For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

74% இந்தியர்களுக்கு இதய நோய்: நீரிழிவின் தலைநகரம் சென்னை

By Mayura Akilan
|

Heart
இந்தியாவின் நகர்புறங்களில் வசிக்கும் 74 சதவிகிதம் பேருக்கு இதயநோய் பாதிப்பு உள்ளது. சென்னை மாநகரம் நீரிழிவின் தலைநகரமாக மாறிவருகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டு நாடுமுழுவதும் மருத்துவத்துறை சார்பில் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.

இளைய தலைமுறை பாதிப்பு

இந்தியாவில் மொத்தம் 22 முக்கிய நகரங்களில் 1.02 லட்சம் பேர் இதில் பங்கேற்றனர். 40 முதல் 44 வயதுடைய பெண்கள் 72 சதவிகிதம் பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளது இந்த கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதேபோல் 30 முதல் 34 வயதுடையவர்களில் 57 சதவிகிதம் பேர் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாறிவரும் வாழ்க்கை முறை

உடல் உழைப்பு குறைந்துள்ளதும், உடற்பயிற்சி இல்லாத காரணத்தினாலும்தான் இளைய தலைமுறையினர் இதயநோய்க்கு ஆளாகின்றனர் என்று ஆய்வினை மேற்கொண்ட இதயநோய் மருத்துவ நிபுணர் சோமசுந்தரம் கூறியுள்ளார். புகைப்பழக்கம், மாறிவரும் வாழ்க்கை முறை போன்றவைகளும் இதயநோய் ஏற்படக் காரணமாகின்றன.

அதிகரிக்கும் உயிரழப்பு

1990 களில் 30-44 வயதுவரை உடைய 11,75,0000 பேர் இதயநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 25,84,000 ஆக அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 6ல் ஒரு இளைஞர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதும் இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உடல்பருமனால் இதயநோய்

எல்லா நகரங்களிலும் இந்நோயின் தாக்கம் ஒரே மாதிரியாக இல்லை.. உணவுப்பழக்கங்கள், தவறான சில பழக்கங்களே இதய நோய் பாதிப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூர்,டெல்லி, மும்பை, அகமதாபாத், சண்டிகர் போன்ற நகரங்களில் வசிப்போர் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனால் இதயநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 57 சதவீத பெண்களுக்கு 30 வயதிலேயே பாதிப்புகள் காணப்படுகின்றன.

நீரிழிவின் தலைநகரம்

சென்னை மாநகரை பொறுத்தவரை 23 சதவீதம் பேர் இதய நாள நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கே இந்நோய் அதிகளவில் உள்ளது. தவிர 17 சதவீதம் பேர் சர்க்கரை நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக சென்னை ‘நீரிழிவின் தலைநகரம்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அடுத்த இடத்தில் ஐதராபாத், பெங்களூர் நகரங்கள் உள்ளன.

English summary

74 per cent urban Indians at risk of heart disease: Study | 74% இந்தியர்களுக்கு இதய நோய்: நீரிழிவின் தலைநகரம் சென்னை

Changing lifestyle pattern, coupled with lack of physical exercise has put 74 per cent of urban Indians at risk of suffering from cardiovascular diseases (CVD), a recent study has revealed.
Story first published: Wednesday, December 5, 2012, 15:13 [IST]
Desktop Bottom Promotion