For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீமைக் கருவேல மரம், கருவேல மரம்- ரெண்டில் எது ஆபத்து?

கருவேல மரத்தின் ஆரோக்கிய நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Gnaana
|

ஒருவரைப் போல மற்றொருவர் இருந்தால், அதுவும் அந்த மற்றொருவர் தனது மோசமான நடவடிக்கைகளால் மக்களை துன்புறச் செய்தால், அதன் விளைவுகள் எல்லாம், முதலாமவருக்கு போகும், எல்லோரும் அவரைத் திட்டுவார்கள், நான் அவனில்லை! என்று சொன்னால், இன்னும் கூடுதலாக வசை கிடைக்கும், இப்படி ஒரு நிலை மனிதர்களுக்கு தான், என்றில்லை, இயற்கையைக் காக்கும், மனிதனைக் காக்கும் மரம், செடி, கொடி போன்ற தாவர வகைகளுக்கும் உண்டு.

தன்னைப்போலவே, இருந்து சமூகத்திற்கு பாதிப்பைக் கொடுக்கும் மற்றொரு மரமும் இருப்பதால், அதுபோல ஒரு பாதிப்பை அடைந்துவரும் மரம்தான், பழமையான கருவேல மரம்.

கருவேல மரம், தொன்மையான மரம் என்பதற்கு நிறைய மருத்துவ நூல்களில் அதன் நற்பயன்கள் எடுத்துரைக்கப்பட்டிருந்தாலும், பேச்சு வழக்கில் பண்டைக்காலம் தொட்டு இன்று வரை பேசப்படும் பழஞ்சொல்,

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி"

ஆல், ஆலமரக் கிளையை ஒடித்து, அதைக் கொண்டு பல் துலக்கி வர, பல் வலி மற்றும் பல் சம்பந்தமான அனைத்து பாதிப்புகளும் விலகும் என்றனர், பெரியோர். இதைப்போல அவர்கள் சொன்ன மற்றொரு மரம், கருவேல மரம்.

கருவேல மரத்தின் கிளைகளையும் உடைத்து, பல் துலக்கி வர, பல் பாதிப்புகள் விலகும் என்றனர். சிலர், வேல் என்றால் வேப்ப மரம் என்று எண்ணிக் கொண்டு, வேப்பங்குச்சிகளால், பல் துலக்கி வருவார்கள். அதுவும் நன்மைதான், கெடுதல் இல்லை, ஆயினும், இந்த பழஞ்சொல் குறிப்பிட்டது, ஆல மரத்தையும், கருவேல மரத்தையும் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல் பிரச்சனையே வராது :

பல் பிரச்சனையே வராது :

கருவேல மரத்தின் உறுதித்தன்மை, அதில் நிறைந்துள்ள தாதுக்கள் மற்றும் உயிர்மச் சத்துக்கள், பல் துலக்கும்போது, வாயில் செயலாற்றி, பல் ஈறு வலி, பல் ஆடுவது, பல் கூச்சம் போன்ற பல் கோளாறுகளை சரி செய்யும் தன்மை மிக்கது.

கருவேல மரத்திற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு :

கருவேல மரத்திற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு :

கருவேல மரத்தையும், இடையில் வந்த சீமைக் கருவேல மரத்தையும் மக்கள் ஒன்றென எண்ணிக் குழம்பிக்கொள்ள காரணம், அவை தோற்றத்தில் ஒன்று போல இருப்பதே. ஆயினும், இரண்டும் வெவ்வேறு தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது, உருவத்தில் மட்டும்தான் ஒற்றுமையே தவிர, செயலில், நற்பலன்களில் கருவேல மரமே, சிறந்தது. சீமைக்கருவேல மரம், அடுப்பெரிக்க மட்டுமே, பயன்படும்.

கருவேல மரங்கள்:

கருவேல மரங்கள்:

தேசத்தின் பாரம்பரிய மரங்களில் ஒன்று,, கருவேல மரம். பெரும்பாலும், செம்மண் நிலங்களில் வளரும் தன்மையுள்ளது, ஆயினும் தற்காலங்களில், எல்லா வகை இடங்களிலும், வளர்கிறது.

தனி மரங்களாக வளராமல், ஒரு குடும்பம் போல, கூட்டாக வளரும் இயல்புடைய கருவேல மரங்கள், வயல்வெளிகள், தோட்டங்களில் வேலியை க் காக்கும் மரங்களாக வளர்ந்திருப்பதை, நாம் கண்டிருக்கலாம். சிறிய வடிவிலான இலைகள் மற்றும் இல மஞ்சள் வண்ண பூக்களுடன் திகழும் கருவேல மரங்களின் காய்கள் அவரைக்காய் போல நீண்ட பட்டையான தோற்றத்தில் இருக்கும் சிறிய முடிகள் நிறைந்தவை.

உறுதியான மரம் :

உறுதியான மரம் :

காற்றடிக்கும் காலங்களில், காய்ந்த காய்களின் உள்ளிருக்கும், விதைகளின் சத்தம் காற்றில், எழுப்பும் ஒலி, சலங்கை ஒலி போல ஒலிப்பதை, இந்த மரங்களை நாம் கடந்து செல்கையில் கேட்க முடியும். மிகவும் உறுதியான வைரம் பாய்ந்து காணப்படும் இந்த மரங்களின் பாகங்கள் விவசாயப் பொருட்கள் தயாரிப்பில் பயனாகின்றன.

கால் நடை உணவு :

கால் நடை உணவு :

கருவேல மரத்தின் இலைகள் மற்றும் காய்கள் கால்நடைகளுக்கு சிறந்த உணவாகிறது. கருவேல மரத்தின் இலைகள், காய்கள், மரப்பட்டைகள் மற்றும் பிசின் அதிக மருத்துவப் பயன்கள் மிக்கவை. இரும்புச்சத்து, மற்ற தாதுக்கள், வைட்டமின்கள் இவற்றுடன் வாலைன், தெரோனின் மற்றும் லைசின் போன்ற அமினோ அமிலங்களும் மிகுந்து காணப்படுகின்றன.

மன நலத்திற்கும் நன்மை :

மன நலத்திற்கும் நன்மை :

கருவேல மரம், பல் வலி பாதிப்புகளுக்கு மட்டுமல்ல, ஆண்களின் மகப்பேறின்மை பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகிறது உயிரணுக்களின் ஆற்றலை மேம்படுத்தி, உடல் நலத்தையும், மன நலத்தையும் காக்கும் சிறப்பு மிக்கது, கருவேலம் பட்டைகள் மற்றும் அதன் பிசின்.

 உடல் சோர்வு நீங்கும் :

உடல் சோர்வு நீங்கும் :

பேதியைப் போக்கும், சுவாச பாதிப்புகளை சரியாக்கும், கொடிய வியாதிகளையும் போக்கும் வல்லமை மிக்கது, இந்த கருவேல மரம்.

கருவேலம் இலைகளை அரைத்து, சாறெடுத்து, தண்ணீரில் கலந்து பருகி வர, உடல் சூட்டினால் ஏற்பட்ட பேதி மற்றும் வயிற்றுப் போக்கு பாதிப்புகள் விலகி, உடல் சோர்வு நீங்கும்.

இருமல் நிற்கும் :

இருமல் நிற்கும் :

கருவேலம் பிஞ்சு பூக்களை தூளாக்கி, பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட, இருமல் விலகும்.

தொண்டைப்புண் ஆற்றும் :

தொண்டைப்புண் ஆற்றும் :

கருவேலம் பட்டையை தூளாக்கி, அதை சிறிது நீரில் கலந்து, கொதிக்க வைத்து, குடிநீர் போலப் பருகி வர, சுவாசக் கோளாறுகளால், பேசமுடியாமல் தொண்டைக் கட்டிக்கொள்வது, தொண்டைப் புண் பாதிப்புகளை குணப்படுத்தும்.

குழந்தைப் பேறு :

குழந்தைப் பேறு :

கருவேலம் பிசினை காயவைத்து, தூளாக்கி, அதை நெய்யில் கலந்து உண்டுவர, மகப்பேறின்மை பாதிப்புகள் அடைந்த ஆண்களின் உயிரணுக்கள் ஆற்றல் பெற்று, குழந்தைப் பேறு அடைய வாய்ப்பு ஏற்படும்.

கருவேலம் பிசின்:

கருவேலம் பிசின்:

கருவேலம் பிசின் தான், அக்கால சிறுவர்களுக்கு பள்ளி பாட மபுத்தகங்கள் மற்றும் நோட்டுகளுக்கு அட்டை போடும் பிரௌன் தாளை ஓட்டும் பசையாகப் பயன்பட்டது.

கருவேல மரத்தில் இருந்து பிசினை சேகரித்து, அவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி, ஒரு கொட்டாங்குச்சி எனும் தேங்காய் மூடியில் இட்டு வைப்பார்கள். சற்று நேரம் கழித்து, தண்ணீரில் நன்கு ஊறியதால், தைலம் போல இருக்கும் பிசினை அட்டைகளின் ஓர மடிப்பை ஒட்டப் பயன்படுத்துவர் சிறுவர்கள்.

கருவேலம் பற்பொடி!

கருவேலம் பற்பொடி!

இந்தியில் பபூல் என்று அழைக்கப்படும் கருவேல மரத்தின் பட்டைகளில் இருந்து, நாட்டின் பெரிய மருந்து கம்பெனி, அதே பெயரில் ஒரு டூத்பேஸ்ட்டை பல ஆண்டுகளுக்கு முன்னரே, தயாரித்தது.

 ரத்த பாதிப்புகளை சரி செய்யும் :

ரத்த பாதிப்புகளை சரி செய்யும் :

கருவேலம் பட்டைகள் உடல் உறுதியாக வலுவடைய வைக்கவும், இரத்த பாதிப்புகளை சரிசெய்யவும் மருந்தாகிறது. இத்தகைய சக்திமிக்க கருவேலம் பட்டைகளைக் கொண்டு, நாம் வீட்டிலேயே எளிய முறையில் பற்பொடி தயாரிக்கலாம்.

மூன்று மூலிகைகள் :

மூன்று மூலிகைகள் :

கருவேலம் பட்டைகளை உலர்த்தி, தூளாக்கி அத்துடன் கடுக்காய் தூள் அல்லது திரிபலா சூரணம் சேர்த்து நன்கு கலந்து அத்துடன் தூளாக்கிய கிராம்புகளை சிறிது சேர்த்து நன்கு கலக்கி, ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக்கொண்டு, தினமும், இந்தப் பொடியைக்கொண்டு கைகளால் பல் துலக்கி வர, பல் கூச்சம், ஈறு வலி மற்றும் பல் ஆடுவது போன்ற பாதிப்புகள் விலகி, பற்கள் பளிச்சென மின்னும்.

பற்கள் ஜொலிக்க, பளிச்சென மின்ன, கருவேலம் பற்பொடி பயன்படுத்துங்கள்!

உடல் ஆரோக்கியம் பெறுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Acacia Nilotica to get rid of tooth and gum problems

Acacia Nilotica to get rid of tooth and gum problems
Story first published: Wednesday, December 20, 2017, 15:51 [IST]
Desktop Bottom Promotion