ஆண்களே, இந்த எதிர்பாராத அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், இதய நோய்கள் உள்ளது என அர்த்தமாம்...

பொதுவாக உடலில் புதிதாக ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது சில சமயங்களில் உடலுக்கு எந்த வித தீங்கையும் ஏற்படுத்தாதவாறு இருக்கலாம். இது போன்ற மாற்றங்கள் ஏதேனும் நோயிற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். இந்த மாற்றங்கள் உங்களில் இதயத்தையும் பாதிக்க கூடும்.

ஆண்களே, இந்த எதிர்பாராத அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், இதய நோய்கள் உள்ளது என அர்த்தமாம்..

குறிப்பாக ஆண்கள் தங்களின் உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை மிக சாதாரணமாக எடுத்து கொள்கின்றனர். இது பல வித ஆபத்துக்களை நமக்கு ஏற்படுத்தும் என்பதே உண்மை. ஆண்களின் உடலில் ஏற்படுகின்ற எந்தெந்த அறிகுறிகள் இதய நோய்களை தரும் என்பதை இந்த பதிவில் அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோயா..?

இதய நோயா..?

இதயம் சார்ந்த நோய்கள் என்றால் அதில் பல வகை உள்ளது. இதயம் செயலிழத்தல், ரத்த நாளங்களில் நோய் ஏற்படுதல், மாரடைப்பு, ரத்தத்தின் வேகம் தடைபடுதல் இப்படி பல வகைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் ஒரு சில பொதுவான அறிகுறிகள் முன் கூட்டிய நமது உடலில் ஏற்பட கூடும். நாம் அதனை கொஞ்சம் கூட கண்டு கொள்வதில்லை என்பதே நிதர்சனம்.

இளம் வயது ஆண்களே..!

இளம் வயது ஆண்களே..!

இப்போது வருகின்ற நோய்களெல்லாம் இளம் வயதில் உள்ளவர்களையே பெரிதும் பாதிக்க செய்கிறது. இதற்கு காரணம் சிறு வயதில் ஏற்படுகின்ற புகை பழக்கம், எதிர்ப்பு சக்தி குறைபாடு, ஆரோக்கியமற்ற சூழல் ஆகியவை தான் முக்கிய காரணிகளாகும். இவை நேரடியாக ரத்த நாளங்களை பாதித்து ரத்த ஓட்டம் இல்லாமல் செய்து விடும்.

மார்பகங்கள் இறுகுதா..?

மார்பகங்கள் இறுகுதா..?

பல ஆண்கள் இந்த அறிகுறி அவர்களின் உடலில் ஏற்பட்டும் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பார்கள். உங்களின் இதயம் அபாயகரமான நிலையில் உள்ளது என்பதை இந்த அறிகுறி உணர்த்துகிறது. மார்பாக பகுதியில் வலியோ அல்லது இறுக்கமான உணர்வோ அல்லது அழுத்தமோ இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள்.

அடிக்கடி நெஞ்செரிச்சலா..?

அடிக்கடி நெஞ்செரிச்சலா..?

மாரடைப்பு உங்களுக்கு வர போகிறது என்பதை இந்த அறிகுறி எடுத்து சொல்லும். எப்போதும் வாந்தி வருகின்ற உணர்வோ, செரிமானம் ஆகாதது போன்று தோன்றினாலோ அல்லது நெஞ்செரிச்சலாக நீண்ட நாட்கள் இருந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

பேச்சு திணறலா..?

பேச்சு திணறலா..?

சிலருக்கு திடீரென்று வாய் குழற ஆரம்பிக்கும். இதனை திக்கு வாய் போன்ற பிரச்சினைகளோடு பல ஆண்கள் ஒப்பிட்டு கொள்வார்கள். உண்மையில் எதிர்பாராத விதமாக பேச்சு திணறலோ அல்லது பேசுவதில் கடினமான உணர்வோ இருந்தால் அவை இதய நோய்க்கான அறிகுறியாம்.

கை பகுதியில் வலியா..?

கை பகுதியில் வலியா..?

சில ஆண்கள் இந்த அறிகுறியை வேலை பளுவால் ஏற்பட்டதென்று எடுத்து கொள்வார்கள். குறிப்பாக இடது பக்க கைகளில் அல்லது முழு பகுதியிலும் வலித்தால் இதய நோய்க்கான அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, இதனை அப்படியே விட்டு விடாதீர்கள்.

மூச்சு திணறலா..?

மூச்சு திணறலா..?

உங்களின் இதயத்தில் சீராக ரத்தம் ஓட்டம் நடைபெறவில்லையென்றால் மோசமான நிலையை தரும். குறிப்பாக மூச்சு திணறலை அடிக்கடி ஏற்படுத்தும். மேலும், இந்த நிலையில் அதிக அளவில் வியர்த்து கொட்ட தொடங்கும். இவை இதயம் ஆபத்தான நிலையில் இருப்பதை குறிக்கிறது.

பசியின்மையா..?

பசியின்மையா..?

எப்போதுமே பசி எடுக்காத உணர்வு இருக்கிறதா..? இதை நாம் வயிற்று சார்ந்த நோயாக எண்ணி கொள்வோம். ஆனால், இது போன்ற அறிகுறிகள் கூட உங்களின் இதயம் உங்களுக்கு தரும் அபாய மணியாகும். நீண்ட காலமாக பசியின்மை பிரச்சினை இருந்தால் உடனே மருத்துவரும் பரிசோதித்து கொள்ளுங்கள்.

ரத்த ஓட்டம் தடைபடுதலா..?

ரத்த ஓட்டம் தடைபடுதலா..?

உங்களின் உடல் முழுக்க சில்லென்று ரத்தமே பாயாதவாறு இருக்கிறதா..? அல்லது அடிக்கடி வியர்த்து கொட்டுகிறதா..? இவை மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும். இந்த அறிகுறி இருந்தால் இதய பிரச்சினைகள் அதிகம் உள்ளது என்று அர்த்தம். எனவே தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

ஆண்களே, கவனம் தேவை..!

ஆண்களே, கவனம் தேவை..!

செய்கின்ற வேலை பளுவால் பலர் இதய நோய்களை பரிசாக பெற்று இருக்கின்றனர். நீங்கள் எந்த வேலையை செய்தாலும் மிதமான மன ஓட்டத்துடன் செய்து வந்தாலே எந்த வித விபரீதங்களும் உங்களுக்கு ஏற்படாது.

எனவே, மேற்சொன்ன அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் மருத்துவரை ஆலோசியுங்கள் நண்பர்களே.இந்த பதிவு பிடித்திருந்தால் பிறருடனும் பகிரலாமே...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion