இந்தியாவில் இதய நோயினால் உண்டாகும் இறப்பின் சதவீதம் 23% உயர்வு. காரணம் என்ன?

Posted By: SuganthiI Rajalingam
Subscribe to Boldsky

நமது இந்தியாவில் ஒரு வருடத்தில் 23% நோயாளிகள் இதயம் செயலிழப்பால் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஆப்பிரிக்காவை எடுத்து கொண்டால் 34% உயிரிழந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மொத்த இறப்பு விகிதத்தில் 46% இதய நோய்களாலும் 16% மற்ற நோய்களாலும் ஒரு வருடத்தில் இறந்துள்ளனர். முதன் முதலில் உலகளாவிய அளவில் இதயம் செயலிழப்பு பற்றிய ஆராய்ச்சியானது நான்கு இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

23 Percent Of Heart Failure Patients Die Within A Year Of Diagnosis

தே இன்டர்நேஷனல் கான்கெஸ்டிவ் ஹாட் ப்யிலியர் (INTER-CHF) மேற்கொண்ட ஆராய்ச்சி படி தெற்கு ஆசியாவில் இதயம் செயலிழப்பால் உயிரழந்தவர்கள் 15%, சைனாவில் 7%, தெற்கு அமெரிக்கா மற்றும் வடக்கு ஆசியாவில் 9% ம் பதவி செய்யப்பட்டுள்ளது. இந்த சதவீதம் இந்தியாவை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.

இந்தியாவை பொருத்த வரை அதிகமானோர் இதயம் செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். சரியான விழிப்புணர்வு இல்லாததாலும், போதுமான மருத்துவ இட வசதி மற்றும் பண வசதி இல்லாததாலும் நிறைய பேர்கள் இதய நோய்களால் அவதிப்படுகின்றனர் என்று சன்தீப் மிஸ்ரா புரபொசர் ஆஃப் கார்டியோலாஜி அட் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் ஸ்சைன்ஸ் (AIIMS) அவர்கள் கூறுகிறார்.

மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் போதுமான வாழ்க்கை தரம் இல்லாததால் நிறைய தொற்று நோய்கள் பரவி இதய நோய்களும் ஏற்பட நிறைய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. வருமானம் குறைவாக வருகின்ற வளர்ந்து வரும் நாடான இந்தியா போன்ற நாடுகளில் இதை தடுக்க முதற்படியாக உடல் நலப் பாதுகாப்பு வசதிகள் கொஞ்சம் அதிகமாகவே தேவைப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சியானது ஒரு வருடம் முழுவதும் ஒரு மனிதனின் இறப்பின் காலளவின் கணக்கீடு பற்றி சில நாடுகளான இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடு, தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

இந்த ஆராய்ச்சியின் போது 5823 நோயாளிகள் 108 மையத்தின் கீழ் 6 இடங்களில் அவர்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர். இது 6 மாதம் மற்றும் ஒரு வருடத்திற்கான கண்காணிப்பு முறையாகும். அவர்களின் சராசரி வயது 59 வருடமும், ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி விகிதம் 60:40 ஆகும்.

23 Percent Of Heart Failure Patients Die Within A Year Of Diagnosis

ஒரு வருடத்தில் அவர்களின் இறப்பு விகித தகவலை சேகரித்தனர்.

முந்தைய ஆராய்ச்சி தகவல் படி பார்த்தால் AIIMS தன் தகவல்களை பிராக்டிஸ் ஆஃப் கார்டியோவாஸ்குலார் என்ற நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி 1/3 பங்கு நோயாளிகள் மருத்துவமனை சேர்ப்பிலயே இறந்து விடுகின்றனர். 1/4 பங்கு நோயாளிகள் 3 மாதம் சிகச்சைக்கு பிறகு இதயம் செயலிழப்பால் இறக்கின்றனர் என்று அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரச்சினையை ஒரு சமூகம் வகையில் கவனிக்க வேண்டும் என்று மிஸ்ரா கூறுகிறார். ஏனெனில் நிறைய இந்தியர்களுக்கு இதயம் செயலிழப்பு மற்றும் ஹார்ட் அட்டாக் இரண்டுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை என்று அவர் கூறுகிறார். இதற்கு அவர்கள் மருத்துவரையும் நாடுவதில்லை கருத்துக்களை தெரிவிக்கிறார்.

இதயம் செயலிழப்பு என்பது இதயத்தில் உள்ள இரத்த குழாய்கள் இரத்தத்தை பம்ப் செய்வது குறைகின்ற செயலாகும். ஹார்ட் அட்டாக் என்பது கோரோனரி சர்குலேசன் தடைபடுவதால் இதய தசைகளுக்கு போகின்ற இரத்த ஓட்டம் தடைபட்டு ஏற்படுவது ஆகும்.

இதில் இதயம் செயலிழப்பு என்பது உங்கள் எதிர்கால வாழ்க்கையை கொன்று உங்களை இறப்பிற்கு கொண்டு செல்லும் ஒரு அபாயகரமான நிலையாகும் என்று IANS(INDIAN Asian News service) ல் இதயம் செயலிழப்பின் தீவிரத்தை மிஸ்ரா தெரிவிக்கிறார்.

வேர்ல்டு ஹெல்த் ஆர்கனிஷேசன் கருத்துப் படி உலகளவில் 60 மில்லியனுக்கு அதிகமானோர்இதயம் செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த இதயம் செயலிழப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளின் மருத்துவ செலவு தீவிர புற்று நோயை காட்டிலும் அதிகம். உலகப் பொருளாதார அடிப்படையில் தற்போது இதற்காக ஒரு வருடத்திற்கு ஆகும் செலவு $108 பில்லியன் ஆகும்.

23 Percent Of Heart Failure Patients Die Within A Year Of Diagnosis

இந்த இதயம் செயலிழப்பு எப்பொழுது வேண்டுமானாலும் எந்த வயதிலும் வரலாம். இருப்பினும் தோராயமாக 65 வயதுள்ள மக்களுக்கு இது அதிகமாக ஏற்படுகிறது. இதனுடன் அதிக இரத்த அழுத்தம், முதல் கட்ட ஹார்ட் அட்டாக், இதயம் விரிவடைதல் மற்றும் டயாபெட்டீஸ் போன்றவைகளும் அடங்கும்.

இந்த இதயம் செயலிழப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும் மற்றும் அதன் அறிகுறிகள் கால தாமதமாக தெரிவதாலும் நிறைய பேர்கள் இறக்கின்றனர் என்று மிஸ்ரா கூறுகிறார்.

இந்த இதயம் செயலிழப்பை குணப்படுத்த முடியாது. ஆனால் இதை முன்னரே கண்டறிந்து அதற்கான மருத்துவ சிகச்சைகளையும், வாழ்க்கை முறைகளையும் மாற்றிக் கொண்டால் நீண்ட நாட்கள் சந்தோஷமாக வாழலாம்.

மேலும் இதைப் பற்றிய விழிப்புணர்வையும், அதன் அறிகுறிகளையும், முன்னரே கண்டுபிடித்து சிகச்சை மேற்கொள்ளும் தகவலையும் மக்களிடையே கொண்டு சேர்ப்பது மிகவும் முக்கியம் என்று மிஸ்ரா கூறுகிறார்.

English summary

23 Percent Of Heart Failure Patients Die Within A Year Of Diagnosis

23 Percent Of Heart Failure Patients Die Within A Year Of Diagnosis