சர்க்கரை வியாதி, கர்ப்பப்பைக் கோளாறுகளை நீக்கும் இலந்தைப் பழம்!! எப்படி சாப்பிடனும்?

By: Gnaana
Subscribe to Boldsky

வீடுகளின் கொல்லைகளில் அக்காலத்தில் எல்லாம், இலந்தை, கொய்யா, சீதாப்பழம் போன்ற மரங்கள் இருக்கும், தற்காலங்களில், கொல்லைகளே அரிதான நிலைகளில், இந்த மரங்களும் அரிதாகிவிட்டன.

கூர்மையான சிறிய முட்கள் நிறைந்த சிறுமரமாக வளரும் இயல்புடைய இலந்தை மரங்கள், சிறு வட்டமான இலைகளையும், மலர்களையும் கொண்டவை. எல்லா இடங்களிலும் வளரும் தன்மையுள்ள இலந்தை, மிக்க நற்பலன்களைக் கொண்ட ஒரு தொன்மையான மருத்துவ மரமாகும். சிறிய பேரிட்சை மற்றும் ரெட் டேட் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

அந்த கிராமத்து பாட்டிமார்களின் வாழ்வாதாரம், இலந்தை.

கிராமங்களில் விளைந்த இலந்தைப்பழங்களை பாட்டிகள், பள்ளிகளின் வாயிலில் அமர்ந்து வியாபாரம் செய்வர், இந்த இலந்தை, ஒரு பைசாவுக்கும் கிடைக்கும், இரண்டு பைசாவுக்கும் கிடைக்கும், அதைவிட அதிக அளவில் கைகள் கொள்ளாத அளவுக்கு கிடைக்கும், பத்து பைசாவுக்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவ நன்மைகள் :

மருத்துவ நன்மைகள் :

இலந்தைப்பழம் வெறுமனே, சிறுவர்களின் தின்பண்டமாக, மட்டும் இருக்கவில்லை, அதன் மருத்துவ பலன்கள் அளவிட முடியாதவை. இதில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின் தாதுக்கள் நிறைந்துள்ளன.

ஞாபக மறதி :

ஞாபக மறதி :

உடலில் ஏற்படும் சர்க்கரை பாதிப்புகளை சரிசெய்வதில் இருந்து, ஞாபக மறதி, உடல் வலி, கைகால் மூட்டுகளில் ஏற்படும் வலிகள், வாந்தி தலைசுற்றல், கிறுகிறுப்பு மயக்கம், பெண்களின் மாதாந்திர விலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி, தலைவலி போக்கி, பெண்களின் மகப்பேறு அடைவதில் உள்ள கோளாறுகளை சரியாக்கி, அவர்களை விரைவில் தாய்மையடைய வைக்கும் தன்மையுள்ள ஒரு அற்புத மூலிகைதான், இலந்தைச்செடி.

நீர்ச்சத்து :

நீர்ச்சத்து :

உடலில் நீர்ச்சத்து வற்றுவதை தடுத்து, மலச்சிக்கல் நீக்கி, மன உளைச்சலை சரிசெய்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், புத்துணர்ச்சியையும் தரும் இலந்தைப்பழம்.

பயணங்களில் ஏற்படும் வாந்தி:

பயணங்களில் ஏற்படும் வாந்தி:

குழந்தைகள் முதல் பெரியோர் வரை சிலருக்கு பேருந்துப் பயணத்தில் உடல் குலுங்குவதால், வயிற்றின் செரிமான ஆற்றல் பாதிக்கப்பட்டு, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி ஏற்படுகிறது. ஓடும் பேருந்தில் ஏற்படும் இந்த உபாதைகள், அவர்களுக்கு மட்டுமன்றி, அருகில் அமர்ந்திருப்பவரகளையும் முகம் சுளிக்கவைக்கும்.

இந்த பாதிப்புகளில் இருந்து இவர்களை பாதுகாப்பது, இலந்தை அடைதான். வாந்தி, தலை சுற்றல் பாதிப்பு உள்ளவர்கள், தவிர்க்க முடியாத நிலையில் பேருந்து பயணம் செய்ய நேர்கையில், இலந்தைப்பழத்தையோ அல்லது இலந்தை அடையையோ வாயில் இட்டு அடக்கிக்கொண்டு, அதன் சாற்றை மட்டும் அவ்வப்போது, உமிழ்நீருடன் கலந்து விழுங்கிவரும்போது, உடலில் செரிமானமின்மை பாதிப்புகள் அகன்று, வயிறு இயல்பான நிலையை அடையும். இதன்மூலம், வாந்தி இல்லாத பயணத்தை வெற்றிகரமாக, நிறைவுசெய்த நிம்மதி அவர்கள் முகத்திலும் தெரியும்.

இலந்தை வடை :

இலந்தை வடை :

இலந்தை அடை என்பது, இலந்தைப்பழங்களின் சதைப்பகுதிகளை அதன் கொட்டைகளுடன் சேகரித்து, நிழலில் உலர்த்தி, புளி, காய்ந்த மிளகாய், உப்பு அத்துடன் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து இதமான சூட்டில் அடுப்பில் வைத்து கிளரிவர, பாகு பதத்தில் இவை வரும்போது இறக்கி, சூடு ஆறியதும், சிறிய தட்டைகளைப்போல, கைகளால் தட்டி மீண்டும், நிழலில் உலர்த்துவர், அதன்பின் அவற்றை பூவரச இலைகளில் சுற்றி சிறிய பாலித்தீன் பைகளில் அடைத்து விற்பர். புளிப்பும் இனிப்பும் கலந்த இலந்தை அடையின் சுவை, சுவைப்பவர்களுக்கு பஞ்சாமிர்தம் போல, இனிக்கும்.

சர்க்கரை அளவை குறைக்கும் இலந்தை.

சர்க்கரை அளவை குறைக்கும் இலந்தை.

சர்க்கரை பாதிப்புகளை விளையாட்டு போல, குணமாக்கும் ஆற்றல்மிக்கது, இலந்தை. பத்து பதினைந்து இலந்தைப் பழங்களை தினமும் வெறுமனே சுவைத்து சாப்பிட்டுவர, அச்சம் அளித்த உடலின் சர்க்கரை அளவு ஆச்சரியப்பட வைக்கும் அளவில் குறைந்து விடும். சரியான அளவில் இரத்தத்தில் சர்க்கரை அளவு வந்ததும், உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், சர்க்கரை பாதிப்பை நீக்கி, உடல் நலம் பெறமுடியும்.

சர்க்கரையால் வரும் பாதிப்புகளுக்கு :

சர்க்கரையால் வரும் பாதிப்புகளுக்கு :

இலந்தை, உடலில் பித்தம் எனும் சூட்டை சரியாக்கி, இன்சுலின் சுரப்பை அதிகரித்து, உடலின் சர்க்கரை அளவை இரத்தத்தில் சீராக்குகிறது. அத்துடன் சர்க்கரை பாதிப்பால் உடலில் ஏற்படும், சோர்வு, உடல் கைகால் வலிகளையும் போக்கி விடுகிறது, வெறுமனே இலந்தைப் பழங்களை சாப்பிட, தொண்டை கமருவது போல உணர்பவர்கள், சிறிது மிளகுத்தூளையும் உப்பையும் கலந்து சாப்பிட்டு வரலாம்.

மாதாந்திர வலியைப்போக்கும் :

மாதாந்திர வலியைப்போக்கும் :

சில பெண்களுக்கு, மாதாந்திர விலக்கின் சமயத்தில், கடுமையான வயிற்றுவலி ஏற்படும், இந்த வலி அவர்களுக்கு பெரிதும் துன்பங்களைத் தந்து, படுக்கையில் முடக்கி விடும், படுத்தாலும், தீராத வலியால் துடிப்பர்.

இந்த பாதிப்புகள் தீர, இலந்தை இலை, மிளகு மற்றும் பூண்டு இவற்றை நன்கு அம்மியில் இட்டு அரைத்து, அதை உருண்டையாக்கி விழுங்கி விட, துடிக்க வைத்த வயிற்று வலிகள் எல்லாம் வினாடியில் மாயமாகி, நிம்மதி அடைவர். மேலும், அந்த சமயத்தில் ஏற்படும் தலைவலியும் நீங்கிவிடும்.

விரைவில் தாய்மையடைய வைக்கும் :

விரைவில் தாய்மையடைய வைக்கும் :

இலந்தை இலை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்த விழுதை சாப்பிட்டு வர, குழந்தைப்பேறடைய முடியாத, கருப்பை பாதிப்பு உள்ள பெண்களின் கருப்பையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கருப்பையை வளமாக்கி, கருவை உருவாக்கும் ஆற்றலை ஏற்படுத்துகிறது.

கை கால் வியர்வை பாதிப்பை போக்க.

கை கால் வியர்வை பாதிப்பை போக்க.

சிலருக்கு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் எப்போதும் வியர்வை இருந்துகொண்டே இருக்கும், இதனால், ஷூ அணியும் நேரங்களில், கால்களில் இடும் சாக்ஸ், துர்நாற்றம் அடிக்கும் நிலை ஏற்படும், இந்த பாதிப்பை நீக்கும் வல்லமை கொண்டது, இலந்தை.

வியர்வை துர் நாற்றம் :

வியர்வை துர் நாற்றம் :

இரவு உறங்கும் நேரங்களில், இலந்தை இலைகளை நன்கு அரைத்து, இரு உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் தடவிக் கொண்டு, காலையில், குளிக்கும் நீரில் இலந்தை இலைகளை இட்டு, சூடாக்கி குளித்து வர, கை கால்களில் ஏற்படும் வியர்வை மற்றும் வியர்வை துர்நாற்றங்கள், முழுமையாக விலகி விடும்.

இதுபோலவே, கை அக்குள்களில் ஏற்படும் நாற்றத்தைப் போக்கவும் இலந்தை இளைச்சாற்றைப் பயன்படுத்தலாம்.

வயிற்றுக்கடுப்பு எனும் சூட்டு வலி நீங்க

வயிற்றுக்கடுப்பு எனும் சூட்டு வலி நீங்க

இலந்தை இலைகளை அரைத்து, தினமும் இருவேளை தயிரில் கலந்து பருகிவர, சூட்டினால் உண்டாகும் வயிற்றுக் கடுப்பு மற்றும் சீத பேதி குணமாகும்.

தலை முடி உதிர்தலை கட்டுப்படுத்த :

தலை முடி உதிர்தலை கட்டுப்படுத்த :

இலந்தை இலைகளை நன்கு அரைத்து சாறெடுத்து, தலையில் முழுவதும், முடி கொத்தாக உதிர்ந்த இடங்களிலும் தேய்த்து, ஊற வைத்து சிறிது நேரம் கழித்து, குளித்து வர, தலைமுடி உதிர்தல் நின்று, முடி கொத்தாக உதிர்ந்த இடங்களில் விரைவில், முடி வளர ஆரம்பிக்கும்.

பசியின்மை போக்க.

பசியின்மை போக்க.

இலந்தை மரத்தின் பட்டையை எடுத்து, சிறிது சூடான நீரில் கலக்கி இரவில் தினந்தோறும் பருகி வர, பசியின்மை கோளாறு நீங்கி, நன்கு பசியெடுக்க ஆரம்பிக்கும்.

இலந்தை தேநீர்.

இலந்தை தேநீர்.

வெளிநாடுகளில், இலந்தையில் இருந்து செய்யப்படும் தேநீர், பிரசித்தமானது. இந்தத் தேநீர், இரத்தத்தை சுத்திகரித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும் புத்துணர்வையும் ஊட்டுவதால், பலர் இலந்தைத் தேநீரைப் பருகி, நலமடைகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

health benefits of Jujuba fruit to prevent diabetes and Uterus disorders

health benefits of Jujuba fruit to prevent diabetes and Uterus disorders
Subscribe Newsletter