எனர்ஜி ட்ரின்க் குடிப்பதால் இதயம் எந்தளவு பலவீனம் அடைகிறது?

Posted By:
Subscribe to Boldsky

இனிமேல் எனர்ஜி ட்ரின்க் பருகும் போது ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்துவிட்டு குடியுங்கள். நீங்கள் குடிக்கும் எனர்ஜி ட்ரின்க் உங்கள் இதய நலனை ஸ்ட்ரா போட்டு குடித்துக் கொண்டிருக்கிறது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீங்கள் எனர்ஜி ட்ரின்க் குடித்த சில நிமிடங்களிலேயே இதய நலனில் தாக்கம் ஏற்பட ஆரம்பித்துவிடுகிறது. இதய நலன் சீர்கேடு, இரத்த அழுத்தம் அதிகரிப்பது, இதய துடிப்பில் தாக்கம் என நிறைய இதய பாதிப்புகளை இது உண்டாக்குகிறது என அரிசோனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி

ஆராய்ச்சி

18 - 40 வயதுக்குட்பட்ட 27 ஆரோக்கியமான நபர்களை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், வாரத்திற்கு ஆறுநாள் இரண்டு முறை வீதம் இவர்கள் மூன்று வாரத்திற்கு எனர்ஜி பானம் பருக வேண்டும் என உரைக்கப்பட்டது.

பரிசோதனை

பரிசோதனை

இவர்கள் எனர்ஜி பருகும் முன்னரும், பருகியதற்கு பிறகு ஒவ்வொரு நான்கு மணி நேர இடைவேளையில் மூன்று முறையும் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

இவ்வாறு மூன்று வாரம் ஆராய்ச்சி நடத்தி முடித்த பிறகு இவர்களிடம் இரத்த அழுத்தம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் இவர்களது இதய துடிப்பு நலனிலும் தாக்கம் ஏற்பட்டிருந்தது.

இரண்டு மணிநேரத்தில்

இரண்டு மணிநேரத்தில்

நீங்கள் எனர்ஜி ட்ரின்க் பருகிய இரண்டு மணி நேரத்திலேயே இதய நலனில் தாக்கம் ஏற்பட ஆரம்பிக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆய்வாளர்கள்

ஆய்வாளர்கள்

இந்த ஆய்வை அரிசோனாவில் உள்ள அமெரிக்கன் இதய அசோசியேஷனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Energy Drinks Can Make Your Heart Weak

Energy Drinks Can Make Your Heart Weak, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter