இந்த 7 விஷயங்கள் இதயத்தை அமைதியாக சேதப்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்துமாம்... உஷாரா இருங்க..

கீழே ஒருவரின் இதயத்தை அமைதியாக அழித்துக் கொண்டிருக்கும் சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விஷயங்கள் இதயத்தை சேதப்படுத்துவதோடு, மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிற நோய்களுக்கும் வழிவகுக்குமாம்.

Heart Attack: முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் மாரடைப்பின் அபாயம் அதிகம் இருந்தது. ஆனால் தற்போது இளம் வயதிலேயே ஏராளமானோர் மாரடைப்பால் இறந்து வருகிறார்கள். எனவே 30 வயதை எட்டியதுமே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பலருக்கு இதயத்திற்கு எந்த விஷயங்கள் எல்லாம் தீங்கை விளைவிக்கும் என்பது சரியாக தெரிவதில்லை. ஒருவரது இதயம் பாதிக்கப்படுவதற்கு, அவரது வாழ்க்கை முறை, உணவுப்பழக்கங்கள் மற்றும் குறிப்பிட்ட சில விஷயங்களும் தான் காரணம். அந்த விஷங்களை தெரிந்து அவற்றை சரிசெய்து கொண்டால், மாரடைப்பின் அபாயத்தைத் தடுக்கலாம்.

Heart Attack: Things That Can Damage Your Heart Silently In Tamil

கீழே ஒருவரின் இதயத்தை அமைதியாக அழித்துக் கொண்டிருக்கும் சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விஷயங்கள் இதயத்தை சேதப்படுத்துவதோடு, மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிற நோய்களுக்கும் வழிவகுக்குமாம். இப்போது அவை என்னவென்பதை காண்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்

மன அழுத்தம்

இன்று நிறைய பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எப்போது உடலில் அழுத்தம் அதிகரிக்கிறதோ, அப்போது மூளை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, மனகவலை மற்றும் பதட்டத்தை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை பாதித்து, இதய பிரச்சனைகளை உண்டாக்குகிறது. பொதுவாக நமது உடலானது குறிப்பிட்ட நேரம் அழுத்தத்தை தாங்கிக் கொள்ளும். ஆனால் எந்நேரமும் ஒருவர் மன அழுத்தத்துடன் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், மனதை அமைதியாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கோவிட்

கோவிட்

ஆஸ்துமா, சிஓபிடி போன்ற நுரையீரல் கோளாறு உள்ளவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான அபாயம் அதிகம் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் தற்போது பரவிக் கொண்டிருக்கும் கோவிட் ஒரு நுரையீரல் நோய். இது இதய தசைகளில் அழற்சியை உண்டாக்கி, இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே தான் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள்

நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள்

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு இதய நோயின் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு நீரிழிவு, பிபி பிரச்சனை இருப்பின், அப்பிரச்சனைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதைத் தவறக்கூடாது. இல்லாவிட்டால், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

ஏற்கனவே இதய நோய்கள்

ஏற்கனவே இதய நோய்கள்

ஏற்கனவே மைல்டு பக்கவாதம் வந்தவர்கள் அல்லது மைல்டு ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கு, இதயம் பலவீனமாகி கடுமையாக சேதமடைவதற்கான வாய்ப்புள்ளதால், இத்தகையவர்களும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அதிகமான உடற்பயிற்சி

அதிகமான உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான பழக்கம் தான். ஆனால் அந்த உடற்பயிற்சியை மிகவும் கடுமையாக செய்யும் போது, அதன் விளைவாக உடலின் பிற உறுப்புக்கள் அதிகமாக செயல்படுவதைப் போன்றே இதயமும் அளவுக்கு அதிகமாக செயல்பட்டால், ஒரு கட்டத்தில் அது செயலிழந்துவிடும். எனவே ஒருவர் தங்கள் உடலின் வரம்புகளை அறிந்து, அதற்கேற்ப உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். வயது அதிகரிக்கும் போது, மிகவும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

புகைப்பிடிப்பது, மது அருந்துவது

புகைப்பிடிப்பது, மது அருந்துவது

மது அருந்துவது, புகைப்பிடிப்பது ஆகிய இரண்டு பழக்கங்களுமே இன்று பெரும்பாலானோரிடம் இருக்கும் மிகவும் மோசமான பழக்கங்களாகும். இப்பழக்கம் ஒருவருக்கு இருந்தால், அவருக்கு சர்க்கரை நோய், பிபி போன்ற பிரச்சனைகள் வருவதோடு, இதய நோயின் அபாயமும் அதிகரிக்கும். அதுவும் ஏற்கனவே இதய நோய் இருந்தால், இவ்விரு பழக்கங்களையும் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், அது மாரடைப்பின் அறிகுறிகளை அதிகரித்துவிடும்.

இதய நோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்

இதய நோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்

ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். ஒருவருக்கு இதய நோய் இருந்தால், அது சில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:

* நெஞ்சு வலி

* மார்பு இறுக்கம்

* நாள்பட்ட சோர்வு

* காரணமின்றி இருமல் அல்லது மூச்சுத்திணறல்

* வேகமான இதயத்துடிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, இதய பிரச்சனை உள்ளதா என்று பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம், இதய நோயால் ஏற்படும் மரணத்தைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, January 3, 2023, 13:10 [IST]
Desktop Bottom Promotion