Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியாவில் புதிய மனித கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு... இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? யாரைத் தாக்கும்?
Human Coronavirus HKU1: இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த 45 வயது பெண்மணிக்கு ஒரு புதிய வகை மனித கொரோனா வைரஸ் HKU1 தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிக்கைகளின் படி, இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட அந்த பெண் முதலில் அதிக காய்ச்சலை சந்தித்தார். அதைத் தொடர்ந்து சளி, தொடர் இருமல் போன்றவற்றை 15 நாட்களுக்கு மேல் அனுபவித்தார்.
அதன் பின் அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த பெண்மணியைத் தாக்கிய வைரஸ் அவ்வளவு பிரபலமானது இல்லாவிட்டாலும், இது சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தப்படும். இந்த ஆண்டு முதன்முதலாக நோய்த்தொற்றை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் குறித்து விரிவாக அறிவோம். அதுவும் இந்த வைரஸ் கொடிய கொரோனா வைரஸ் பிறழ்வுகளில் இருந்து எவ்வளவு வித்தியாசமானது என்பதை அறிவோம்.
மனித கொரோனா வைரஸ் HKU1 என்றால் என்ன?
மனித கொரோனா வைரஸ் HKU1 என்பது பீட்டாகொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. அதாவது SARS மற்றும் MERS வைரஸ்களை உள்ளடக்கிய குடும்பத்தை சேர்ந்தது. இருந்தாலும், இந்த வைரஸ் கோவிட்-19 போன்று இல்லாமல், லேசான சுவாச பிரச்சனைகளுடன் தொடர்புடையது. இந்த வைரஸ் ஒருவரை தாக்கியதும் முதலில் மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. இதன் விளைவாக ஆரம்பத்தில் ஜலதோஷத்தை அனுபவிக்கக்கூடும். இருப்பினும் சில சமயங்களில் நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற கடுமையான நுரையீரல் தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
மனித கொரோனா வைரஸ் HKU1-ன் அறிகுறிகள்
மனித கொரோனா வைரஸ் HKU1-ன் பெரும்பாலான அறிகுறிகள் காய்ச்சலுடன் தான் தொடங்குகின்றன. இதன் பிற அறிகுறிகள் பின்வருமாறு:
* தொடர் இருமல்
* மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு
* தொண்டை வலி
* காய்ச்சல்
* தும்மல்
* உடல் சோர்வு
* தலைவலி
* தீவிரமான நிலைகளில் மூச்சுத்திணறல், நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியை ஏற்படுத்தும்.
இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் லேசாக இருந்தால், அது தானாகவே சரியாகிவிடும். ஒருவேளை இந்த வைரஸ் குழந்தைகள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள், வயதானவர்கள், குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டவர்களை தாக்கினால் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
இந்த வைரஸ் யாரை அதிகம் தாக்கலாம்?
மனித கொரோனா வைரஸ் HKU1 முதன்முதலாக பரவுவதால், இதைப் பற்றி அதிகம் தெரியவில்லை. இருப்பினும் இந்த வைரஸ் வயதானவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள், ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற நுரையீரல் தொடர்பான நோய் உள்ளவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்களை அதிகம் தாக்குவதற்கான வாய்ப்புள்ளது.
இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது?
மற்ற சுவார பிரச்சனைகளை ஏற்படுத்தும் வைரஸ்களைப் போன்றே, இந்த மனித கொரோனா வைரஸ் HKU1 பின்வரும் வழிகளில் பரவுகிறது.
* பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மல் ஆகியவற்றின் சுவாசக் துளிகள்
* மாசடைந்த மேற்பரப்புகளை தொட்ட பின் முகம் மற்றும் வாய் பகுதிகளில் கைகளை வைப்பது
* பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால் ஏற்படலாம்.
மனித கொரோனா வைரஸ் HKU1-ல் இருந்து பாதுகாப்பது எப்படி?
மனித கொரோனா வைரஸ் HKU1 க்கு குறிப்பிட்ட தடுப்பூசி அல்லது வைரஸ் தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லாவிட்டாலும், இது அடிப்படை சுகாதாரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலும் நோய்தொற்றை தடுக்கலாம்.
* அதுவும் குறைந்தது 20 நொடிகள் சோப்பு பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்.
* கூட்டமான பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்த்திடுங்கள்.
* எப்போது வெளியே சென்றாலும் மாஸ்க்குகளை அணியுங்கள்.
* சுவாச பிரச்சனையை கொண்டவருடன் நெருங்கிய தொடர்பை தவிர்த்திடுங்கள்.
* இருமல் அல்லது தும்மும்போது நீர்த்துளி பரவுவதைத் தடுக்க உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடுங்கள்.
* சீரான உணவை உட்கொள்வது, உடலை நீரேற்றமாக இருப்பது மற்றும் போதுமான ஓய்வு எடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடுங்கள்.
மனித கொரோனா வைரஸ் HKU1, கோவிட்-19 இலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
மனித கொரோனா வைரஸ் HKU1, ஜலதோஷம், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் மேல் சுவாசக்குழாய் நோய்களை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இது நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற கடுமையான நிலைமைகளுக்கும் வழிவகுக்கும். ஆனால் இது கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸை விடக் குறைவான கடுமையானது. இந்த வைரஸ் கோவிட்-19 போன்று அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல் இருந்தாலும், அதன் தாக்கத்தை நிர்வகிப்பதில் முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சரியான மருத்துவ பராமரிப்பு அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.
மனித கொரோனா வைரஸ் HKU1 என்பது பீட்டாகொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. அதாவது SARS மற்றும் MERS வைரஸ்களை உள்ளடக்கிய குடும்பத்தை சேர்ந்தது. இருந்தாலும், இந்த வைரஸ் கோவிட்-19 போன்று இல்லாமல், லேசான சுவாச பிரச்சனைகளுடன் தொடர்புடையது. இந்த வைரஸ் ஒருவரை தாக்கியதும் முதலில் மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. இதன் விளைவாக ஆரம்பத்தில் ஜலதோஷத்தை அனுபவிக்கக்கூடும்.
மனித கொரோனா வைரஸ் HKU1-ன் அறிகுறிகள் பின்வருமாறு:
* அதிக காய்ச்சல்
* தொடர் இருமல்
* மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு
* தொண்டை வலி
* காய்ச்சல்
* தும்மல்
* உடல் சோர்வு
* தலைவலி
* தீவிரமான நிலைகளில் மூச்சுத்திணறல், நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியை ஏற்படுத்தும்.
மற்ற சுவார பிரச்சனைகளை ஏற்படுத்தும் வைரஸ்களைப் போன்றே, இந்த மனித கொரோனா வைரஸ் HKU1 பின்வரும் வழிகளில் பரவுகிறது.
* பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மல் ஆகியவற்றின் சுவாசக் துளிகள்
* மாசடைந்த மேற்பரப்புகளை தொட்ட பின் முகம் மற்றும் வாய் பகுதிகளில் கைகளை வைப்பது
* பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால் ஏற்படலாம்.



Click it and Unblock the Notifications