For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு என்ன நோய் இருக்குனு உங்க இதயத்துடிப்பை வைச்சே கண்டுபிடிக்கலாம் எப்படி தெரியுமா?

இதய துடிப்பை வைத்து ஒருவருடைய ஆயுளை மட்டுமல்ல ஆரோக்கிய குறைபாட்டையும் கண்டறியலாம். ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 80 வரை இதயத்துடிப்பு இருக்கும்.

|

நாம் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரம் நமது இதயத்துடிப்புதான். ஏனெனில் இதயம் துடிக்கும் வரை மட்டுமே நாம் உயிரோடு இருப்போம். உங்களின் ஆயுள் முதல் ஆரோக்கியம் வரை அனைத்தையுமே முடிவு செய்வது உங்களுடைய இதய துடிப்புதான்.

Things Your Heart Rate Says About You Health Conditions

இதய துடிப்பை வைத்து ஒருவருடைய ஆயுளை மட்டுமல்ல ஆரோக்கிய குறைபாட்டையும் கண்டறியலாம். ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 80 வரை இதயத்துடிப்பு இருக்கும். சில மருத்துவர்கள் 100 வரை சென்றால் கூட பிரச்சனையில்லை என்று கூறுகிறார்கள். உங்களின் இதயத்துடிப்பு உங்களின் ஆரோக்கியம் பற்றி என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனஅழுத்தம் இருந்தால்

மனஅழுத்தம் இருந்தால்

மனஅழுத்தம் உங்களுடைய இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். இது உங்கள் உடலை சண்டை அல்லது பறக்கும் நிலைக்கு அழைத்து சென்றுவிடும். இரத்த அழுத்தமும், இதய துடிப்பும் ஒன்றல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். தொடர்ச்சியான மனஅழுத்தம் உங்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கக்கூடும், இதனால் மாரடைப்பு ஏற்படகூட வாய்ப்புள்ளது.

உங்கள் சர்க்கரை நோய் வரப்போகிறது

உங்கள் சர்க்கரை நோய் வரப்போகிறது

சர்க்கரை நோய் வருவதால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறதா இல்லை இதயம் அதிகம் துடிப்பதால் சர்க்கரை நோய் வருகிறதா என்பது மருத்வவர்களுக்கே இன்றும் தெரியாத புதிராகும். சமீபத்திய ஆய்வுகளின் படி சர்க்கரை நோய் வரப்போகிறவர்களுக்கும், அதிக வேலை செய்யாமல் இருப்பவர்களுக்கும் கரோனரி நோய்கள் மற்றும் மனஅழுத்தம் வர வாய்ப்புள்ளது. இது இதயத்தை நேரடியா பாதிக்கும். எனவே இதயம் வழக்கத்திற்கு மாறாக துடித்தால் எச்சரிக்கையாக இருங்கள்.

MOST READ:ஒருநாளைக்கு இவ்வளவு காபிக்கு மேல் குடித்தால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமாம் தெரியுமா?

இதயத்தின் மின்சார அமைப்பில் சிக்கல்

இதயத்தின் மின்சார அமைப்பில் சிக்கல்

உங்கள் இதயத்திற்கென தனிப்பட்ட மின்சார அமைப்பு உள்ளது. உங்கள் அமைப்பின் சிக்னல்கள் அதை சரியாக துடிக்க வைக்க உதவுகிறது. ஒருவேளை உங்கள் இதயம் மெதுவாக துடித்தால் இந்த அமைப்பு சரியாக செயல்படுவதில்லை என்று அர்த்தம். இந்த பிரச்னை இருப்பவர்கள் அடிக்கடி மயங்கி விழுவார்கள்.

 போதுமான உடற்பயிற்சியின்மை

போதுமான உடற்பயிற்சியின்மை

உங்கள் இதயமும் ஒரு தசைதான் எனவே அது சரியாக இயங்க அதற்கு போதுமான உடற்பயிற்சி மிகவும் அவசியமாகும். உடல்பருமன் மற்றும் சோம்பேறித்தனம் உங்கள் இதய துடிப்பின் மீது அதிக பாதிப்பை உண்டாக்கும். உங்கள் உடல் சரியான அமைப்பில் இல்லாதபோது உங்கள் உடலின் அனைத்து பாகத்திற்கும் இரத்தத்தை கொண்டு செல்ல உங்கள் இதயம் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் எவ்வளவு எடை அதிகமாக இருக்கிறீர்களோ அவ்வளவு இரத்தம் அதிகம் தேவைப்படும். அதிக உடற்பயிற்சி உங்கள் இதய துடிப்பை குறைக்கக்கூடும். விளையாட்டு வீரர்களுக்கு பெரும்பாலும் இதய துடிப்பு குறைவாகவே இருக்கும்.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து

உங்கள் உடலில் மின்சக்தியுடன் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் எலெக்ட்ரோலைட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. நீங்கள் நீர் அதிகமாக குடித்தாலோ அல்லது மிகவும் குறைவாக குடித்தாலோ இது உங்கள் உடலின் நீர் அமைப்பின் மீது சமநிலையின்மையை ஏற்படுத்தும். இது உங்கள் உடலின் வேதியியலை கெடுகிறது.

MOST READ:உங்கள் திருமண ரேகையில் ஒளிந்திருக்கும் உங்களின் எதிர்கால ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

தைராய்டு

தைராய்டு

உங்கள் தொண்டையில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவிலான தைராய்டு சுரப்பி உங்கள் உடல் சீராக இயங்குவதற்கான ஹார்மோன்களை சுரக்கிறது.ஆனால் அது சரியாக செயல்படவில்லை என்றால் உங்கள் இதயத்துடிப்பு மிகவும் குறைந்துவிடும். அதுவே அது அதிகம் சுரந்தால் உங்களின் இதயத்துடிப்பு அதிகமாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Your Heart Rate Says About You Health Conditions

Do you know your heart rate says a lot about your health.
Desktop Bottom Promotion