For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளநரையை மறைய வைக்கும் தாமரைப் பூ எண்ணெய் எப்படி தயாரிப்பது?

தாமரையின் ஆரோக்கிய நன்மைகளையும் அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் இக்கட்டுரையில் காண்போம்.

By Gnaana
|

மொழிகளில் கலைகளில் நல்ல வளர்ச்சியை அடைய கலைஞர்கள் வணங்கும் கலைமகள் சரசுவதிதேவி வீற்றிருக்கும் பெருமையுடையது, தாமரை மலர். தெய்வங்கள் வாசம் புரியும் தெய்வீக மலராக அறியப்படும் தாமரை மலர், தன்

அனைத்துவகை பயன்பாட்டாலும், மனிதர்க்கு தெய்வீக மூலிகை மலராகவும் விளங்கி, அவர்கள் இன்னல்கள் களைந்து உடல்நிலை சீராக்கிவருகிறது. சமீபத்தில் பரவலாகிவரும் மலர் மருத்துவத்தில் முக்கியமான இடம், தாமரைக்கு உண்டு.

Health benefits of Lotus

மலர்கள், இலை, தண்டுகள், வேர்க்கிழங்கு என அனைத்து வகையிலும் நன்மையே அளிக்கவல்லது ஓடாத நீர்நிலைகளான குளங்களில் வாழ்பவை தாமரை மலர்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வைத்தியத்தில் பயன்பட்ட தாமரையின் மடல்கள், பொதுவாக உடலின் வெம்மையைக் குறைத்து குளிர்ச்சியுண்டாக்கும். மருத்துவத்தில் அதிகமாக வெண்தாமரை மலரே பயன்படுத்தப்பட்டாலும், செந்தாமரை மலர்களும் அதே அளவு பலன்கள் தருபவையே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of Lotus

Health benefits of Lotus and different ways to use for hair growth
Story first published: Sunday, July 30, 2017, 12:02 [IST]
Desktop Bottom Promotion