Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
ஆண்களுக்கு வலிமை தரும் ஜின்செங் வேர்தைலம்

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் பலவிதமான வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜின்செங் வேரில் 3 சதவிகிதம் ஜின்செனாய்டுகள் உள்ளன. இவை 25 வகைகளாக பிரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இவை டிடெர்பினாய்டு சப்போனின்களாகும். இவற்றுடன் அசிட்டிலைன், கூட்டுப்பொருட்கள், செஸ்கியூடெர்பின்கள்,பெனாக்சன்கள், உள்ளன.
மனஅழுத்தம் போக்கும்
சீனா, ஜப்பான்,கொரியா மற்றும் ருஷ்யாவில் கடந்த 30 ஆண்டுகால ஆய்வுகள் ஜின்செங் வேரினை சிறந்த வலுவேற்றியாக நிரூபித்துள்ளன. நமது உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களில் இருந்து ஜின்செங் காப்பாற்றுகிறது. வேலைப்பளுவினால் ஏற்படும் அழுத்தங்கள்,சோர்வு மற்றும் சளித் தொல்லைகளுக்கு எதிராக இது செயல்படுகிறது.
பசியினால் ஏற்படும் களைப்பு வெப்ப நிலைகளில் உயர்-குறை மட்டங்கள், மற்றும் மனம், உணர்வு இறுக்கங்களை தாங்க உடலினை ஏற்றதாகச் செய்யும். இவை மட்டுமின்றி தூக்கத்தை தூண்டி நன்றாக உறக்கம் வரச்செய்யும். நம் உடலில் இயல்பாக உள்ள ஹார்மோன்கள் போன்ற அமைப்புடைய ஜின்செனாய்டுகள் இதற்கு அடிப்படையாக உள்ளன. ஜின்ஜெங் நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்தி கல்லீரல் செயல்பாட்டினை கூட்டுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வயோதிகத்தால் ஏற்பட்ட பலவீனம் போக்கவல்லது.
பாலுணர்வு தூண்டும்
சீனாவில் ஓட்டப்பந்தைய வீரர்களுக்கு வலுவேற்றியாகவும், ஊக்குவியாகவும் ஜின்செங் பயன்படுகிறது. உடல்சார்ந்த இறுக்கத்தினைப் போக்க வல்லது. ஆண்களுக்கு பால் உணர்வு ஊக்குவியாகவும், பயன்படுத்தப்படுகிறது. வடக்கு மற்றும் மைய சீனாவில் உள்ள மத்திய வயதினர்கள் இதனை வலுவேற்றியாக உட்கொள்கின்றனர். குளிரை தாங்க உதவுகிறது. மேலை நாடுகளில் வலுவேற்றியாகவும், மன இறுக்கங்களைத் தாங்கவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தேர்வு எழுதும் பொழுது ஏற்படும் இறுக்கங்களை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது.
ஜின்செங் மாத்திரைகளாகவும், சூப் கலவையாகவும் உட்கொள்ளப்படுகிறது. இவை ஆண்மலடு மற்றும் விந்து விரைவில் வெளியேறுதல், நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, தற்காலிக மன இறுக்கம் ஆகியவற்றினை போக்கவும் உடலின் உயிர்சக்தியை பராமரிக்கவும் பயன்படுகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
