For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் உங்க இதயத்தை மோசமா பாதிச்சிட்டிருக்கு என்பதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்!

ஜமா ஆய்வின் படி, கொரோனாவில் இருந்து மீண்ட ஆரோக்கியமான நோயாளிகள் இதய சிக்கல்கள் மற்றும் சேதங்களின் அறிகுறிகளை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.

|

ஆரம்பத்தில் கொரோனா ஒரு சுவாச நோயாக அறியப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் தொற்று உடலின் ஒவ்வொரு உறுப்புக்களையும் பாதிக்கக்கூடியது என்பது போகப்போகத் தான் தெரிந்தது. குறிப்பாக இந்த வைரஸ் இதயத்தையும் பாதிக்கக்கூடியது. ஜமா ஆய்வின் படி, கொரோனாவில் இருந்து மீண்ட ஆரோக்கியமான நோயாளிகள் இதய சிக்கல்கள் மற்றும் சேதங்களின் அறிகுறிகளை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.

Coronavirus: 5 Signs COVID-19 Has Impacted Your Heart

எனவே இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு கொரோனா இறப்பின் அபாயத்தைக் கொண்டு வரக்கூடும். சீனாவின் சி.டி.சி வீக்லி நடத்திய ஆய்வில், கொரோனாவால் இறந்த 22 சதவீத நோயாளிகள் இதய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் நாளிலேயே அறிகுறிகள் தெரியும்

முதல் நாளிலேயே அறிகுறிகள் தெரியும்

பொதுவாக அமைதியாக தாக்கும் ஒரு நோய்த்தொற்று இதயத்தை பாதித்திருந்தால், அது அறிகுறியற்றவர்களாக இருந்தாலும் தொற்று ஏற்பட்ட முதல் நாளிலேயே தெரிந்து விடும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. எனவே கொரோனா தொற்று காலத்தில், இதயத்தை கவனித்து கொள்வது மற்றும் சிக்கலின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறியவது மிகவும் அவசியம் ஆகும்.

கீழே கொரோனா தொற்று இதயம் வரை பரவியிருந்தால், அது வெளிக்காட்டும் சில அமைதியான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிக சோர்வு

அதிக சோர்வு

கோவிட்-19 க்குப் பிறகு இதய பாதிப்புள்ளது கண்டறியப்பட்டவர்களிடையே சோர்வு, கடுமையான களைப்பு மற்றும் மார்பு வலி ஆகியவை முதன்மையான அறிகுறிகளாக கூறப்படுகின்றன. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கு இதயம் கடுமையாக வேலை செய்யும் போது, அது விரைவில் சோர்வு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்றவற்றை உண்டாக்கும். இதுவே இதய பிரச்சனையின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளுள் ஒன்றாகும். ஆகவே நீங்கள் நாள்பட்ட சோர்பு மற்றும் ஒழுங்கற்ற இதய துடிப்பு ஆகியவற்றை அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுக அறிவுறுத்தப்படுகிறது.

இதய அழற்சி/இதய தசை வீக்கம்

இதய அழற்சி/இதய தசை வீக்கம்

தற்போது மாரடைப்பு அல்லது இதய தசைகளின் வீக்கம் கோவிட்-19 உடன் தொடர்புடைய பொதுவான சிக்கலாக உள்ளது. மாரடைப்பு இதயத்தில் வைரஸின் நேரடி தாக்கத்தால் ஏற்படலாம் அல்லது சைட்டோகைன் புயல் காரணமாகவும் ஏற்படலாம். ஒருவரது இதயத்தில் அழற்சி மற்றும் அது தொடர்புடைய ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது இதய தசைகளை பலவீனமடைய செய்கின்றன. அதோடு உடலில் இரத்த ஓட்டத்தையும் சீர்குலைக்கின்றன. மேலும் இது இரத்த அழுத்த அளவுகளை எதிர்பாராத விதமாக குறைத்தும் விடுகின்றன. இதயம் அல்லது நுரையீரலில் அதிக அழுத்தம் இருந்தால், அது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

ஆக்ஸிஜன் குறைபாடு

ஆக்ஸிஜன் குறைபாடு

கொரோனா வைரஸ் உடலில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்த ஓட்டத்தை தடுக்கும் போது ஹைபோக்ஸியா போன்ற நிலை, மனக்குழப்பம், நீல நிற உதடுகள் அல்லது முகம் போன்றவை ஏற்படும். இவையெல்லாம் இதய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இரத்த ஓட்டத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அதன் விளைவாக இரத்த உறைவு ஏற்படலாம், இதயத்தில் அழற்சி அதிகரிக்கலாம் மற்றும் இதயம் அதன் வேலையை செய்வது கடினமாகலாம். சீரற்ற இதய துடிப்பு, குழப்பமான மனநிலை, பேசுவதில் சிரமம், அதிகமான வியர்வை போன்றவை இதய செயலிழப்பிற்கான அறிகுறிகளாகும். எனவே இவற்றை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

நெஞ்சு வலி

நெஞ்சு வலி

நெஞ்சு வலி என்னும் அறிகுறி நுரையீரல் செயல்பாடு குறைதல், மூச்சுத் திணறல் மற்றும் இதய பாதிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. COVID-19 ஐப் பொறுத்தவரை, வைரஸ் பெருக்கம் மற்றும் அதன் பரவல் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம் நிறைந்த ஆரோக்கியமான இதயம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பாதித்து, இதய தசைகளை சேதப்படுத்தும் மற்றும் மார்பு வலியை உண்டாக்கும். மாரடைப்பின் முதல் அறிகுறியாக நெஞ்சு வலி கருதப்படுகிறது. இந்நிலையில் மார்பு பகுதியைச் சுற்றி நெருக்கம் அல்லது பிழிவது போன்ற உணர்வு ஏற்பட்டு மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கலாம். சில சமயங்களில், தீவிரமான மார்பு வலி மற்றும் ஏற்ற இறக்கமான இதய துடிப்பு ஆகியவை மயக்கத்தை உண்டாக்கும்.

போஸ்டரல் ஆர்த்தோஸ்டேடிக் டாக்ரிக்கார்டியா நோய்க்குறி

போஸ்டரல் ஆர்த்தோஸ்டேடிக் டாக்ரிக்கார்டியா நோய்க்குறி

சில ஆய்வாளர்கள் கோவிட் நோயாளிகள் நீண்ட காலமாக இரத்த ஓட்ட பிரச்சனையான POTS என்னும் போஸ்டரல் ஆர்த்தோஸ்டேடிக் டாக்ரிக்கார்டியா நோய்க்குறி போன்ற ஒரு நிலையை சமாளிக்க வேண்டியிருக்கும் என்று நம்புகின்றனர். பொதுவாக இந்த நிலையானது நரம்பு மண்டலத்தை பாதித்து, சீரற்ற இதயத் துடிப்பு, வழக்கத்திற்கு மாறான இரத்த அழுத்த அளவு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. மேலும் தலைச்சுற்றல், குறைவான இரத்த ஓட்டம், படபடப்பு, லேசான தலைவலி, குறைவான நோயெதிர்ப்பு சக்தி போன்றவை இதய பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus: 5 Signs COVID-19 Has Impacted Your Heart

Here are 5 silent signs that a COVID infection might be spreading to your heart. Read on...
Desktop Bottom Promotion