Latest Updates
-
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க..
இந்த பிரச்சனை இருந்தா க்ரீன் டீ குடிக்காதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க...
Green Tea: தற்போது மக்களிடையே க்ரீன் டீ மிகவும் பிரபலமான ஒரு பானமாக உள்ளது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்போர் முதல் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைப்போர் வரை பலரும் தங்களின் டயட்டில் க்ரீன் டீயை தவறாமல் சேர்த்து வருகிறார்கள்.
அந்த அளவில் க்ரீன் டீ மக்களிடையே மிகவும் ஆரோக்கியமான பானமாக பிரபலமாகியுள்ளது. அதற்கேற்ப க்ரீன் டீ பற்றிய ஆய்வுகளும், அந்த டீயில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளன. இந்த காரணத்தினாலேயே நிறைய பேர் இந்த பானத்தை தேர்வு செய்து அருந்துகிறார்கள்.

உண்மையை சொல்லப்போனால், க்ரீன் டீ குடிக்கும் நிறைய பேருக்கு அதைக் குடிக்க பிடிக்காது. இருப்பினும் அனைவரும் இது உடலுக்கு நல்லது, உடல் எடையைக் குறைக்கும் என்று சொல்வதனால் குடித்து வருகிறார்கள். என்ன தான் க்ரீன் டீயில் ஏராளமான நன்மை விளைவிக்கும் சத்துக்கள் இருந்தாலும், அனைவருக்கும் இந்த க்ரீன் டீ ஏற்றதாக இருக்காது.
சிலருக்கு இந்த டீயானது வாந்தி, நெஞ்செரிச்சல் போன்றவற்றைத் தூண்டும். சரி, யாரெல்லாம் க்ரீன் டீயைக் குடிக்கக்கூடாது என்று நீங்கள் கேட்கலாம். கீழே எந்த பிரச்சனையைக் கொண்டவர்கள் க்ரீன் டீயைக் குடிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
மருந்துகளை எடுப்பவர்கள்
நீங்கள் ஏதேனும் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு, அதற்கு தினமும் மருந்து மாத்திரைகளை எடுத்து வருகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு க்ரீன் டீ நல்லதல்ல. ஏனெனில் சில சமயங்களில் க்ரீன் டீயானது உட்கொள்ளும் மருந்துகளுடன் வினைப்புரிந்து, உடலுக்கு தீங்கை விளைவிக்கலாம். எனவே மருந்து மாத்திரைகளை எடுப்பவர்கள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
மாதவிடாய் சுழற்சி
மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் க்ரீன் டீயைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில பெண்களுக்கு க்ரீன் டீயானது குமட்டல் மற்றும் வாந்தியை வரத் தூண்டும். எனவே மாதவிடாய் காலத்தில் க்ரீன் குடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள்.
கர்ப்பிணிகள்
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் க்ரீன் டீயைக் குடிக்கும் போது, அது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். பொதுவாக கர்ப்பிணிகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் எந்த ஒரு உணவுப் பொருட்களையும் எடுக்கக்கூடாது. ஏனெனில் ஏற்கனவே அவர்களின் உடல் வெப்பமாக இருக்கும். எனவே தான் கர்ப்பிணிகள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எடை இழப்பு டயட்
உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பவர்கள் அல்லது ஏதேனும் சப்ளிமெண்ட்டுகளை எடுப்பவர்களின் இரத்த அடர்த்தியானது சற்று குறைவாக இருக்கும். இந்நிலையில் க்ரீன் டீயைக் குடித்தால், இது இரத்த அடர்த்தியை இன்னும் குறைத்துவிடும். அதோடு மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளையும் அதிகரித்துவிடும். எனவே ஏற்கனவே எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவர்களுக்கு க்ரீன் டீ நல்லதல்ல.
காப்ஃபைன் சகிப்புத்தன்மை
சிலருக்கு காப்ஃபைன் நிறைந்த உணவுகள் சேராது. என்ன தான் க்ரீன் டீயில் காப்ஃபைன் குறைவாக இருந்தாலும், காப்ஃபைன் சகிப்புத்தன்மையைக் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 2 கப்புக்கு அதிகமாக க்ரீன் டீ குடித்தால், அது ஹைப்பர் டென்சன், நரம்பு பலவீனம் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும்.
என்ன தான் க்ரீன் டீ ஏராளமான சத்துக்களைக் கொண்ட பானமாக இருந்தாலும், அதற்கு இணையாக சத்துக்களைக் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளும் அதிகம் உள்ளன. அவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அனைத்தும் கிடைக்கும். முக்கியமாக பெர்ரிப் பழங்களில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவற்றை காலை உணவின் போது அல்லது ஸ்நாக்ஸ் வேளைகளில் உட்கொள்ளலாம். ஒருவேளை டீ குடிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தால், இஞ்சி டீ, புதினா டீ, மஞ்சள் டீ போன்றவற்றை தயாரித்து குடித்து வாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications