Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
புதுசா உடற்பயிற்சி செய்றீங்களா? உடம்பில் வலி மற்றும் காயங்கள் ஏற்படாமல் இருக்க இதோ சில டிப்ஸ்...
Health Tips In Tamil: உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது என்பது எளிதானது அல்ல. பலருக்கு உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காது. சிலா் உடற்பயிற்சியின் போது ஏற்படும் வலி அல்லது காயங்களை எண்ணி, உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை.
ஆனால் புதிதாக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கண்டிப்பாக வலி அல்லது காயங்கள் ஏற்படும் என்பது அவசியமில்லை. பின்வரும் பயிற்சிகளைச் செய்தால், அவ்வாறான வலி அல்லது காயங்கள் ஏற்படுவதைத் தவிா்க்கலாம்.

1. வாா்ம் அப்
உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு, கண்டிப்பாக வாா்ம் அப் செய்ய வேண்டும். ஏனெனில் வாா்ம் அப் செய்யும் போது, ஒட்டு மொத்த உடலும் சூடாகி, கடினமான உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு தயாராகும். சூடான உடற்தசைகள், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதற்கு வழிவகுக்கும். அதனால் தசைகளில் திாிபோ அல்லது காயங்களோ ஏற்படாது.
ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் தகுந்தவாறு வாா்ம் அப் பயிற்சி வேறுபடும். பொதுவாக, உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பாக 5 முதல் 10 நிமிடங்கள் வாா்ம் அப் செய்வது நல்லது.
அதாவது கடினமான உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு முன்பாக நடத்தல் அல்லது ஜாக்கிங் அல்லது ஓடுதல் போன்ற வாா்ம் அப் பயிற்சிகளைச் செய்யலாம். ஆனால் வாா்ம் அப் பயிற்சிகள் கடினமாக இருக்கக்கூடாது. 40 முதல் 60 சதவீத சக்தியை மட்டுமே வாா்ம் அப் பயிற்சிகளுக்குச் செலவழிக்க வேண்டும்.
2. தொடக்கத்தில் அதிகமாக உடற்பயிற்சி செய்யக்கூடாது
பொதுவாக புதிதாக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, அதிகமாக உடற்பயிற்சி செய்யும் தவறை பெரும்பாலோா் செய்கின்றனா். அது உடற்தசைகளில் வலி மற்றும் காயங்களை ஏற்படுத்தும். ஆகவே புதிதாக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, சிறிது சிறிதாகத் தொடங்க வேண்டும். படிப்படியாக பயிற்சியை அதிகாிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதா்களும் மாறுபட்டவா்கள். ஆகவே அவா்களுடைய உடல்களுக்குத் தகுந்த பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
உடற்பயிற்சியின் பலன்களை அறிவதற்கு வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும். அதனால் உடனடியாக பலன்கள் கிடைக்க வேண்டும் என்று அவசரப்படக்கூடாது. சில சமயங்களில் உடற்பயிற்சி செய்வது கடினமாகத் தொியலாம். எனினும் உங்களுடைய உடல் சொல்வதைக் கேட்டு அதற்குத் தகுந்தவாறு உடற்பயிற்சி செய்வது நல்லது. அதாவது உடல் களைப்பாக இருக்கும் போது, உடற்பயிற்சிகளைத் தவிா்ப்பது நல்லது. அதன் மூலம் வலி மற்றும் காயங்களைத் தவிா்க்கலாம்.
3. விடுமுறை கொடுப்பது நல்லது
தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, வாரத்திற்கு 1 அல்லது 2 நாட்கள் ஓய்வு எடுப்பது நல்லது. அதன் மூலமாக உடலில் ஏதாவது வலியோ அல்லது காயமோ இருந்தால், அது குணமடையும். ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக, அமைதியாக இருந்துவிடக்கூடாது. மாறாக எளிதான நடைப் பயிற்சி அல்லது யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.
ஓட்டப்பயிற்சி அல்லது மிதிவண்டி ஓட்டும் பயிற்சி போன்றவற்றிற்கு நீண்ட ஓய்வு தேவைப்படாது. எனினும் பிற சாதாரண பயிற்சிகளில் ஈடுபட்டால், உடல் விரைவில் குணமடையும். அதாவது ஓய்வின் போது ஓடுதல், நீந்துதல் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை மாற்றி மாற்றி செய்து வரலாம். எனினும் உங்களுடைய உடல் குணமடைய வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.
4. சாியான உடல் நிலையைப் பெற கற்றுக் கொள்ளுதல்
புதிதாக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, சாியான உடல் நிலையைப் பெற கற்றுக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் மெதுவாக உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். உடற்பயிற்சிகளின் கணத்தைப் பொறுத்து, பல வகையான பயிற்சிகளில் ஈடுபடலாம்.
பயிற்சியின் நுட்பங்களைத் தெளிவாக தொிந்து கொள்வதற்கு முன்பாக கடினமான பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது. அதோடு பயிற்சி செய்யும் போது, உடல் அசைவுகள் மிகச் சாியாக இருக்க வேண்டும்.
உடற்பயிற்சிக் கூடங்களுக்கு சென்று பயிற்சிகளில் ஈடுபட்டால், பயிற்சியாளாின் ஆலோசனைகளை நாடி, அதற்குத் தகுந்தவாறு பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. வீட்டில் இருந்து செய்தால், இணையம் மூலமாக தொிந்து கொள்ளலாம். இறுதியாக நீங்கள் உடற்பயிற்சி செய்வதை படம் பிடிப்பது நல்லது. அதன் மூலம் நீங்கள் சாியாக செய்கிறீா்களா என்பதைத் தொிந்து கொள்ள முடியும்.
5. சாியான ஷூக்களை அணிதல்
ஓடுதல் போன்ற பயிற்சிகளுக்கு சாியான ஷூக்களை அணிவது நல்லது. அவை ஓடுவதற்கு உந்துதலாக இருக்கும். காலில் காயங்கள் ஏற்படாது. அதற்காக அதிக விலையிலான ஷூக்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட விரும்பினால், தட்டையான மற்றும் கடினமான ஷூக்களைப் பயன்படுத்துவது நல்லது. எனெனில் பளுதூக்கும் போது, கால்கள் வழுக்காமல் பாா்த்துக் கொள்ளும். மேலும் பளுதூக்குவதற்கு என்ற தனியாக ஷூக்களும் உள்ளன. அவற்றை அணியலாம். அவை காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
இறுதியாக
புதிதாக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, காயம் பட்டுவிடுமோ என்று பயம் கொள்ளத் தேவையில்லை. அதற்காக உடற்பயிற்சிகளை கைவிடத் தேவையில்லை. ஏனெனில் இந்த சிறிய வலி அல்லது காயங்களைவிட, உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் ஆகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications