For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் உடல் பருமனை குறைக்க நீங்க செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!!

உடல் எடையை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிக நீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் எடையை குறைக்க முடியும் என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Ambika Saravanan
|

எடை அதிகரிப்பதற்கு கொழுப்புகள் உடலில் அதிகமாக இருப்பது மட்டும் காரணம் இல்லை. சில நேரங்களில் நீர் உடலில் அதிகமாக இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும்.

5 ways to lose your weight and get a healthy life

நீரால் ஏற்படும் எடை அதிகரிப்பை ஏழு நாட்களில் குறைக்க முடியும். மீண்டும் உங்கள் இயல்பான எடையை கொண்டு வர முடியும். உட எடைக்கு மட்டுமல்ல இந்த 5 விஷயங்களை கடைபிடித்தால் ஆரோக்கியமான இதயம், நோயற்ற வாழ்வு பெறலாம். அதனை பற்றியதுதான் இந்த தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அதிகம் நீரை பருகுங்கள்:

அதிகம் நீரை பருகுங்கள்:

முள்ளை முள்ளால் எடுப்பது போல், நீரை நீர் கொண்டு வெளியேற்றுவது தான் இந்த முறை. நீர் வறட்சி அதிகரிக்கும்போது உடல் நீரை சேமித்து வைக்க முயற்சிக்கும் . ஆகவே அதிகமாக நீரை பருகுவதன் மூலம் நீர் வறட்சி குறைந்து உடலின் திரவ நிலை சமன் படும். இதனால் உடல் எடை குறையும்.

இதயத்திற்கான பயிற்சிகள்:

இதயத்திற்கான பயிற்சிகள்:

ஓட்ட பயிற்சி, ஸ்கிப்பிங், சைக்கிளிங் போன்ற இதயத்திற்கு நலம் சேர்க்கும் பயிற்சிகளை ஒரு நாளில் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும். இதனால் அதிக வியர்வை வெளிப்படும். வியர்வை வழியாக உடலில் அதிகம் உள்ள நீர், மற்ற நச்சுக்கள், வீக்கம் போன்றவை குறைந்து உடல் மெலியும்.

தூக்கம் :

தூக்கம் :

நீங்கள் பொதுவாக தூங்கும் நேரத்தை விட 1 மணி நேரம் அதிகமாக தூங்குங்கள். இதனால் உங்கள் எடை குறையும். தூங்கி எழுந்தவுடன் நீங்கள் பிரெஷ்ஷாக உணர்வீர்கள். நிறைய உடற்பயிற்சி செய்வீர்கள்.

இதனால்உடலில் நீரின் அளவு குறையும் . உங்கள் எடையும் குறையும். தூக்கத்தில் கிடைத்த புத்துணர்ச்சியால் ஆரோக்கியமான உணவுகளையும் உண்ண முடியும். இதுவும் உங்கள் எடை குறைப்பிற்கு காரணமாகலாம்.

உப்பு மற்றும் கார்போஹைடிரேட்:

உப்பு மற்றும் கார்போஹைடிரேட்:

உப்பிற்கு தண்ணீரை சேமித்து வைக்கும் திறன் உண்டு. இப்படி சேமித்து வைக்கும் நீரால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. ஆகையால் விரைவான தீர்வுகளுக்கு உங்கள் உணவில் உப்பை குறைக்க வேண்டும்.

மாலையில், உப்பில்லாத அல்லது குறைந்த உப்பு கொண்ட சிற்றுண்டிகளை சுவைக்க வேண்டும். கலோரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கார்போ உணவுகளையும் குறைக்க வேண்டும். அதற்காக முழு கோதுமை, ஓட்ஸ், தானியங்கள் போன்றவற்றை முழுதும் தவிர்க்க வேண்டாம். ஜங்க் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

நார்ச்சத்து :

நார்ச்சத்து :

எடை குறைப்பிற்கு முக்கியமான தேவை நார்ச்சத்து. பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் அதிகமான நார்ச்சத்து கிடைக்கிறது. நார்ச்சத்துள்ள உணவுகள் செரிமான பாதையில் விரைவாக பயணித்து ஜீரணிக்கின்றன. நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. மற்றும் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து , பசியை விரட்டும் . ஆகவே உங்கள் எடையும் குறையும்.

நீரின் மூலம் அதிகரிக்கும் எடையை போக்குவதற்கான வழிகளை தெரிந்து கொண்டோம். இதனை முயற்சித்து 7 நாட்களில் உங்கள் எடையை குறைத்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 ways to lose your weight and get a healthy life

5 ways to lose your weight and get a healthy life
Story first published: Tuesday, September 26, 2017, 10:53 [IST]
Desktop Bottom Promotion