Latest Updates
-
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது!
இந்த பிரச்சனை இருந்தா க்ரீன் டீ குடிக்காதீங்க.. இல்ல உங்க நிலைமை ரொம்ப மோசமாயிடும்..
Green Tea Side Effects In Tamil: உலகளவில் உடல் எடையைக் குறைக்க நினைப்போரிடையே மிகவும் பிரபலமான ஒரு பானம் தான் க்ரீன் டீ. இந்த க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளன. குறிப்பாக இதில் ECEG என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மிகுதியான அளவில் நிறைந்துள்ளன. இந்த க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுவதாக பல ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இது தவிர இந்த க்ரீன் டீயை குடிப்பதனால் மூளையின் செயல்பாடு மேம்படும், நினைவாற்றல் அதிகரிக்கும், இரத்த அழுத்தம் குறைந்து இதய நோயின் அபாயம் குறையும், சருமம், குடல் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட புற்றுநோயின் அபாயம் குறையும் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்பட உதவி புரிவதாக கூறப்படுகிறது.

சீனாவில் பிரபலமாக இருந்த இந்த க்ரீன் டீ, தற்போது இந்தியாவிலும் மக்களிடையே பிரபலமாக உள்ளது. அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்போரும் தங்களின் தினசரி உணவில் க்ரீன் டீயை சேர்த்து வருகின்றனர். என்ன தான் க்ரீன் டீ ஏராளமான நன்மைகளை வழங்கினாலும், பக்கவிளைவுகளையும் கொண்டிருக்கத் தான் செய்கிறது.
முக்கியமாக இந்த க்ரீன் டீயை குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சனையைக் கொண்ட நபர்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் ஆரோக்கிய பிரச்சனை இன்னும் தீவிரமடைந்துவிடும். இப்போது யாரெல்லாம் க்ரீன் டீயைக் குடிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
1. குடல் தொடர்பான பிரச்சனைகள்
எரிச்சல் கொண்ட குடல்நோய்க்குறி அல்லது வயிற்றுப்போக்கு பிரச்சனையைக் கொண்டவர்கள், க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களின் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும். மேலும் க்ளுக்கோமா உள்ளவர்கள் க்ரீன் டீ குடித்தால், அது கண் அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் கல்லீரல் நோய்களைக் கொண்டவர்களில் நிலைமையை மோசமாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2. குழந்தைகள்
குழந்தைகளுக்கு க்ரீன் டீ குடிக்க கொடுக்கக்கூடாது. ஏனெனில் க்ரீன் டீயில் காப்ஃபைன் அதிகளவில் உள்ளன. இந்த பானத்தை குழந்தைகள் குடித்தால், அவர்களின் நரம்பு மண்டலம் அளவுக்கு அதிகமாக தூண்டப்படும் மற்றும் புரோட்டீன், கொழுப்புக்களை உறிஞ்சும் திறன் குறைந்துவிடும். எனவே எக்காரணம் கொண்டும் குழந்தைகளுக்கு இந்த க்ரீன் டீயைக் கொடுக்காதீர்கள்.
3. காப்ஃபைன் உணர்திறன் கொண்டவர்கள்
காப்ஃபைன் ஒத்துக்காதவர்கள் க்ரீன் டீ குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இத்தகையவர்களுக்கு சிறிதளவில் க்ரீன் டீ உடலினுள் சென்றாலும், அது இதயத் துடிப்பை அதிகரித்து, உடல் சோர்வை அதிகரித்து, எரிச்சலுணர்வு அல்லது நடுக்கத்தை உண்டாக்கிவிடும்.
4. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள்
உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் மற்றும் இரத்த சோகையை கொண்டிருந்தால், க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இத்தகையவர்கள் க்ரீன் டீயைக் குடித்தால், இரும்புச்சத்தை உறிஞ்சும் உடலின் திறன் குறைந்துவிடும். பின் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்.
5. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
தாய்ப்பாய் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் கர்ப்ப காலத்தில் க்ரீன் டீ குடித்தால், அது கருச்சிதைவை ஏற்படுத்தும் அல்லது குழந்தையின் வளர்ச்சியில் இடையூறு ஏற்படலாம். இதற்கு அதில் உள்ள அதிகப்படியான காஃப்பைன் தான் முக்கிய காரணம்.
6. அசிடிட்டி உள்ளவர்கள்
க்ரீன் டீ இயற்கையாகவே வயிற்று அமிலத்தை அதிகரிக்கும் டானின்கள் என்னும் சேர்மம் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அசிடிட்டி உள்ளவர்கள் குடிக்கும் போது, அது உற்பத்தியை அதிகரித்து, அதன் காரணமாக வயிற்று உப்புசம், வயிற்று அசௌகரியம் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். எனவே வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications