கும் இலைகளின் விளிம்பில் மஞ்சள் நிற பார்டர் அமைந்து, மூன்று மாறுபட்ட நிறக் கலவையுடன் இருக்கும் இந்த இலைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தோன்றும். இதன் இலைகளில் சிவப்பு நிறம் இருந்தால் ஒளிரும் நெருப்பு போல் காட்சியளிக்கும்.

  இந்த பாம்பு கற்றாழை செடியை வீட்டில் வைப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. வாருங்கள் அதனை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

  நன்மைகள்

  நன்மைகள்

  இந்த செடியின் தோற்றம் ஆப்ரிக்காவாக இருந்தாலும் இந்தோனேசியா மக்களால் பெரிதும் வளர்க்கப்பட்ட செடியாக உள்ளது. இந்த செடியில் பல்வேறு ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகள் இருந்தாலும், இதன் அழகு காரணமாக ஒரு அலங்கார செடியாக பெரிதும் பார்க்கபடுகிறது. பாம்பு கற்றாழையில் இருக்கும் ஒவ்வொரு இலையிலும் ப்ரேக்ணன் க்ளைகொசைடு, விஷத்தன்மை கலவைகளை கரிமப் பொருட்களாக சிதைக்கச் செய்கிறது. கரிமம் அல்லாத கலவையுடன் ஒப்பிடும்போது கரிம கலவைகள் எளிதில் சிதைந்து விடும். மேலும், சர்க்கரை மற்றும் அமினோ அமிலம் போன்றவை மனிதர்களுக்கு நல்ல கரிம சேர்மங்களாக உள்ளன. ஆகவே பாம்பு கற்றாழை கார்பன் டை ஆக்சைடு (CO2), பென்சீன், பார்மல் டீஹைட், க்ளோரோஃபார்ம் மற்றும் ட்ரை-கோதிலீன் போன்ற நச்சுப் கலவைகளை சீர்குலைக்க உதவுகிறது.

  மாசுபாட்டை உறிஞ்சுகிறது

  மாசுபாட்டை உறிஞ்சுகிறது

  சுற்றுசூழலில் உள்ள மாசை உறிஞ்சுவதற்கு பயன்படும் தாவரங்களில் மிக முக்கியமானது இந்த பாம்பு கற்றாழை. இப்படி உறிஞ்சக் கூடிய மாசு, எண்ணிக்கையில் ஏறத்தாழ 107 உள்ளது. இத்தகைய மாசு தாவரங்களால் உறிஞ்சப்பட்டு பிராணவாயுவாக மாற்றம் செய்யப்படுகிறது. நாம் வசிக்கும் அறையில் தாவரங்கள் அலங்கார செடிகளாகவும் சிகரெட் போன்ற புகையை உறிஞ்சும் தன்மை உடையதாகவும் இருக்கிறது. புகை பிடிப்பவர்கள் இருக்கும் பகுதியில் குறிப்பாக இந்த செடியை வைப்பது நல்லதாகும். இத்தகைய மாசு, ஆபத்தான புற்று நோயை உருவாக்கலாம்.

  MOST READ: காம உணர்ச்சி அதிகமாக வரும் ராசிக்காரர் யார்?... உங்க ராசிக்கு என்ன வரும்னு தெரியுமா?

  கதிர் வீச்சுக்கள்

  கதிர் வீச்சுக்கள்

  பாம்பு கற்றாழை கதிர் வீச்சுகளை உறிஞ்சுவதில் ஊக்கமுடன் செயலாற்றுகிறது. எலேக்ட்ரோனிக் பொருட்களில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சுகளை இது எளிதில் உறிஞ்சுகிறது. ஆகவே லிவிங் ரூம் அல்லது தொலைக்காட்சி போன்ற மற்ற எலேக்ட்ரோனிக் பொருட்கள் இருக்கும் அறையில் இந்த செடியை வளர்க்கலாம். அந்த அறையை அழகு படுத்துவதுடன் அந்த அறையில் உள்ள கதிர்வீச்சுகளை உறிஞ்சவும் இது பயன்படலாம்.

  அதிகமான பிராணவாயு

  அதிகமான பிராணவாயு

  image courtesy:

  பாம்பு கற்றாழை அதிக அளவிலான பிராணவாயுவை உற்பத்தி செய்கிறது. க்லோரோபில் எனப்படும் பச்சையம் அதிகம் இருப்பது ஒளிச்சேர்க்கை விரைந்து நடக்க காரணமாக உள்ளது. இதன் காரணமாக பாம்பு கற்றாழை அதிக அளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்கிறது. முன்பே கூறியது போல், புகை அதிகமாக இருக்கும் அறையில் இந்த செடியை வைப்பதால், புகையை உறிஞ்சி, பிராணவாயுவால் அந்த இடத்தை சமன் செய்ய முடியும்.

  வேலியாக பயன்படுத்த

  வேலியாக பயன்படுத்த

  image courtesy:

  பாம்பு கற்றாழையின் மற்றொரு நன்மை, இதனை வேலியாக பயன்படுத்தலாம். ஏனென்றால் கடினமான, வலுவான, தாவரங்களின் கூர்மையான இலைகள் நம் வீட்டைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் எந்த ஊடுருவையும் தடுக்க முடியும். மேலும் வீட்டின் வெளிப்புறத்தை அழகாக எடுத்துக் காட்ட இந்த செடி அவசியம் தேவை.

  கைவினைப் பொருட்கள்

  கைவினைப் பொருட்கள்

  image courtesy:

  கைவினைப் பொருட்கள் செய்வதற்கு பலர் இந்த செடியை பயன்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு , ஜப்பானியர்கள் இந்த செடியை துணி நெய்வதற்கு பயன்படுத்துகின்றனர். பாம்பு கற்றாழை பயன்படுத்தி நெய்த பொருட்கள் அதிக தரம் உடையதாக பார்க்கப்படுகிறது. மேலும் இது வலிமையாகவும், மென்மையாகவும் உள்ளதாக அறியப்படுகிறது.

  தனித்தன்மை வாய்ந்த நறுமணம்

  தனித்தன்மை வாய்ந்த நறுமணம்

  பாம்பு கற்றாழை ஒரு நல்ல நறுமணத்தை உற்பத்தி செய்கிறது. சைனா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த செடியை வாசனைக்காக பயன்படுத்துகின்றனர். குளியலறை மற்றும் சமயலறையில் இருந்து வெளிப்படும் துர்நாற்றத்தைப் போக்க இதனை பயன்படுத்தலாம்.

  MOST READ: அந்தப்புரத்தில் உள்ள ராணிகளை கவர இந்திய ராஜாக்கள் என்னென்ன செய்தார்கள்னு தெரியுமா..?

  அரோமா சிகிச்சையில்

  அரோமா சிகிச்சையில்

  அரோமா தெரபி செடிகளாக பாம்பு கற்றாழை பயன்படுகிறது. மாலையில், இந்த செடிகள் மலரும். மலர்கையில், ஒரு மிருதுவான வாசனை அறை முழுவதும் பரவும். அழுத்தத்தில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள, இந்த கற்றாழை வாசனை திரவியத்தை, சிலர் பயன்படுத்துகின்றனர்.

  அன்டி செப்டிக்

  அன்டி செப்டிக்

  இந்த செடி, கிருமிகளைப் போக்க பயன்படுகிறது. இதற்குக் காரணம் இவை கிருமி நாசினி செடிகள் . உடலில் இருக்கும் காயத்தில் தூசு படுவதால் அவை நமக்கு தீங்கை ஏற்படுத்துகின்றன. ஆகவே, காயம் ஏற்பட்ட இடத்தில் இந்த கற்றாழையை தடவுவதால் கிருமிகள் உள்ளே செல்லாமல் தடுக்க முடியும்.

  கூந்தல் பராமரிப்பு டானிக்

  கூந்தல் பராமரிப்பு டானிக்

  உங்கள் கூந்தல் இயற்கையான முறையில் மிருதுவாக அழகாக இருக்க, பாம்பு கற்றாழையை பயன்படுத்தலாம். இந்த செடி தலை முடியை ஆரோக்கியமாக பராமரிக்க பயன்படுகிறது. கூந்தலை மென்மையாக்குவது மட்டும் இல்லாமல், இயற்கையாக பிரெஷ்ஷாக வைக்க உதவுகிறது.

  மூல நோய்

  மூல நோய்

  மூல நோயை போக்க உதவுவது இந்த செடியின் மற்றொரு மிகப்பெரிய நன்மையாகும். குடல் இயக்கத்தை தடுப்பது இந்த நோயின் செயல்பாடாகும். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மலம் கழிப்பதில் சிரமத்தை உணர்வதாக நாம் அறிவோம். பாம்பு கற்றாழை என்பது ஒரு உயர் நார்ச்சத்து கொண்ட மூலிகை என்பதால் இது ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.

  தலைவலி

  தலைவலி

  தலைவலி என்பது ஒரு சிறிய பாதிப்பு தான். ஆனால் தினசரி செயல்பாடுகளில் தொந்தரவை விளைவிக்கும் ஒரு பாதிப்பை இது உண்டாக்குகிறது. ஆகவே இதனை உடனடியாக போக்குவது நல்லது. தலைவலியை போக்க பாம்பு கற்றாழையை பயன்படுத்தலாம்.

  MOST READ: இத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...

  நீரிழிவு அபாயம்

  நீரிழிவு அபாயம்

  இந்த தாவரம், நீரிழிவு அபாயத்தை குறைக்க பயன்படுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இனிப்பை சாப்பிடுவதால் அவர்களை இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. பாம்பு கற்றாழையின் சாற்றை பருகுவதால் இரத்த சர்க்கரை அளவு குறைவதாக அறியப்படுகிறது.

  நோய் உருவாகும் அறிகுறி

  நோய் உருவாகும் அறிகுறி

  காற்றோட்டம் குறைவாக இருக்கும் அறையில் இருப்பவர்கள் நோய் உருவாகும் சின்றோம் என்ற அறிகுறியை உணர்கின்றனர். ஒரு அறையில் அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்சைடு இருப்பதால் அல்லது மாசு இருப்பதால், சிகரெட் புகை அல்லது ஏசி பயன்பாடு அதிகம் இருப்பதால் இந்த நிலை உண்டாகிறது. இந்த நிலையைத் தடுக்க அந்த அறையில் பாம்பு கற்றாழையை வைக்கலாம். தேவையில்லாத மாசை இந்த செடி உறிஞ்சிக் கொண்டு பிராணவாயுவை அறையில் செலுத்துகிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: health
  English summary

  13 Incredible Health Benefits of Sansevieria - Snake Plants

  Sansevieria also known as Snake Plants or Mother in Law Tongue plants are one of herb plants that are quite famous for their name and benefits.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more