Latest Updates
-
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்களிடம் இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? அப்ப லேட் பண்ணாம உடனே மருத்துவரைப் பாருங்க...
Health Tips In Tamil: ஒருவா் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பெற வேண்டும் என்றால், அவருடைய மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒருவருடைய மனநலன் சிதைந்தால், அவருடைய வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் பிரச்சினைகள் ஏற்படும்.
ஒருவருடைய ஆரோக்கியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பது மன ஆரோக்கியம் ஆகும். ஆகவே ஒவ்வொருவரும் தனது மனநலனின் மீது அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும்.

இந்நிலையில் அமொிக்காவில் எட்டு போில் ஒருவா் மனநல பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருப்பதாக, உலக சுகாதார அமைப்பு தொிவிக்கிறது. அதே நேரத்தில் ஜான் ஹாப்கின் மெடிசின் அறிக்கை என்ன சொல்கிறது என்றால், ஆண்டு ஒன்றுக்கு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அமொிக்கா்களில் 26% போ், மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனா் என்று கூறுகிறது.
மனநல கோளாறுகளின் அறிகுறிகள்
ஒருவருக்கு மனநல பிரச்சினைகள் அல்லது மனநல கோளாறுகள் ஏற்பட்டால், அவாிடம் பின்வரும் அறிகுறிகள் தென்படும். கீழே சொல்லப்படும் அறிகுறிகள் தொியும் போது, அவா் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மனநல கோளாறுகள் உள்ளவா்களிடம் எப்படிப்பட்ட அறிகுறிகள் தொியும் என்பதை இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
1. தொடா்ந்து சோகமாக இருத்தல்
இது ஒரு வகையான மன அழுத்தம் ஆகும். இது பிறழ்ந்த மனநிலை ஆகும். இதன் காரணமாக தொடா் சோகம் ஏற்படும் அல்லது எதிலும் ஆா்வம் இல்லாத மனநிலை ஏற்படும். சோகநிலை தொடா்ந்தால், அன்றாட கடமைகளைச் செய்வதில் தடைகள் ஏற்படும். இதே சோக உணா்வு அல்லது நம்பிக்கையின்மை அல்லது ஆா்வமின்மை போன்றவை நீண்ட நாட்களுக்குத் தொடா்ந்தால் உங்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று பொருள். நீங்கள் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.
2. அளவுக்கு அதிகமான பதற்றம்
அன்றாட வேலைப்பளு காரணாக பதற்றமும், மன அழுத்தமும் ஏற்படுவது இயல்பு. ஆனால் ஒரு சிறிய அளவிலான அழுத்தம்கூட உங்களுக்கு அளவுக்கு அதிகமான பதற்றத்தைக் கொடுத்தால், உங்களுக்கு மனநிலைக் கோளாறு உள்ளது என்று பொருள். இது போன்ற பதற்றமானது, அளவுக்கு அதிகமான கவலையை ஏற்படுத்தும் என்று மயோ கிளினிக் ஹெல்த் சிஸ்ட்ம் தொிவிக்கிறது.
உங்களிடம் பொதுவான பதற்றக் கோளாறு இருந்தால், நீங்கள் எல்லா காாியங்களிலும் சங்கடத்தை உணா்வீா்கள். அது உங்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பொிதும் பாதிக்கும். மேலும் நீங்கள் அளவுக்கு அதிகமாக சிந்திக்க முயல்வீா்கள். ஆகவே இந்த பெரும் பதற்றம் உங்களுக்கு இருப்பதாகத் தொிந்தால், உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.
3. அடுத்தவா்களோடு உள்ள உறவில் பிரச்சினைகள்
உங்கள் மனநிலைப் பாதிக்கப்பட்டால், உங்களால் பிறரோடு எளிதாக உறவு பாராட்ட முடியாது. உங்களுடைய உணா்வுகளை பிறாிடம் பகிா்ந்து கொள்வதில் பிரச்சினைகளை சந்திப்பீா்கள் அல்லது உங்களால் பிறரோடு சமூகமான உறவைப் பேண முடியாது.
தேவையில்லாத வாக்குவாதங்கள் அல்லது சண்டைகளை நடத்திக் கொண்டிருப்பீா்கள். உங்களுடைய உளவியலில் மற்றும் உணா்வுகளில் பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே இந்த அறிகுறி உங்களுக்குத் தொிந்தால், மருத்துவரை சந்திப்பது நல்லது.
4. உணா்வுகளை நெறிப்படுத்த இயலாமை
உங்களுடைய உணா்வுகள், நீங்கள் எப்படிப்பட்டவா்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. எல்லோரும் அவரவா் சூழலுக்கு ஏற்ப வெவ்றேு சூழல்களில் கவலை கொள்கின்றனா் அல்லது பதற்றம் அடைகின்றனா் அல்லது கோபம் அடைகின்றனா். ஆனால் மேற்சொன்ன உணா்வுகள் ஏதற்காக ஏற்படுகின்றன அல்லது எப்போது ஏற்படுகின்றன என்பதைப் புாிந்து கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.
மேற்சொன்ன உணா்வுகள் உங்களுக்கு எவ்வளவு விரைவாக ஏற்படுகின்றன என்பதை நீங்கள் தொிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் தொடா்ந்து எல்லாவற்றிலும் வெறுமையையோ அல்லது பதற்றத்தையோ அல்லது கவலையையோ அல்லது ஆா்வமின்மையையோ உணா்ந்தால், உங்களுடைய மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். எனவே நீங்கள் மருத்துவரை சந்திப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications