ஏன் குளிக்கும் போது மாரடைப்பு ஏற்படுகிறது தெரியுமா?

காலையில் குளிப்பதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது. ஆனால் குளிக்கும் போது உண்டாகும் மாரடைப்பு மற்றும் இதயம் செயலிழப்பு காரணமாக மக்கள் மத்தியில் தற்போது ஒரு பீதி உருவாகியுள்ளது.

காலையில் எழுந்தவுடன் குளிப்பது அந்த நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவும். காலையில் குளிப்பதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது. ஆனால் குளிக்கும் போது உண்டாகும் மாரடைப்பு மற்றும் இதயம் செயலிழப்பு காரணமாக மக்கள் மத்தியில் தற்போது ஒரு பீதி உருவாகியுள்ளது.

Know Why Heart Stroke and Cardiac Arrest Are Frequent While Bathing

குறிப்பாக புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி குளிக்கும்போது இதய செயலிழப்பு ஏற்பட்டு ஹோட்டல் அறையில் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து குளிக்கும்போது இறப்பவர்கள் குறித்த செய்தி வெளிச்சத்திற்கு வந்தது. குளிக்கும் போது உண்டாகும் இதய செயலிழப்பு குறித்த காரணங்கள் மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் பற்றி இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.

குளியலறையில் உண்டாகும் இறப்பிற்கு மூன்று பொதுவான காரணங்கள் உண்டு. அவை..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாரடைப்பு

மாரடைப்பு

இரத்த ஓட்டத்தில் உண்டாகும் பிரச்சனைகள் காரணமாக இதயத்திற்கு போதுமான அளவு இரத்தம் கிடைக்காத நிலையில் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்திற்கு இரத்தம் அனுப்பும் தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது இந்த நிலை உண்டாகிறது.

வாதம்

வாதம்

மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் போது வாதம் ஏற்படுகிறது. உயிர் வாழ தேவையான க்ளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜன் மூளைக்கு போதுமான அளவு கிடைக்காததால் இந்த நிலை உண்டாகிறது.

இதய செயலிழப்பு

இதய செயலிழப்பு

கார்டியாக் அரெஸ்ட் என்று கூறும் நிலையானது , இதயம் திடீரென்று செயல்பாட்டை நிறுத்துவதாகும். ஒழுங்கற்ற இதயத்துடிப்பு , இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதன் காரணமாக இதய செயலிழப்பு உண்டாகிறது.

குளிக்கும் போது இதயம் செயலிழப்பதற்கான முக்கிய காரணங்கள்:

குளிக்கும் போது இதயம் செயலிழப்பதற்கான முக்கிய காரணங்கள்:

ஆன்லைன் அறிக்கைகளின்படி , குளியலறை இறப்புகள் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குளியலறையில் இதயம் செயலிழப்பதற்கும், வாதம் ஏற்படுவதற்கும் முக்கிய காரணங்கள் இதோ.

கழிப்பறையில் அதீத சிரமம்

கழிப்பறையில் அதீத சிரமம்

மலம் கழிக்கும்போது அதிக சிரமப்பட்டு மலம் கழிப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது. இயற்கையல்லாத நிலையில் அமர்ந்து மலம் கழிப்பதால் ஒருவரின் உயிருக்கு ஆபத்து உண்டாகிறது. இப்படி செய்வது இதய மண்டலத்தை நேரடியாக பாதிக்கிறது . அதனால் சின்கோப் என்னும் உணர்விழக்கும் நிலை அல்லது இறப்பு சம்பவிக்கிறது. அதிக சிரமத்துடன் மலம் கழிக்கும்போது இரத்த அழுத்தம் குறைந்து இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இந்திய கழிப்பறைகளுடன் ஒப்பிடும்போது வெஸ்டர்ன் கழிப்பறைகளில் இந்த அபாயம் அதிகம் காணப்படுகிறது.

முதலில் தலையில் தண்ணீர் ஊற்றுவது

முதலில் தலையில் தண்ணீர் ஊற்றுவது

குளிக்கத் தொடங்கும் போது முதலில் தலை மற்றும் தலைமுடியை ஈரப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெளிவாக கூறுகின்றனர். பொதுவாக மக்கள் குளிக்கும்போது முதலில் தலையில் தண்ணீர் ஊற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு. இந்த நடவடிக்கை உடலின் வெப்ப நிலையை சரிசெய்ய உடலை கட்டாயப்படுத்துகிறது. திடீர் அழுத்தம் காரணமாக தமனிகள் உடைய நேரலாம். ஆகவே வரிசைப்படி குளிக்கும்முறையை பின்பற்றுவது மிகவும் நல்லது அதாவது கால்களை முதலில் நனைத்து பின் கீழிருந்து மேலாக இறுதியில் தலையை நனைக்க வேண்டும்.

இரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றம்

இரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றம்

உயர் இரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள் குளிக்கும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக நீங்கள் செய்யும் தவறுகள் உங்கள் உயிரை பாதிக்கலாம். வயது முதிர்ந்தவர்கள் மற்றும் இரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள் அதிகாலையில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றம் ஏற்படுவதால் பெருமூளை இரத்த நாளங்களில் இரத்தசோகை ஏற்பட்டு இதய செயலிழப்பு அல்லது வாதம் ஏற்படுகிறது. மேலும் குளிர் காலத்தில் வெப்ப நிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் மாரடைப்பு ஏற்படும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion