Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது?
Hanta Virus Outbreak: கோவிட்-19 என்னும் கொடிய வைரஸின் பிடியில் இருந்து மீண்டு வந்து சில ஆண்டுகளே ஆன நிலையில், தற்போது அந்த கோவிட்-19 வைரஸை விட அதிக வீரியம் கொண்ட ஹன்டா வைரஸ் தொற்றினால் சமீபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியுமா? இந்த வைரஸ் பற்றி இதுவரை நீங்கள் கேட்காமல் இருந்திருந்தால், இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதும் இதுக்குறித்த செய்திகள் அதிகமாக வெளிவரப் போகிறது. ஏனெனில் இந்த வைரஸ் பல நாடுகளுக்கும் பரவியிருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஏப்ரல் 01 ஆம் தேதி நெதர்லாந்தைச் சேர்ந்த 'எம்.வி.ஹேண்டியாஸ்' என்னும் சொகுசு கப்பல் அர்ஜென்டீனாவில் இருந்து கிளம்பி, மே 04 ஆம் தேதி கேப் வருடே என்னும் தீவை அடைய இருந்தது. இந்த சொகுசு கப்பலில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகள் பயணித்தனர். ஆனால் இந்த கப்பலில் பயணித்த மூவர் ஹன்டா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் மற்றும் 8 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஹன்டா வைரஸ்
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஹன்டா வைரஸ் கொறித்துண்ணிகளான எலி, பெருச்சாலி, சுண்டெலி போன்றவற்றின் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடியது. இந்த எலிகள் நிறைந்த இடத்தை சுத்தம் செய்யும் போதோ அல்லது அதன் எச்சங்கள், கழிவுகளை சுத்தம் செய்யும் போதோ, அவற்றின் எச்சம், உமிழ்நீர் அல்லது சிறுநீரில் உள்ள வைரஸ் காற்றில் பரவி, பெரும்பாலும் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுகிறது.
முக்கியமாக ஹன்டா வைரஸ் புதிய வைரஸ் ஒன்றும் இல்லை. தி லான்செட் மருத்துவ இதழின்படி, 1970களில் தென் கொரியாவின் ஹன்டான் நதிப் பகுதியில் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டதால், இந்த வைரஸிற்கு ஹன்டா வைரஸ் எனப் பெயர் வந்தது. ஹன்டா வைரஸ் இரண்டு விதமான பாதிப்பை எற்படுத்தும். அதில் ஒன்று நுரையீரலைப் பாதிக்கும், மற்றொன்று சிறுநீரங்களை பாதிக்கும். ஆனால் இவற்றில் நுரையீரல் பாதிப்பால் தான் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர்.
இப்படி நுரையீரலை பாதிக்கும் ஹன்டா வைரஸ் தொற்றை ஹன்டா வைரஸ் நுரையீரல் நோய்க்குறி (Hantavirus Pulmonary Syndrome/HPS) என்று அழைப்பர். இந்த வகை சுவாச நோய் வட மற்றும் தென் அமெரிக்காவில் பொதுவாக காணப்படுகிறது. கனடா அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 ஹன்டா வைரஸ் நுரையீரல் நோய் பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றனவாம்.
ஹன்டா வைரஸின் ஆரம்ப கால அறிகுறிகள்
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) நிபுணர்கள், ஹன்டா வைரஸ் தொற்றுகள் பெரும்பாலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தொடங்குவதாகக் கூறுகின்றனர். மேலும் காய்ச்சலைத் தொடர்ந்து பின்வரும் அறிகுறிகளும் தெரியலாம்.
* காய்ச்சல்
* குளிர்
* தசை வலி
* உடல் சோர்வு
* தலை வலி
* மயக்கம்
* அடிவயிற்றில் அசௌகரியம்
முக்கியமாக இந்த அறிகுறிகள் வைரஸால் பாதிக்கப்பட்ட 1-8 வாரங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தெரியலாம் என்றும் கூறுகின்றனர்.
ஹன்டா வைரஸ் நுரையீரல் நோய்க்குறி அறிகுறிகள்
ஹன்டா வைரஸ் நுரையீரலை மோசமாக தாக்கியிருந்தால், வைரஸ் தொற்று ஏற்பட்ட 4 முதல் 10 நாட்களுக்கு பின், இருமல், மூச்சுத்திணறல், நுரையீரலில் நீர் கோர்த்தல் போன்றவை தெரியும். இந்த வைரஸ் தொற்றை 72 மணிநேரத்திற்குள் கண்டறிவது என்பது கடினம் என்றும், இதன் அறிகுறிகள் சாதாரணமானதாக இருப்பதால் பலரும் தவறாக கருதக்கூடும் என்றும் சிடிசி அதிகாரிகள் கூறுகின்றனர்.
சிகிச்சைகள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது?
ஹன்டா வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவும் இல்லை. பெரும்பாலும் இதன் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில சமயங்களில் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் போன்ற சுவாச ஆதரவு தேவைப்படலாம்.
இந்த வைரஸ் தொற்றைத் தடுக்க எலிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் எலிகள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும். எலிகளின் தொல்லையைக் குறைக்க, உங்கள் வீட்டிலும் அதைச் சுற்றியும் பொறிகளை வையுங்கள். முக்கியமாக எலிகளைக் கவரக்கூடிய உணவுகளை அப்புறப்படுத்துங்கள்.
ஹன்டா வைரஸ் ஆபத்தானதா?
ஹன்டா வைரஸில் 30-க்கும் அதிகமான வகைகள் உள்ளன. எந்த ஹன்டா வைரஸ் நோயை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து இறப்பு விகிதங்கள் மாறுபடுகின்றன. ஹன்டா வைரஸ் நுரையீரல் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 35 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். அதேசமயம், சிறுநீரக நோய்க்குறியுடன் கூடிய ரத்தக்கசிவு காய்ச்சலுக்கான இறப்பு விகிதம் நோயாளிகளில் 1 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை மாறுபடுகிறது என்று சிடிசி தெரிவிக்கின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


