உங்களை குளிர்கால நோயிலிருந்து காப்பாற்றும் 5 பொருட்கள் !!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

குளிர்காலம் என்றால் எல்லா வித நோய்களும் ஆரம்பித்துவிடும். சாதரண பூஞ்சை தொற்றிலுருந்து ஆபத்தை தரும் வைரஸ் தொற்று வரை பல நோய்கள் இந்த மழை மற்றும் குளிர்காலத்தில்தான் ஆரம்பிக்கும்.

காரணம் இந்த பருவ நிலை கிருமிகளின் பெருகுவதற்கான சரியான தட்ப வெப்ப நிலையாகும். அதோடு நமது மூளையில் குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு செல்களை உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட ஜீன் செயல்படாமல் இருப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலம் போதிய அளவு செயல்படாது. அதனால்தான் நோய்கள் பாடாய் படுத்துகின்றன.

இந்த சமயத்தில் நாம் சாப்பிடும் உணவுகளால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டும் வகையில் இயக்க முடியும். அதோடு சில மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளை அன்றாடம் சேர்த்துக் கொண்டால் நோயற்ற பருவமாக இந்த மழை மற்றும் குளிர்காலத்தை கடந்துவிடமுடியும். அந்த மூலிகைகள் என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசி :

துளசி :

சுவாச பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் இந்த பருவத்தில் அதிகம் இருக்கும். துளசியை சில இலைகள் பறித்து தே நீர் தயாரித்து குடியுங்கள். அல்லது வெறுமனே சாப்பிட்டாலும் எந்த வித கிருமிகளும் உங்களை தாக்காது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். நோய் எதிர்ப்பு செல்கள் படை போல ரத்தத்தில் திரண்டு, உங்களை கிருமிகள் தாக்காதவாறு புடை சூழும்.

திரிபலா :

திரிபலா :

மூன்று சூரணங்கள் கலந்தவைதான் திரிபலா. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் . இந்த மூன்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தவை. குடல் இயக்கத்தை தூண்டுகின்றன. இந்த பருவத்தில் ஜீரண மண்டலங்கள் மந்தமாக வேலை செய்யும். போதிய அளவு ஜீரணம் நடை பெறாது. இந்த சமயதில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் திரிபலா சூரணம் 1 ஸ்பூன் கலந்து குடித்தால், ஜீரணம் துரிதமாக நடைபெறும். நச்சுக்கள் வெளியேறிவிடும். சுறுசுறுப்பை தரும்.

சீந்தில் இலை :

சீந்தில் இலை :

இது நோய் எதிர்ப்பு செல்களை தூண்டுகின்றது. அடிக்கடி நோய் வாய்படுபவர்கள் இந்த மூலிகைப் பொடியை 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும். அதோடு வெள்ளையணுக்களின் உற்பத்தியை பெருகச் செய்யும். ஆயுர்வேத மருத்துவர்கள் உடல் பலஹீனமானவர்களுக்கு இதைத்தான் பரிந்துரை செய்வார்கள். அலர்ஜி, தொற்றை தடுக்கும்.

அஷ்வகந்தா :

அஷ்வகந்தா :

அஷ்வகந்தா நாம் அடிக்கடி கேள்விப்படும் மூலிகைகளின் ஒன்று. இது நாளமில்லா சுரப்பிகள், நாம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகிய மூன்றிற்கிடையே நிலவும் சம நிலையற்ற தன்மையை பேலன்ஸ் செய்து, மன அழுத்தத்தை குஇறைக்கும். மிக முக்கிய ஹார்மோன்களை சுரக்கும் நாளமில்லா சுரப்பியின் நலத்தை மேம்படுத்துகின்றன.

திரிகடுகம் :

திரிகடுகம் :

சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது. காய்ச்சல் வரும்போது ஒரு டம்ளர் வெந்நீரில் திரிகடுகம் சூரணத்தை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் காய்ச்சல் பறந்து போகும்.

ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Herbs to Keep You healthy in monsoon

5 Herbs to Keep You healthy in monsoon
Story first published: Wednesday, September 7, 2016, 12:16 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter