தீராத சரும நோய்களையும் குணப்படுத்தும் அற்புத மூலிகையான தகரைச் செடியின் நன்மைகள்!!

Posted By: Gnaana
Subscribe to Boldsky

தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் சிறுசெடிகளில் ஒன்று, தகரை. ஊசித்தகரை, யானைத்தகரை, கருந்தகரை மற்றும் வேந்தக்ரை என்று பல்வேறு வகைகளில் தகரைச்செடிகள் காணப்பட்டாலும், அவற்றின் பயன்கள் யாவும் ஒன்றேயாகும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும், மலச்சிக்கலைப் போக்கும், உடல் சரும வியாதிகளை விரட்டும் தன்மைகள் கொண்டது, தகரைச்செடிகள்.

முருங்கை இலைகள் போன்ற தோற்றம்கொண்ட இலைகள்,சிறிய இளமஞ்சள் வண்ண மலர்கள், இலேசான நீண்ட தட்டைப் பயிறு போன்ற, காய்களைக் கொண்ட தகரைச் செடிகள், மருத்துவ குணமிக்கவை.

இவற்றின் இலைகள்,விதைகள் மற்றும் வேர்கள் மிக்க மருத்துவப் பலன்கள் தர வல்லவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும வியாதிகளைப் போக்கும் தகரை:

சரும வியாதிகளைப் போக்கும் தகரை:

சரும வியாதிகள் எப்போதும் மனவேதனைகளை அளிக்கக்கூடியவை. அவை கைகளில், கால்களில், உடலில் வந்துவிட்டால், அவை குணமாகும் வரை, அதே நினைவில், எப்படி இந்த பாதிப்பை சரிசெய்வது, வேறு என்ன வைத்தியம் இருக்கிறது, என்று காணும் எல்லோரிடமும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள், சரும பாதிப்புகளை அடைந்தவர்கள் எல்லோரும்.

உள்ளாடைகளினால் வரும் அலர்ஜி :

உள்ளாடைகளினால் வரும் அலர்ஜி :

சில பெண்களுக்கு, உள்ளாடைகள் இறுக்கமாக அணிவதால், அவர்களின் இடுப்பில் வியர்வை பாதிப்பால், படை வியாதி உண்டாகும்.

பெண்கள் இந்த பாதிப்புகளை வெளியில் சொல்ல சங்கடப்பட்டுக் கொண்டு, யாரிடமும் கூறாமல் விட்டுவிடுவார்கள். காலப்போக்கில், இதுவே படர் தாமரை போல உடலெங்கும் பரவிவிடும் தன்மைமிக்கது. அந்த சமயத்தில்தான், அதன் பாதிப்பை, அதிகம் உணர்வார்கள்.

இதுபோன்ற சரும பாதிப்புகளை, சரிசெய்யும் ஆற்றல் தகரை இலைகளுக்கு உண்டு.

சில தகரை இலைகளைப் பறித்துக்கொண்டு, அதை எலுமிச்சைச் சாற்றில் நன்கு மையாக அரைத்து, தினமும் குளிக்குமுன் பெண்கள், இந்த விழுதை, படர் தாமரை மற்றும் படைகள் வந்த இடங்களில் மென்மையாகத் தடவி, சற்றுநேரம் கழிந்தபின்னர் குளித்துவரவேண்டும்.

இதுபோல, சில நாட்கள் தொடர்ந்து தகரை இலைகளை அரைத்து சரும பாதிப்புகளின் மீது தடவிவர, நெடுநாள் உடலில் இருந்து மன உளைச்சல் கொடுத்துவந்த, உடல் சரும பாதிப்புகள் விலகிவிடும்.

இந்த விழுதை உடலில் தடவும் சமயத்தில் மட்டும், தோலில் கொஞ்சம் எரிச்சல் காணப்படும், பின்னர் சரியாகிவிடும்.

தகரை இலைகளைப் போல தகரை வேர்களைக்கொண்டும், எலுமிச்சை சாற்றில் அரைத்து, படை தேமல் போன்ற சரும பாதிப்புகளின் மேல் தடவி வர, சரும வியாதிகள் விலகும்.

சிறுவர்களின் சொறி, சிரங்கு பாதிப்புகள் விலக..

சிறுவர்களின் சொறி, சிரங்கு பாதிப்புகள் விலக..

இப்போதெல்லாம், வீடுகளில் சிறுவர்கள் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவதே, அபூர்வம் என்றாகிவிட்டது, பள்ளி விட்டு வந்ததும், கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் இருக்கிறது, பிள்ளைகளின் விளையாட்டு உலகம்.

அதுபோலத்தான், கிராமங்களும் மாறிவருகின்றன.ஆயினும் பள்ளி விட்டு வந்ததும், புத்தகப்பைகளை வீடுகளில் சேர்த்துவிட்டு, மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து தெருக்களில் விளையாடும் சிறுவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்கள் விளையாட்டு ஆர்வத்தில், தெருவில் உள்ள புழுதி, மண் எல்லாம் தங்கள் மீது படிவத்தை உணராமல் இருப்பார்கள். இதனால், காலப்போக்கில், அவர்கள் உடலில், புழுதிக்காற்றில் உள்ள நச்சுத் தொற்றுக்களாலும், உடலில் ஏற்படும் சூடுகளின் காரணமாகவும், உடலில் சிறு கொப்புளங்கள் தோன்றும். அவற்றின் அரிக்கும் தன்மைகள் காரணமாக, சிறுவர்கள் அந்தக்கொப்புளங்களை, சொறியும்போது, அவை உடைந்து, அதன் காரணமாக சிரங்குகளாக மாறிவிடுவதும் உண்டு. இதனால், அவர்கள் சிரங்குகளின் வலியில் வேதனையடைவார்கள்.

இந்த பாதிப்பை சரிசெய்ய, தகரை விதைகளை, மோரை விட்டு அரைத்து, சிரங்குகளின் மேல் தடவி வர, சிரங்குகள் மற்றும் நெடுநாள் காயங்கள் ஆறிவிடும். மேலும் இந்த விழுது, படை,தேமல் போன்ற சரும பாதிப்புகளையும் குணமாக்கும்

காயங்கள் ஆற :

காயங்கள் ஆற :

மேலும், தகரை இலைகளை சிறிது பறித்து, அவற்றைக் காய்ச்சி, காய்ச்சிய மூலிகை நீரை, சிரங்கு மற்றும் சொறி போன்ற சரும பாதிப்புகளின் மீது மெதுவாக ஊற்றி, நன்கு அந்தக் காயங்களை அலசிவிட்டு, அதன் பின், தகரை இலைகளை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, சிரங்குகளின் மேல் தடவி வர, வேதனை கொடுத்துவந்த, சிரங்குகள் மற்றும் சொறி போன்ற சரும பாதிப்புகள் எல்லாம் விலகிவிடும்.

 வாயுப்பிடிப்பு, கட்டிகள் :

வாயுப்பிடிப்பு, கட்டிகள் :

சிலருக்கு, உடலில் சேர்ந்த வாயுக்கள் அல்லது வாயு மிகுந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டதன் விளைவாக, இடுப்பு மற்றும் முதுகில் வாயுப்பிடிப்பு ஏற்படும். அதேபோல, உடல் சூட்டால் சிலருக்கு, கட்டிகள் மற்றும் வீக்கங்கள் ஏற்படலாம்.

இதுபோன்ற பாதிப்புகளை சரிசெய்ய, தகரை இலைகளை நீரிட்டு அரைத்துக்கொண்டு, அந்த விழுதை, சிறிய வாணலியில் இட்டு, இதமான சூட்டில் வைத்து, சற்று வெந்ததும், உடல் பொறுக்கும் சூட்டில் அந்தக் கலவையை, உடலில் தோன்றிய வாயுப்பிடிப்புகளின் மேல் தடவி வர, பாதிப்புகள் நீங்கி, உடல் நலமாகும்.

இதேபோல, சூட்டினால் உண்டான கட்டிகள் மற்றும் வீக்கங்களின் மேல் தடவி வர, அவை யாவும் விரைவில் குணமாகிவிடும்.

குழந்தைகளின் ஜுரம் தணிய :

குழந்தைகளின் ஜுரம் தணிய :

பல் முளைக்கும் காலங்களில் குழந்தைகள் துருதுருவென இருக்கும், அந்த நேரங்களில் கவனமாகப் பார்த்துக்கொள்ளாவிட்டால், அவை கைக்கு கிடைக்கும் பொருட்களை எல்லாம் வாயில் வைத்துவிடும். இதன் காரணமாக வயிறு பாதிப்புகள், பசி இல்லாதிருத்தல் மற்றும் ஜுரம் போன்ற உடல் நல கோளாறுகள் ஏற்பட்டு, குழந்தைகள் சோர்வடைந்து விடுவார்கள்.

இத்தகைய பாதிப்புகளை சரியாக்க, சிறிது தகரை இலைகளை சிறிதுசிறிதாக நறுக்கிக்கொண்டு, அதை அரை லிட்டர் தண்ணீரில் இட்டு, நன்கு சுண்டக்காய்ச்சி, அந்த நீரை, குழந்தைகளுக்கு சிறிது புகட்டிவர, குழந்தைகளுக்கு ஏற்பட்ட ஜுரம் விலகும்.

 வயிற்றுப் புழுக்களுக்கு :

வயிற்றுப் புழுக்களுக்கு :

குழந்தைகளின் வயிற்றில் ஏற்பட்ட புழுக்கள் மற்றும் பூச்சிகள் அழிந்து, வயிற்றுப் பாதிப்பு , செரிமானமின்மை மற்றும் வயிற்றுப்பூச்சிகளால் உணவில் நாட்டம் இல்லாத நிலையில் இருந்த குழந்தைகள் எல்லாம், நன்கு பசியெடுத்து, சாப்பிடுவார்கள்.

தொழுவியாதிப் புண்கள் குணமாக ;

தொழுவியாதிப் புண்கள் குணமாக ;

கள்ளியின் சாறெடுத்து, அதில் தகரை விதைகளைக் கலந்து ஊறவைத்து, சிறிது கோமியத்தில் அரைத்து, அந்த விழுதை, நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயங்கள், தொழுவியாதிப் புண்கள் மற்றும் சருமத்தில் ஏற்படும் படர்தாமரை, படை கட்டிகள் போன்றவற்றின் மீது, இதமாகத் தடவி வர, அவையெல்லாம், விரைவில் குணமாகிவிடும்.

விளக்கெண்ணெயுடன் :

விளக்கெண்ணெயுடன் :

தகரை இலைச்சாற்றுடன் விளக்கெண்ணை சேர்த்து, தைலம் போல காய்ச்சி, உடலில் ஏற்பட்ட புண்கள் மீது தடவி வர, புண்கள் விரைவில் ஆறிவிடும்.

 மலச்சிக்கலுக்கு :

மலச்சிக்கலுக்கு :

பல்வேறு நன்மைகள் தரும் தகரை இலைகளை, அகத்திக்கீரை போல, இலைகளை சமைத்து, சாறாக உணவில் சேர்த்து வரலாம். இலைகளை துவையல் போல அரைத்தும் பயன்படுத்தலாம்.

மலச்சிக்கல் பாதிப்புள்ளவர்கள், தகரை இலைகளை வதக்கி, பொரியல் போல, சாதத்தில் சேர்த்து உண்டுவந்தால், குடல் சுத்தமாகி, மலம் வெளியேறி, உடல் நலமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cassia Tora - A magical herb to treat for Skin diseases

Cassia Tora - A magical herb to treat for Skin diseases
Story first published: Wednesday, December 27, 2017, 12:30 [IST]