For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்திற்கு பொலிவு தரும் பாற்சொறிக்கீரை

By Mayura Akilan
|

Spinach
பசுமையான கீரைகளில் உயிர்சத்துக்கள், தாதுஉப்புகள், கால்சியம், இரும்புச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மாமிச உணவுகளை உண்ணும் போது கிடைக்கும் சக்தி கீரை உட்கொள்பவர்களுக்கும் கிடைக்கிறது. கீரையானது உடல் சூட்டை தணிக்கு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. அதிகம் கேள்விப்பட்டிராத சில வகை கீரைகளில் காணப்படும் மருத்துவ குணங்களை காணலாம்.

பண்ணைக்கீரை

பண்ணைக்கீரையை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிட உடல் பலம் பெரும். இது உடல் சூட்டை தணித்து சமநிலையில் வைக்கும். சொறி, சிரங்கு இரணம் இவைகளை ஆற்றும்.

பாற்சொறிக்கீரை

பாற்சொறிக்கீரையுடன் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிடுவார்கள். சீதபேதியுடன் கஷ்டப்படுபவர்கள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும். குடலில் ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றும். உடலில் தேஜஸ் உண்டாகும்.

வள்ளைக்கீரை

கொடி இனத்தைச் சேர்ந்த இந்த கீரை பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. இதனை பருப்புடன் சேர்த்து சாப்பிட மகப்பேறு தாய்மார்களுக்கு பால் சுரக்கும். உடலில் புதிய ரத்தத்தை உண்டாக்கும். உடல் பலம் பெரும். நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் தொடர்ந்து இதனை சாப்பிட்டு வர சர்க்கரையை குறைத்துவிடும்.

சேம்புக்கீரை

சேம்பங்கிழங்கின் இலையான இந்த கீரையை சமைத்து உண்டால் மூலநோய் குணமாகும். கூட்டு, பொரியல், துவட்டல் செய்து சாப்பிட்டால் அனைத்து வகை மூல வியாதிகளும் குணமடையும்.

English summary

Medicinal benefits of Spinach | உடலுக்கு குளிர்ச்சி தரும் கீரைகள்

Spinach is rich in essential amino acids, iron, calcium, vitamin A, and folic acid. It is the most inexpensive source of protein, providing as much protein as meat, fish, eggs, chicken do in the same quantity.
Story first published: Monday, April 9, 2012, 16:14 [IST]
Desktop Bottom Promotion