For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெஞ்சுவலி வந்தா அந்த நொடியில் உயிரை காப்பாற்ற என்ன செய்யணும்? படிங்க... மத்தவங்களுக்கும் சொல்லுங்

தனியாக இருக்கும்போது நெஞ்சுவலி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளோம்.

By Mahi Bala
|

மாரடைப்பு எந்த நிமிடத்தில் வரும் என்று யாரால் கணிக்க முடியும். அதிலும் குறிப்பாக தனியாக இருக்கும்போது மாரடைப்பு (நெஞ்சுவலி) வந்துவிட்டால் நம்மை நாமே யாருடைய துணையுமின்றி,

heartattack

யாரையும் எதிர்பார்க்காமல் எப்படி காப்பாற்றிக் கொள்வது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தெரிந்து வைத்துப் கொள்வது நல்லது தானே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாரடைப்பு

மாரடைப்பு

சிலருக்கு பேருந்துகளில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அலுவலகங்களுக்குச் சென்று திரும்பும்போது போன்ற சமயங்களில் மாரடைப்பு ஏற்பட்டு, அடுத்தவர் உதவியை நாடி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் இறந்துவிடுவதைக் கேள்விப்படுகிறோம். அதுபோன்ற நிகழ்வுகள் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ள சில எளிய வழிமுறைகளை மனதுக்கள் வைத்துக் கொண்டாலே போதும். தேவையில்லாத அசம்பாவிதங்களைத் தவிர்த்துவிட முடியும்.

MOST READ: தொடர்ந்து 47 மணி நேரம் மலம் கழிக்காமல் இருந்தால் என்ன ஆகும்னு தெரியுமா? இதோ தெரிஞ்சிக்கோங்க...

படபடப்பு

படபடப்பு

குறிப்பாக, எந்த மாதிரி சமயங்களில் இதுபோன்ற நெஞ்சு வலி வருகின்றது என்பதை முதலில் கவனிக்க வேண்டும். பொதுவாக வேலையிடங்களில் அதிக வேலைப்பளுவின் காரணமாகவும் வேறு சில பிரச்சினைகளின் காரணமாகவும் மன அழுத்தத்துடன் இருப்பார்கள். அந்த சமயங்களில் படபடப்புடனும் தொய்வுடனும் காணப்படுவீர்கள். அதனால் திடீரென்று உடல் பலவீனமும் இதயத்தில் வலியும் உண்டாகும். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவ ஆரம்பிக்கும்.

ஆய்வுகள்

ஆய்வுகள்

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பவர்களில் பெரும்பாலானோர் அருகில் யாரும் இல்லாமல் தனியே இருக்கும் சமயத்தில் தான் நிகழ்ந்திருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதுபோன்ற கொடுமையான உயிரிழப்புகளைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

இருமல்

இருமல்

மாரடைப்பு ஏற்படும் முன் உங்களுடைய இதயம் தாறுமாறாகத் துடிக்கிறது. நீங்கள் சுய நினைவை இழப்பதற்கு வெறும் 10 நொடிகள் தான் இருக்கிறது என்று நிலை இருந்தால், அந்த நொடியின் தீவிரத்தை உங்களால் உணர முடியும். அந்த சமயங்களில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், நீங்கள் தொடர்ச்சியாக மிகவும் ஆக்ரோஷமாக இரும வேண்டும்.

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்பும் மூச்சை மிக வேகமாக இழுத்து விட வேண்டும். அந்த இருமல் மிகவும் ஆழமானதாக இருக்க வேண்டும்.

அப்படி இருமுகின்ற பொழுது, இதயம் இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப ஆரம்பிக்கும். அப்படி இதயம் இயல்பு நிலைக்குத் திரும்பும்வரையில், அல்லது அடுத்தவருடைய உதவி கிடைக்கும் வரையில், ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் ஒருமுறை மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும். அதேசமயம் ஆழமாக இருமிக் கொண்டே இருக்க வேண்டும்.

MOST READ: இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா?

இதயத் துடிப்பு

இதயத் துடிப்பு

மூச்சை நன்கு இழுத்து விடுவதனால் நுரையீரலுக்கு ஆக்சிஜன் சீராக எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது. அதேபோல் வேகமாக இருமுவதால், இதயத் துடிப்பு நின்றுவிடாமல் தொடர்ந்து துடித்துக் கொண்டே இருப்பதற்குத் துணை புரிகிறது. ரத்த ஓட்டமும் சீரடையும்.

வேகமாக இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயத் துடிப்பு சீராக இருக்கும். பின்னர் இதயம் துடிப்பு சீரடைய ஆரம்பித்ததும் மருத்துவமனைக்குச் செல்லலாம்.

மிளகாய்ப் பொடி

மிளகாய்ப் பொடி

மிளகாய்ப் பொடி மாரடைப்பு ஏற்படுகிறவர்களுக்கு உயிர் காக்கும் மருந்து என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

தேவையான பொருள்கள்

மிளகாய் பொடி - 1 ஸ்பூன்

தண்ணீர் - 1 டம்ளர்

செய்முறை

ஒரு டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் மிளகாய்ப் பொடியை போட்டு, நன்கு கலக்கி வேகமாகக் குடித்துவிட வேண்டும். அப்படி குடிக்கும் போது, தொண்டையில் வேகமாகப் புரையேறும். புரையேறும்போது, நின்று போவது போல் இருக்கும் இதயத் துடிப்பு மிளகாய்ப் பொடியின் தூண்டுதலால், புரையேறி துடிக்க ஆரம்பிக்கும்.

புரையேறி முடித்ததும் இதயம் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வர ஆரம்பிக்கும். அதன் பின்பு யாருடைய துணையுடனாவது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

MOST READ: இந்த ராசிக்காரர்கள் எங்க போனாலும் அங்க ஒரே பஞ்சாயத்துதான்... இது உங்க ராசி இல்லயே?

வெங்காயச் சாறு

வெங்காயச் சாறு

வெங்காயச் சாறும் சிறந்த பலனைத் தரும். வீட்டில் தனியாக இருக்கும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டால், உடனடியாக வேகமாக இருமுவதன் அருமையைப் பற்றி பார்த்தோம். அப்படி இருமிக் கொண்டே வெங்காயத்தை நசுக்கி, அதனுடைய சாறினை சிறிதளவு காதுக்குள் விட வேண்டும்.

இப்படி சின்ன சின்ன விஷயங்களை மனதுக்குள் கவனமாக வைத்துக் கொண்டால் போதும் தனிமையில் இருக்கின்ற பொழுது, மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று மனதுக்குள் வைத்துக் கொண்டாலே போதும். மருத்துவமனைக்குச் செல்லும் வரை இதயத் துடிப்பை சீரடைய வைத்து மருத்துவமனைக்குச் செல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

precautions for heartattack while you are alone

here we are discussing and giving some important tips and precautions for heartattack while you are alone.
Desktop Bottom Promotion