Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கற்றாழை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
Health Tips In Tamil: தற்போதைய காலகட்டத்தில் 30 வயதை எட்டியதும் உடலில் பலவிதமான பிரச்சனைகள் தலைத்தூக்க ஆரம்பிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான்.
எனவே நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு பானங்கள் உதவி புரிகின்றன. அதில் ஒன்று தான் கற்றாழை நெல்லிக்காய் ஜூஸ்.

இந்த கற்றாழை நெல்லிக்காய் ஜூஸில் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. ஆயுர்வேதத்தில் கூட பல்வேறு பிரச்சனைகளுக்கு கற்றாழையும், நெல்லிக்காயும் பரிந்துரைக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட இவ்விரண்டையும் அரைத்து சாறு எடுத்து ஒன்றாக உட்கொள்ளும் போது உள்ளுறுப்புக்கள் ஒவ்வொன்றிலும் உள்ள பிரச்சனை நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது கற்றாழை நெல்லிக்காய் ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
கற்றாழை நெல்லிக்காய் ஜூஸில் உள்ள சத்துக்கள்
100 கிராம் கற்றாழை நெல்லிக்காய் ஜூஸில், உடலுக்கு வேண்டிய கால்சியம், ஆற்றல், சோடியம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இது தவிர இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், செரிமானத்தை அதிகரிக்கும் பண்புகள், இரத்த சர்க்கரையைக் குறைக்கும் பண்புகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் போன்றவையும் உள்ளன.
1. அல்சரை சரிசெய்யும்
கற்றாழை நெல்லிக்காய் ஜூஸில் அல்சரை சரிசெய்யும் பண்புகள் உள்ளன. எனவே அல்சரால் அவதிப்படுபவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கற்றாழை நெல்லிக்காய் ஜூஸை குடித்து வரும் போது, அது வயிற்றில் உள்ள அல்சரை சரிசெய்யும்.
2. செரிமானம் மேம்படும்
கற்றாழை நெல்லிக்காய் ஜூஸ் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைப் போக்குவதில் சிறந்தது. நீங்கள் மலச்சிக்கல், வாய்வு தொல்லை, அஜீரண கோளாறு போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜெல்லுடன் நெல்லிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து உட்கொள்ளும் போது, உடனே சரியாகும்.
3. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் கற்றாழை நெல்லிக்காய் ஜூஸை குடிக்கும் போது, அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, இதயம் மற்றும் மூளை போன்றவற்றின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
4. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
கற்றாழை நெல்லிக்காய் ஜூஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதுவும் இந்த ஜூஸ் உடன் சிறிது பாகற்காய் ஜூஸை கலந்து குடிக்கும் போது, அது கனையத்தின் செயல்பாட்டை தூண்டிவிடுவதோடு, இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும். இதன் விளைவாக இரத்த குளுக்கோஸ் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது.
5. வயிற்று புழுக்கள் அழியும்
கற்றாழை நெல்லிக்காய் ஜூஸ் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க பெரிதும் உதவுகிறது. அதுவும் இந்த ஜூஸ் உடன் சிறிது தேனை சேர்த்து கலந்து குடிக்கும் போது, அது குடலில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றும்.
6. வைட்டமின் சி குறைபாடு நீங்கும்
நீங்கள் வைட்டமின் சி குறைபாட்டினால் அவதிப்படுகிறீர்களா? எளிதில் உடலில் வைட்டமின் சி அளவை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் கற்றாழை நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.
7. தொண்டை கரகரப்பு சரியாகும்
நெல்லிக்காய் மற்றும் கற்றாழை சாற்றை வெதுவெதுப்பான பாலுடன் எடுத்துக் கொண்டால், தொண்டையில் சிக்கியுள்ள சளி வெளியேறி, தொண்டை கரகரப்பு நீங்கும். அதுவும் அத்துடன் சிறிது நெய் சேர்த்துக் கொண்டால், இருமல் உடனே நீங்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications