For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்!!!

By Super
|

இந்தியா முழுவதும் பல்வேறு மூலிகைகளும், நறுமணப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் நிறைந்து கிடக்கின்றன. அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக இங்கு விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம். அப்படிப்பட்ட மிளகு முதல், நறுமணமிக்க மஞ்சள் வரை இங்கு கொட்டிக் கிடக்கிறது.

அவை உடலுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களாகப் பயன்படுவதுடன், சமையலில், வாசனையைக் கூட்டுவதற்கும், இங்குள்ள மசாலாப் பொருட்களும், மூலிகைகளும் பயன்படுகின்றன.

நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும் மசாலாப் பொருட்களும், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பனவாகவும், சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துவனவாகவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவனவாகவும், உணவின் தரத்தை மேம்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனவே அத்தகைய உடலின் எடையைக் குறைப்பதற்கு உதவுகின்ற சில மூலிகைகளையும், மசாலாப் பொருட்களையும் கீழே தருகிறோம். இவற்றை உங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி, உங்கள் எடையைக் குறைக்க முயலுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

உடல் எடையைக் குறைப்பதற்கு சிறந்ததொரு உணவுப்பொருள் இலவங்கப்பட்டை ஆகும். ஏனெனில், இலவங்கப்பட்டையானது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது. மேலும் நீண்ட நேரத்திற்கு பசியுணர்வு தோன்றா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக கொழுப்பினை விரைவாக செரிக்கச் செய்கிறது.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியானது இரத்தத்தினை மிகவும் நன்றாக சுத்திகரிக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தில் உணவுப்பொருட்கள் தேங்கிக்கிடக்கா வண்ணம், எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் கொழுப்புகள் தேங்காமல் விரைவில் செரிமானமடைந்து, உடல் எடையும் குறைகிறது.

ஏலக்காய்

ஏலக்காய்

ஏலக்காயானது வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளைத் தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனைக் கூட்டுகிறது.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளுக்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்புத் திசுக்கள் உருவாவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து, எடை கூடுவது தடுக்கப்படுகிறது.

அகாய் பெர்ரி (Acai Berry)

அகாய் பெர்ரி (Acai Berry)

பிரேசில் நாட்டில் விளையும் ஒருவகை கருமை வண்ண பழம் தான் இது. பனை வகையைச் சேர்ந்தது. இதன் ஜூஸ் அல்லது இப்பழத்தை உலர வைத்து தயாரிக்கப்படும் பொடிக்கு உடல் எடையைக் குறைக்கும் வல்லமை உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கின்றன. உடலுக்கு சக்தியை தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இப்பழத்திற்கு உண்டு.

நெட்டில் இலை (Nettle leaf)

நெட்டில் இலை (Nettle leaf)

இது ஒருவகை கண்டங்கத்திரி செடியின் இலை போன்ற இலையைக் கொண்டது. இவ்விலையில் உடலுக்கு சக்தி தரும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது இரத்தத்தை சுத்திகரித்து கொழுப்புக்களை எரிக்க உதவுகின்றது.

குவாரனா (Guarana)

குவாரனா (Guarana)

இது பிரேசில் நாட்டில் காணப்படும் காப்ஃபைன் நிறைந்த ஒரு ஆற்றல் தரும் பழமாகும். இது சிறுநீரை பிரிக்கும் சக்தி நிறைந்தது. எடை குறைப்பில் மிக உதவுகிறது. நரம்பு மண்டலத்தைத் தூண்டி, மன அழுத்தத்தினாலும், வெறுப்பினாலும் அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கிறது.

வரமிளகாய் (Cayenne pepper)

வரமிளகாய் (Cayenne pepper)

இதில் கேப்சைசின் என்னும் பொருள் அடங்கியுள்ளது. இது கொழுப்பினை எரித்து, பசியுணர்வை அடக்கி வைக்கிறது. புருடியு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, காய்ந்த மிளகாயானது உடல் எடைக் குறைப்பில் மிக உதவுகிறது. உடலின் வளர்சிதைமாற்ற செயல்பாட்டினை ஊக்குவித்து, உடலானது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.

சீரகம்

சீரகம்

ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டினைத் தூண்டி உணவுகளை நன்கு செரிப்பதற்கும், உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறவும் சீரகம் உதவுகிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் சீரகம் உதவுகிறது.

ஜின்செங் (Ginseng)

ஜின்செங் (Ginseng)

வட அமெரிக்கா மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளில் விளையும் ஒரு தாவரம் தான் இது. இந்த ஜின்செங் உடலின் ஆற்றல் நிலைகளை தூண்டுவதற்கும், வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

கருப்பு மிளகு

கருப்பு மிளகு

நாம் வழக்கமாக சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகில் பிப்பரைன் என்னும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நமது செரிமான சக்தியைத் தூண்டி, கொழுப்பினை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது.

டான்டேலியன் (Dandelions)

டான்டேலியன் (Dandelions)

ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விளையும் ஒரு வகை மலர் தான் டான்டேலியன். இதற்கு நமது உடலை சுத்தப்படுத்தும் திறன் மற்றும் ஜீரண வேகத்தை மட்டுப்படுத்தும் திறன் உண்டு. மேலும் நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் இருக்கச் செய்யும் திறன் உண்டு. நிறைய சத்துக்கள் மிகுந்தது. குறிப்பாக உடல் எடை குறைய, இதனை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஆளி விதை (Flax seeds)

ஆளி விதை (Flax seeds)

ஆளி விதைகள் நமது வயிறு நிறைந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தும். இதனால், நம்மால், அதிகம் சாப்பிட முடியாமல் போகும். இதன் காரணமாக உடல் எடை குறையும்.

கொத்தவரங்காய் (Guar gum)

கொத்தவரங்காய் (Guar gum)

கொத்தவரங்காயானது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. நமது உடலின் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது.

கார்சினியா (Garcinia)

கார்சினியா (Garcinia)

இது பசியை அடக்கும் திறன் கொண்டது. கொழுப்பு உற்பத்தியாவதையும், கொழுப்பு தங்குவதையும் தடுக்கிறது.

கடுகு

கடுகு

உடலின் எடையைக் குறைக்கும் தன்மையை கடுகு கொண்டுள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தினையும் நன்றாகத் தூண்டுகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தினை அதிகரித்து, அதிக ஆற்றலை விடுவித்து, அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் திறன் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.

சோம்பு

சோம்பு

உணவு செரிப்பதற்கு இது சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும், கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.

சைலியம் (Psyllium)

சைலியம் (Psyllium)

இதனை இசப்பகோல் (isabgol) தூள் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் பாதுகாப்பான உடல் எடை குறைப்பான் ஆகும். அதிலும் இது வயிறு நன்றாக நிறைந்துவிட்ட உணர்வினை மிக நீண்ட நேரத்திற்கு தரும்.

செம்பருத்தி

செம்பருத்தி

உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்களான குரோமியம், அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் ஆகியவை நிறைந்தது தான் இம்மலர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 20 Herbs For Weight Loss

Research has also shown that herbs and spices have the potential to boost metabolism, promote satiety, aid weight management and improve the overall quality of a diet. So spruce up your daily cooking with a dash of spice and attain your desired weight loss.
Desktop Bottom Promotion