வலிகளை போக்கும் நிவாரணியாக செயல்படும் சக்தி வாய்ந்த அதிவிடயம் கேள்விப்பட்டிருக்கீங்களா?

Posted By: Gnaana
Subscribe to Boldsky

தமிழகத்தின் பாரம்பரிய சித்த மருத்துவம், பல மூலிகைகளைப் பயன்படுத்தி அவற்றின் இலைகள், கனிகள், மலர்கள், வேர்கள் மற்றும் மரப்பட்டைகளை அடிப்படையாகக் கொண்டு, பல செய்முறைகளில், மனிதர்களின் வியாதிகளுக்கு நிவாரணம் தந்து வருகிறது. இதே போல நமது நாட்டின் இதர பகுதிகளில், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளில் பல்வேறு மூலிகைகள் உபயோகப்படுத்தப் பட்டாலும், சித்த வைத்தியத்தில் உபயோகிக்கப்படும் சில மூலிகைகள் மற்ற மருத்துவ முறைகளிலும் அதே குண நலன்களுக்காக, பயன்படுத்தப்படுவது அரிது, அப்படி பயன்படும் ஒரு அரிய மூலிகைதான், அதிவிடயம்.

பெயரே சிலருக்கு, வினோதமாகத் தோன்றும், கிராமங்களில் பேச்சு வழக்கில், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை, விடயம் என்பர், அது போல, ஆற்றல் மிக்க பல்வேறு பயன்களை, தன்னகத்தேக் கொண்ட மூலிகையாக விளங்குவதால், அதி விடயம் என்றே, இந்த மூலிகையை அழைக்கின்றனர்.

மலைப்பகுதிகளில் அதிக அளவில் வளரும் குருஞ்செடியான அதி விடயம், அளவில் பெரிய இலைகளையும், நீல வண்ணத்தில் மிளிரும் மலர்களையும் கொண்டது. வெண்ணிற சதைப் பற்றைக் கொண்ட, அதி விடயத்தின் சாம்பல் வண்ண வேர்களே, மிக்க மருத்துவப் பலன்களைத் தருவதாகத் திகழ்கின்றன.

அதி விடயத்தின் வேர்கள், செரிமானத்தை ஊக்குவிக்கும், உடலை வலுவாக்கும் சுவாச பாதிப்புகளான குரல் கம்முவது, சளி, போன்ற பாதிப்புகளை சரிசெய்யும். தாம்பத்திய வாழ்வை சிறக்கச்செய்யும் தன்மை மிக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகளுக்கு உண்டாகும் பாதிப்புகளுக்கு :

குழந்தைகளுக்கு உண்டாகும் பாதிப்புகளுக்கு :

சிறுவர்களின் ஜலதோஷம், ஜுரம் மற்றும் வாந்தி போன்ற கோளாறுகளை சரிசெய்து, அவர்களின் உடல்நிலையை சீராக்க வல்லது.சித்த மருத்துவத்தில், உடல் சூடு சார்ந்த ஜுரம், பேதி, சளித் தொல்லை மற்றும் செரிமானக் கோளாறுகள் உள்ளிட்ட பாதிப்புகளைப் போக்குவதில், அதிக அளவில் பயன்படுகிறது.

பசியின்மையை போக்க ;

பசியின்மையை போக்க ;

அதி விடயத்தோடு தேன் சேர்த்து, இருமல் மற்றும் வயிற்றுப் போக்கை சரி செய்யும் மருந்தாகவும், அதி விடயத்தை நீரில் இட்டு காய்ச்சி, வயிற்று வலியைப் போக்கும் மருந்தாகவும், உணவு செரிக்காமல் ஏற்படும் பசியின்மையைப் போக்கும் மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்.

விட்டு விட்டு வரும் ஜுரத்தைப் போக்கும் :

விட்டு விட்டு வரும் ஜுரத்தைப் போக்கும் :

அதி விடய வேர்களை நன்கு அரைத்து பொடியாக்கி, அந்தப் பொடியை, சிறிது தேனில் குழைத்து ஓரு மணிக்கொரு தடவை பருகி வர, விட்டு விட்டு வரும் ஜுரம், விலகும்.

இதில் பாதி அளவாக, தினமும் மூன்று வேளை தேனில் குழைத்து பருகி வர, ஜுரம் விட்ட பின் உடலில் தோன்றும் அசதி மறையும், உடல் நலமாகும்.

சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கிற்கு :

சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கிற்கு :

அதி விடய சூரணத்தை சிறிது எடுத்துக் கொண்டு, தேனில் குழைத்து பருக, உடல் சூட்டினால் ஏற்பட்ட பேதி எனும் வயிற்றுப் போக்கு சரியாகி விடும்.

மூலம் மற்றும் மூல வலிகளைப் போக்க

மூலம் மற்றும் மூல வலிகளைப் போக்க

அதி விடய சூரணத்தை, தேனில் குழைத்து, தினமும் இரு வேளை பருகி வர, மூல வியாதிகளினால் ஏற்பட்ட எரிச்சல், வலி போன்ற பாதிப்புகள் மறைந்து, மூல பாதிப்புகள் படிப்படியாக நீங்கும்.

 அதி விடயத் தேநீர்.

அதி விடயத் தேநீர்.

சிலருக்கு ஜுரத்துடன் வயிற்றுப்போக்கும் மிகுதியாக இருக்கும், இதனால், உடலில் உள்ள நீர்ச் சத்துக்கள் வறண்டு, அவர்கள் உடல் சோர்ந்து, பலகீனமாகி விடுவர். இந்த பாதிப்பை சரிசெய்ய,

அதி விடயம் வேர், சுக்கு, கோரைக் கிழங்கு மற்றும் சீந்தில் கொடி இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி, இடித்து, பொடியாக்கி, அரை லிட்டர் தண்ணீரில் இட்டு நன்கு காய்ச்சி, மூன்றில் ஒரு பங்காக நீர் வற்றியதும், அந்த நீரை தினமும் மூன்று வேளை பருகி வர, உடலை பலகீனமாக்கிய பேதி நின்று விடும்.

அத்துடன் ஜூரமும் விலகி விடும். மேலும் ஜுரம், வயிற்றுப் போக்கு உள்ளவர்களுக்கு, சளி பாதிப்பும் இருந்தால், இந்த மருந்துகளுடன் திப்பிலியையும் சேர்த்து பொடியாக்கி, பயன்படுத்த, சுவாச பாதிப்புகள், சளித் தொல்லை போன்றவை நீங்கிவிடும்.

வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு :

வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு :

சிலருக்கு வயிற்றுவலி காரணமாக அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றும், மற்றும் சிலருக்கு வயிற்றுவலியுடன் வயிற்றுப் போக்கும் ஏற்படும். இவர்களின் பாதிப்புகள் விலக,

அதி விடயம் வேர், மர மஞ்சள் துண்டுகள், கடுக்காய்ப் பூ, சிறுநாகப் பூ, சடா மஞ்சில் மற்றும் போஸ்தக் காய் எனும் அபின் செடிகளின் காய் இவற்றை உலர்த்தி அரைத்துத் தூளாக்கி, அரை லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, மூன்றில் ஒரு பங்காக சுண்டியதும், இதில் சிறிதளவு எடுத்து, மூன்று வேளை தொடர்ந்து பருகி வர, வலிகள் தந்த வயிற்றுப் போக்கு விலகி விடும்.

பிரசவித்த மகளிருக்கு அநேக நன்மைகள் தரும் :

பிரசவித்த மகளிருக்கு அநேக நன்மைகள் தரும் :

அதி விடயம், மஞ்சள், ஓமம், சித்தரத்தை, திப்பிலி, சுக்கு, முக்காள வேர், இஞ்சி, கண்டந் திப்பிலி, ஏலக்காய், ஜாதிக்காய், கடுகு, மிளகு, கொத்த மல்லி, ஜீரகம், மிளகு, இலவங்கப் பட்டை, பரங்கிப் பட்டை, கசகசா, சிறுநாகப் பூ, பெருங்காயத் தூள் மற்றும் நாட்டு சர்க்கரை.இவற்றை உலர்த்தி பொடித்து, நிழலில் காயவைத்து, உரலில் இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

தாய்ப்பால் அதிகரிக்கும் :

தாய்ப்பால் அதிகரிக்கும் :

இதில் சிறிது எடுத்து தேன் கலந்து, நெய்யை ஊற்றி சிறு உருண்டைகளாகப் பிசைந்து, தினமும் ஒரு உருண்டை என்ற அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வர, பிரசவித்த தாய்மார்களின் உடலில் இரத்தம் ஊறி, உடலில் சக்தி அதிகரிக்கும். தாய்ப்பால் வளமாகும். இதன்மூலம், அவர்களின் உடல் நலம் ஆற்றல் பெற்று, வலுவாகும்.

அதிக விலை காரணமாக, அதி விடய வேர்களில், மற்றதைக் கலந்து கலப்படம்.

அதி விடயம் அரிதான ஒரு மூலிகை என்பதாலும், அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுவதாலும், உள் நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு, இதன் வேர்கள், கிலோ ஐந்தாயிரம் ரூபாய் என்ற அளவில் விற்பனையாகின்றன.

வலி நிவாரணி :

வலி நிவாரணி :

ஆயுர் வேதம் மற்றும் மேலை மருத்துவத்தில், உடலில் தோன்றும் கை கால் மூட்டு வலி, கழுத்து வலி, இடுப்பு வலி, கால் வலி என்று பல் வேறு வலிகளுக்கு நிறைய வலி நிவாரணி மருந்துகள் செய்யப்படுகின்றன, இந்த வலி நிவாரணி மருந்துகளில் முக்கியமாக இடம் பிடிப்பவை, அதி விடயம் வேராகும். ஆனால், அதி விடய வேரின், அதிக விலையின் காரணமாக, இந்த வலி நிவாரணி மருந்துகளைத் தயாரிக்கும் எந்த மருந்து நிறுவனமும், இந்த வேரை, தங்கள் மருந்துகளில் சேர்ப்பதில்லை.

சில மருந்து நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில், கிடைப்பதற்கு அரிதான அதி விடய வேருக்குப் பதிலாக, எளிதில் கிடைக்கும் கோரைக் கிழங்கை சேர்க்கின்றன. ஆயினும் அதி விடயம் இல்லாத எந்த வலி மருந்தும், அதி விடயத்துக்கு பதிலாக வேறு எந்த மூலிகை சேர்த்தாலும், அந்த மருந்து, உடல் வேதனைகளுக்குத் தீர்வுகள் தராது என்பதே, உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Functions of Indian Atees as a pain killer to get rid of pain

Functions of Indian Atees as a pain killer to get rid of pain
Story first published: Monday, December 4, 2017, 16:40 [IST]