For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பிரமீடில் இருக்கற மம்மீஸ்க்கு ஹார்ட் அட்டாக் வருதாம்... இன்னும் நிறைய சுவாரஸ்யம் இருக்கு படிங்க

  |

  இதய நோய்கள் பற்றி நீங்கள் அறிந்திராத சுவராஸ்யமூட்டும் தகவல்கள் பல இருக்கின்றன. கேட்டால் மிகவும் ஆச்சர்யப்படுவீர்கள். இதை படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.

  history of heart disease

  இப்பொழுது எங்கு பார்த்தாலும் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த இதய நோய்கள் ஆண்கள் பெண்கள் என்று பாரபட்சம் இல்லாமல் எல்லாரையும் தாக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. அதிலும் முந்தைய காலங்களில் 50 வயதை கடந்த பிறகு வந்த இதய நோய்கள் இப்பொழுது எல்லாம் 25 வயது இளைஞர்களை கூட விட்டு விடுவதில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் இதய நோய்கள் சர்வ சாதாரணமாக உள்ளது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கணக்கெடுப்பு

  கணக்கெடுப்பு

  நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கணக்கெடுப்பு படி அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் இந்த மாரடைப்பு நோயால் 4 மரணங்கள் நிகழ்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடத்திற்கும் 735,000 அமெரிக்க மக்கள் இந்த மாரடைப்புக்கு உள்ளாகின்றன என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

  அமெரிக்காவை பொருத்த வரை உயிரை பறிக்கும் நோய்களில் இந்த இதய நோய்கள் தான் முதலிடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  காரணங்கள்

  காரணங்கள்

  மரபணு ரீதியாக இந்த பாதிப்பு ஏற்பட்டாலும் முக்கியமாக காரணமாக இருப்பது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மட்டுமே.

  ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற் பயிற்சியின்மை, புகையிலை பழக்கம், ஆல்கஹால், மன அழுத்தம் போன்ற அமெரிக்க வாழ்க்கை முறை இந்த இதய நோய்கள் ஏற்பட பெரும் காரணியாக அமைகிறது.

  இந்த இதய நோய்கள் பற்றிய வரலாற்றை இப்பொழுது காண்போம்.

  எகிப்திய பரோக்கள்

  எகிப்திய பரோக்கள்

  2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள புளோரிடா மகாணத்தில் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய ஆராய்ச்சி படி, சுமார் 3500 ஆண்டுகள் வயதான எகிப்திய மம்மிகளை ஆராய்ச்சி செய்தனர். அப்பொழுது அவர்களுக்கு இதய நோய்கள் இருப்பது தெரிய வந்தது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆத்தோஸ் கிளெரோசிஸ் (தமனிகள் குறிகிய நிலை) பாதிப்பு இருந்துள்ளது.

  கி. மு 1203-ல் இறந்த பார்வோன் மெரெப்டா ஆத்தோஸ் கிளெரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது அவரது மம்மி உடலை ஆராய்ச்சி செய்த போது தெரிந்தது. 16 மம்மிகளை ஆராய்ச்சி செய்ததில் 9 மம்மிகள் இதய நோயால் பாதிப்படைந்து இருந்தனர்.

  வாத்துக்கறி

  வாத்துக்கறி

  இந்த பிரச்சினை எதனால் ஏற்பட்டது என்றால் அந்த காலத்தில் எகிப்தியர்கள் மேற்கொண்ட உணவுப் பழக்கமே காரணமாகும். அதிக கொழுப்பு மாமிச உணவுகளான கால்நடைகள், வாத்துகறி, சீஸ் போன்றவற்றை எடுத்து வந்துள்ளனர் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்த ஆய்வில் ஏற்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள் இன்னும் இந்த ஆராய்ச்சியை பல கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றும் நோயை கண்டறிவதற்கான முழுமையான காலணியை கண்டறிய வேண்டும் என்றும் முதன்மை ஆராய்ச்சியாளர் கார்டியலஜி டாக்டர் கிரிகோரி தோமஸ் கூறினார்.

  கரோனரி தமனி நோய் ஆரம்ப கண்டுபிடிப்பு

  கரோனரி தமனி நோய் ஆரம்ப கண்டுபிடிப்பு

  நாகரீகம் வளர்வதற்கு முன் இதயத்தில் ஏற்படும் கரோனரி தமனி நோயை கண்டறிவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆயினும் லியோனார்டோ டா வின்சி (1452-1519) கரோனரி தமனிகளை ஆய்வு செய்ததாக அறியப்பட்டுள்ளது.

  வில்லியம் ஹார்வி (1578-1657) மற்றும் கிங் சார்லஸ் மருத்துவர்கள் இதயத்தில் இருந்து மற்ற உடலுறுப்புகளுக்கு இரத்தம் சுழற்சி முறையில் செல்கிறது என்பதை கண்டறிந்தனர்.

  ஹேல்லே பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியராக இருந்த ப்ரீட்ரிக் ஹோஃப்மான் (1660-1742), கரோனரி தமனி பாதிப்பு என்பது இரத்த ஓட்ட பாதையை சுருங்க வைத்து விடும் என்பதை "Drug Discovery: Practices, Processes, and Perspectives என்ற புத்தகம் தெளிவாக கூறுகிறது என்கிறார்.

  ஆஞ்சினோதெரபி

  ஆஞ்சினோதெரபி

  ஆஞ்சினோ பாதிப்பு என்பது மார்பு இறுக்கமடைந்து ஒரு விதமான அசெளகரியத்தை ஏற்படுத்தும் இதய நோயாகும். இந்த நோய் பற்றிய புரிபடாத தகவல்கள் முதலில் 18-19 ஆம் நூற்றாண்டில் இருந்த நிறைய மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

  முதன் முதலில் வில்லியம் ஹெபெர்ட்டென் என்பவர் 1768 ல் இது குறித்து விவரித்ிு கூறினார். நிறைய பேர்கள் கரோனரி தமனிகள் சுழற்சியில் ஈடுபடுவதாக நம்பினர். இருப்பினும் மற்றவர்கள் இந்த ஆஞ்சினோ பாதிப்பில்லாத விஷயமாக இருப்பதாக கனட ஜர்னல் ஆஃப் கார்டியாலஜி கருத்தை கொண்டு தெரிவித்தனர்.

  வில்லியம் ஓஸ்லர் (1849-1919), இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் மருத்துவ மருத்துவ பேராசிரியராக இருந்தார். இவர் ஆஞ்சினா பற்றிய முழு வேலையில் ஈடுபட்டார். இது நோயின் முதல் குறியீடாக உள்ளது என்றும் முதன் முதலில் தெரிவித்தவர் இவர் தான்.

  1912 ஆம் ஆண்டில், அமெரிக்க கார்டியலஜிஸ்ட் ஜேம்ஸ் பி. ஹெரிக் (1861-1954) இவரின் முடிவானது கரோனரி தமனி அடைப்பு அப்படியே படிப்படியாக ஆஞ்சினோவிற்கு வழி வகுக்கும் என்கிறார்.

  இதய நோய்களை கண்டறிதல்

  இதய நோய்களை கண்டறிதல்

  1900 ஆம் ஆண்டுகளில் அதிகரித்த ஆய்வு மற்றும் தகவல்கள் இதய நோய்கள் பற்றிய புரிதலை நமக்கு கொடுத்தது. 1915 ல் மருத்துவர்கள் மற்றும் சமூக தொழிலாளர்கள் சேர்ந்து நியூயார்க் நகரத்தில் இதய நோய்க்கான தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கான சங்கம் என்று அமைக்கப்பட்டது.

  1924 ஆம் ஆண்டில் பல இதய சங்கம் குழுக்கள் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசனாக வளர்ச்சி பெற்றது. இதில் பங்குபெற்ற மருத்துவர்கள் இதய நோய்கள் பற்றி ஒரு சிறுதளவு மட்டுமே அறிந்திருந்தனர். இதனால் அவர்கள் இதய நோயாளிகளுக்கு முழுமையான நம்பிக்கையான சிகச்சை அளிக்க முடியவில்லை.

  சில வருடங்களுக்கு பிறகு மருத்துவர்கள் கத்திரீட்டர் மூலன் கரோனரி தமனிகளை ஆராய்ச்சி செய்ய முற்பட்டனர். இது கரோனரி ஆஞ்சியோகிராம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டது. இப்பொழுது இந்த பரிசோதனை மூலம் கரோனரி தமனி நோய் பாதிப்பு இருப்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சையும் மேற்கொள்ள இப்பொழுது முடிகிறது.

  அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜி படி, போர்த்துகீசிய மருத்துவர் எகாஸ் மொனிஸ் (1874-1955) மற்றும் ஜெர்மன் மருத்துவர் வெர்னர் ஃபோர்ஸ்மேன் (1904-1979) இருவருமே இந்த துறையில் சிறந்து புகழ் பெற்று விளங்கினர் .

  1958 ஆம் ஆண்டில், க்ளீவ்லேண்ட் கிளினிக்கின் குழந்தைகளுக்கான இதய நோய் நிபுணரான எஃப். மேசன்சோன்ஸ் (1918-1985), கொரோனரி தமனிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறிவதற்கான படங்களை எடுப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கினார். இந்த புதிய சோதனை முதல் முறையாக சாத்தியமான கரோனரி தமனி நோயை துல்லியமாக கண்டறிய உதவியது .

  உணவுப் பழக்கம்

  உணவுப் பழக்கம்

  1948 ஆம் ஆண்டு தேசிய இதயத் துறை (தற்போது தேசிய இதயம், நுரையீரல் மற்றும் இரத்த அமைப்பு என்று அழைக்கப்படுகிறது). இந்த அமைப்பு மருத்துவர்கள் இதய நோய்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக ஃபிரேமிங் ஹாம் ஹார்ட் என்ற படிப்புக்கு வழி வகுத்தது. இது தொடர்பான தகவல்கள் லான்சட் இதழை மையமாகக் கொண்டு உருவானது.

  19491ஆம் ஆண்டில் ஆத்ரோ கிளெரோசிஸ் என்பது நோய்களின் சர்வதேச வகைப்படுத்தல் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் இதய நோய்களின் மூலம் இறப்பவர்களின் விகிதம் தீவிரமாக கணக்கெடுக்க பட்டது.

  1950 களின் தொடக்கத்தில், கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜான் கோஃப்மன் (1918-2007) மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து இரண்டு விதமான கொலஸ்ட்ரால் அமைப்பை கண்டறிந்தனர். அது தான் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்), உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) என்று வகைப்படுத்தப்பட்டது. இந்த கண்டுபிடிப்பின் படி ஆத்ரோ கிளெரோசிஸ் வரக் காரணம் அதிகமான LDL கொலஸ்ட்ரால் மற்றும் குறைந்த அளவு HDL கொலஸ்ட்ரால் விகிதமே ஆகும்.

  1950 களில், அமெரிக்க விஞ்ஞானி அன்ஸல் கீஸ் (1904-2004) ல் இதய நோய்த் தொடர்பான ஒரு பயணத்தை மத்திய தரைக்கடல் பகுதியில் மேற்கொண்டார். மத்திய தரைக்கடல் பகுதி மக்கள் குறைந்த கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொண்டு வந்தததால் அவர்களுக்கு இதய நோய்கள் அரிதாக ஏற்பட்டது என்பது இதன் மூலம் தெரிய வந்தது. அதே மாதிரி ஜப்பானியர்களும் குறைந்த கொழுப்பு உணவை எடுத்துக் கொள்வதால் குறைந்தளவு இதய நோய்களை சந்திக்கின்றனர். இதிலிருந்து சேச்சுரேட்டேடு கொழுப்புகள் உங்களுக்கு இதய நோய்கள் வரக் காரணமாக அமைகிறது என்பது தெரிய வந்தது.

  இந்த தொடர்ச்சியான ஆராய்ச்சிகளின் முன்னேற்றம் மற்றும் ஃப்ரேமிங்ஹாம் ஹார்ட் தகவல்கள் படி அமெரிக்கர்கள் தங்கள் இதய நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க முதல் முயற்சிகளை மேற்கொண்டனர்.

  எதிர்காலத்தில் இதய நோய்கள்

  எதிர்காலத்தில் இதய நோய்கள்

  1960 மற்றும் 1970 களில் பைபாஸ் அறுவைசிகிச்சை மற்றும் பெர்குட்டினியன் பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற சிகிச்சைகள் இதய நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு முதன்முதலாக பயன்படுத்தப்பட்டன,இதற்கான நடவடிக்கைகளை கார்டியோவாஸ்குலர் ஆஞ்சியோ கிராபி சங்கம் மேற்கொண்டது.

  1980 களில், அடைத்த ஒரு குறுகிய தமனியை திறக்க உதவுவதற்கு ஸ்டெண்ட்ஸின் பயன்பாடு நடைமுறைக்கு வந்தது. இதனால் இதய நோய்களால் ஏற்படும் இறப்பு தடுக்கப்பட்டது. இதய நோய்க்கு இறப்பு என்ற வார்த்தையே அடியோடு காணாமல் போனது.

  மேலும், 2014 ஆம் ஆண்டில், ஸ்கிரிப்ட்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஒரு புதிய இரத்த பரிசோதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை முன்னரே கண்டறிய முடிந்தது

  அதே நேரத்தில் மருத்துவர்கள் கொழுப்பு உணவுகள் பற்றிய தவறான கருத்துக்களை மாற்றவும் முயற்சி செய்தனர். ஏனெனில் சேச்சுரேட்டேடு கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் இதய நோய்கள் எல்லாம் தொடர்புடையதாக உள்ளது. அதே நேரத்தில் சில கொழுப்புகள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  என்ன சாப்பிடலாம்?

  என்ன சாப்பிடலாம்?

  அன்சேச்சுரேட்டேடு கொழுப்புகள் ஒட்டுமொத்த கெட்ட கொழுப்பு களின் அளவை குறைத்து இதயத்தை காக்கிறது. இதில் மோனோசேச்சுரேட் கொழுப்பு, பாலி அன்சேச்சுரேட் கொழுப்பு, ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நல்லது.

  ஆலிவ் ஆயில், எள் எண்ணெய், கடலை எண்ணெய், பாலி அன்சேச்சுரேட் கொழுப்பு, ஓமேகா 3 கொழுப்பு அமில உணவுகள், மீன்கள், வால்நட்ஸ், பிரேசில் நட்ஸ் போன்றவற்றில் உள்ளது.

  முடிவுரை

  முடிவுரை

  தற்போது இந்த கரோனரி தமனி நோயை எப்படி சிகிச்சை செய்வது என்பது தெரிய வந்து விட்டது. இதன் மூலம் நாம் வாழும் காலமும் நீடிக்க பட்டு உள்ளது. இதய நோய்களை குணப்படுத்துவதில் மருத்துவ முறை முதலிடத்தில் முன்னேற்றம் கண்டு உள்ளது. ஆனால் இந்த ஆராய்ச்சி முன்னேற்றம் இதோடு நின்று விடப் போவதில்லை. ஒரு நாள் இதய நோய்கள் மனித வரலாற்றிலிருந்தே அழிக்கப்பட வேண்டும் அதற்கு நாம் நீண்ட தூரம் நாம் செல்ல வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  he History of Heart Disease from egyptian mummies to the present

  do you know The History of Heart Disease from egyptian mummies to the present? just read this.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more