For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளைமுடி முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் முடிவு கட்டும் ஷர்பகந்தா மூலிகை..!

By Hari Priya
|

நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏராளமான மூலிகைகளை கண்டுபிடித்து வைத்துள்ளனர். இவற்றின் பயன்கள் எண்ணில் அடங்காதவை என்றே நாம் கூறலாம். இன்று இந்த மூலிகைகளை பற்றிய ஆராய்ச்சிகள் அதிக அளவில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. அறிவியலின் ஆற்றலுடனும் இயற்கையின் உதவியோடும் நாம் ஆரோக்கியமான வாழ்வை வாழ இந்த மூலிகைகள் வழி செய்கின்றன.

வெள்ளைமுடி முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் முடிவு கட்டும் ஷர்பகந்தா மூலிகை..!

அந்த வரிசையில் "ஷர்பகந்தா"வும் மிகுந்த மகத்துவம் பெற்றது என்றே கூறலாம். வெள்ளை முடி பிரச்சினை முதல் பாம்பு கடி வரை அனைத்தையும் இந்த மூலிகை ஒரு கை பார்த்து விடுகிறது. எவ்வாறு இது வேலை செய்கிறது என்பதை இனி அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷர்பகந்தா-பாம்பு...!

ஷர்பகந்தா-பாம்பு...!

இந்த மூலிகையின் பெயர் காரணமே சற்று வித்தியாசமாக உள்ளது. இந்த மூலிகையின் பெயரில் உள்ள ஷர்பம் என்பது "பாம்பு" என்பதை குறிக்கிறது. ஆதலால், இதனை பாம்பு வேர் என்றும் சிலர் அழைப்பதுண்டு. இந்த மூலிகையை பல ஆயிர வருடத்திற்கு முன்னரே முனிவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

சக்தி வாய்ந்த ஷர்பம்..!

சக்தி வாய்ந்த ஷர்பம்..!

இந்த மூலிகை அதி அற்புதமானது என்றே சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட முக்கிய மூல கூறுகள் உள்ளன என ஆய்வுகள் சொல்கிறது. இவை உடலில் ஏற்பட கூடிய எல்லா வகையான கோளாறுகளுக்கும், நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது.

உயர் ரத்த அழுத்தமா..?

உயர் ரத்த அழுத்தமா..?

இந்த ஷர்பகந்தா வேரில் அருமையான மருத்துவ குறிப்பு ஒளிந்துள்ளது. அது என்னவென்றால், இந்த மூலிகை ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. எனவே, உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் இந்த மூலிகை பார்த்து கொள்ளும். மேலும், நரம்புகளையும் இலகுவாக வைத்து கொள்கிறது.

பாம்பு கடிக்கு அருமருந்து..!

பாம்பு கடிக்கு அருமருந்து..!

இதன் பெயர் காரணத்தை போன்றே, இது பாம்பு கடிக்கு அருமையான தீர்வை தருகிறது. பாம்பு கடித்தால் இந்த ஷர்பகந்தா வேரை பொடியாக்கி கடிபட்ட இடத்தில் தடவினால் விஷம் இறங்கும். மேலும், உடனடி தீர்வையும் தர கூடும்.

MOST READ:ஆண்களே, இவற்றையெல்லாம் செய்தால் உங்களின் அந்தரங்க உறுப்பில் புற்றுநோய் நிச்சயம் வரக்கூடும்..!

பருக்களை ஓட விடணுமா..?

பருக்களை ஓட விடணுமா..?

முகத்தை கெடுக்கும் பருக்களை முற்றிலுமாக மறைய வைக்க வேறு எந்த வேதி பொருட்களுக்கும் தேவையில்லை. இந்த மூலிகையை பருக்கள் உள்ள இடத்தில நீரில் கலந்து தடவினால் போதும். மேலும், முகத்திலும் இதை தடவி வரலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக எண்ணெய் பசையும் குறையும்.

வெள்ளை முடிக்கு டாட்...!

வெள்ளை முடிக்கு டாட்...!

இந்த மூலிகை வெள்ளை முடி பிரச்சினைக்கு அருமையான தீர்வை தருகிறது. பழங்காலத்தில் நரை முடியை தடுப்பதற்கு இக ஷர்பகந்தா மூலிகையை தான் பயன்படுத்துவார்களாம். இதனை உள்ளுக்கும் எடுத்து கொள்வார்கள்.

தூக்கமில்லையா..?

தூக்கமில்லையா..?

இரவில் நிம்மதியான தூக்கம் வராமல் இன்று பலர் அவதிப்படுகின்றனர். இதற்கு ஒரு சிறந்த வழி இந்த ஷர்பகந்தா மூலிகை தான். இதனை நெய்யுடன் 1 அல்லது அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். மேலும், மன அழுத்தமும் குறைய தொடங்கும்.

வாயு தொல்லையா..?

வாயு தொல்லையா..?

சாப்பாடு மிகவும் சுவையாக உள்ளதே என்பதற்க்காக கண்ட உணவுகளையெல்லாம் சாப்பிட்டு வந்தால் இப்படிப்பட்ட வாயு தொல்லைகள் தான் ஏற்பட கூடும். ஷர்பகந்தாவை சிறிது நீர் அல்லது பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தாலே வயிற்று சம்பந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

MOST READ: மாதவிடாய் ஏற்பட்ட மாணவிக்கு சமயோசிதமாய் சிந்தித்து உதவிய சக மாணவன் - ரியல் ஹீரோ!

மாதவிடாய் கோளாறா...?

மாதவிடாய் கோளாறா...?

கர்ப்பப்பையை அதிக ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ள இந்த மூலிகை பயன்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் வரவில்லையென்றால் மாதவிடாய் வரவைக்க இந்த மூலிகை வழி செய்கிறது. மேலும், கருக்கலைப்பிற்கு பின் ஏற்பட கூடிய வலியையும் இது குணப்படுத்தி விடும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

சிறுநீரகத்தின் செயல்பாடு சீர்கேடு அடைவதற்கு இந்த சிறுநீரக கற்கள் தான் காரணம். இந்த கற்களையும் கரைக்க ஷர்பகந்தா மூலிகை உதவுகிறது. அத்துடன் சிறுநீரகத்தில் ஏற்பட கூடிய வலியையும் இது சரி செய்து விடுகிறது.

அளவு முக்கியம்...

அளவு முக்கியம்...

இந்த மூலிகையை எடுத்து கொள்ளும் முன் உங்களின் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். ஏனெனில், உங்களின் ரத்த அளவு, சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு ஆகியவற்றை வைத்தே இதனை சாப்பிடலாமா..? வேண்டாமா..? என்பதை உறுதி செய்வார்கள்.

இந்த ஷர்பகந்தா மூலிகையை பற்றி உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits and side effects of Sarpagandha

Indian snakeroot is a plant that grows in India, Thailand, and other parts of Asia, South America, and Africa. There are more than 100 species of Indian snakeroot. Rauwolfia serpentina is the most commonly used species in herbal remedies. Reserpine, a chemical found in the roots, is responsible for most of the plant’s effects on the body. Indian snakeroot, is widely known to be an effective tranquilizer and treatment for high blood pressure.
Desktop Bottom Promotion