Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
அடிக்கடி தலைவலியால் துடிக்கிறீங்களா? அப்ப இந்த உணவுகள சாப்பிடுங்க.... உடனே சரியாகிடுமாம் தெரியுமா?
ஒரு கப் காபி தலைவலியைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு ஆறுதலையும் தரும். 2017 இல் ஜர்னல் ஆஃப் பெயின் இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், காஃபின் தலைவலிக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கும் என்று கூறியுள்ளது.
நீங்க அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? தலைவலி என்பது பெரும்பாலான மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கு தலைவலி தொடர்ந்து இருந்தாலோ, தினமும் இருந்தாலோ மருத்துவரை அணுகுவது நல்லது.
ஏனெனில், உங்களுக்கு ஒற்றைத் தலைவலி, சைனஸ் அல்லது பலவீனமான கண்பார்வை பிரச்சனைக் கூட இருக்க வாய்ப்புகள் உள்ளன. இது உங்கள் நிலையை மோசமாக பாதிக்கலாம். அடுத்த முறை நீங்கள் தலைவலியால் அவதிப்படும் போது, உடனடியாக மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, இயற்கை வழியை பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வலி நிவாரணி மாத்திரைகள் உங்கள் தலைவலியைக் குறைக்க உதவுகின்றன. ஆனால் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இயற்கை சிகிச்சை எப்போதும் சிறந்தது. அந்த வகையில், நீங்கள் உண்ணும் உணவுகள் மூலம், உங்களுக்கு ஏற்படும் தலைவலியை குறைக்கலாம். அவை என்னென்ன உணவுகள் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இஞ்சி
இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்பு நிறைந்த ஒரு மசாலா இஞ்சி. இது தலைவலியுடன் தொடர்புடைய வலியைக் குறைக்க உதவுகிறது. இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்ற கலவையில், வலி நிவாரணி விளைவுகள் நிறைந்துள்ளன. பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படும் இஞ்சியை, தேநீர் செய்து குடிப்பது உங்கள் தலைவலிக்கு சிறந்த மருந்தாக இருக்கும். இஞ்சியை அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து இஞ்சி தண்ணீராகவும் குடிக்கலாம். இஞ்சி டீ தயாரிக்கும்போது அதனுடன் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து சாப்பிடுங்கள்.

தர்பூசணி
பகலில் ஏற்படும் பெரும்பாலான தலைவலிகள் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படலாம். நீரிழப்பு என்பது தலைவலிக்கு ஒரு பொதுவான காரணம். உடலிலுள்ள நீரின் அளவை சமன் செய்ய, உடலுக்கு நீரேற்றம் தரும் உணவை உட்கொள்வது சிறந்தது. அந்த வகையில், தலைவலியைக் குறைக்க தர்பூசணி ஒரு சிறந்த வழி. தர்பூசணியில் 92% நீர் உள்ளது. பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளை கொண்டுள்ள தர்பூசணி, உடலில் திரவ சமநிலையை சீராக்க உதவுகிறது. மேலும், இது கோடைகாலத்தில் உடலுக்கு சிறந்த உணவாகவும் இருக்கும்.

காபி
ஒரு கப் காபி தலைவலியைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு ஆறுதலையும் தரும். 2017 இல் ஜர்னல் ஆஃப் பெயின் இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், காஃபின் தலைவலிக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கும் என்று கூறியுள்ளது. பொதுவாக தலைவலிக்கு மூல காரணமாக இருப்பது பதற்றம் மற்றும் மன அழுத்தம். இதை குறைக்க காபி உங்களுக்கு உதவும். 2015 ஆம் ஆண்டில் காக்ரேன் டேட்டாபேஸ் ஆஃப் சிஸ்டமேடிக் ரிவியூஸில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், ஒற்றைத் தலைவலிக்கு காஃபின் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது.

சால்மன் மீன்
சால்மன் என்பது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஒரு வகை கொழுப்பு மீன் ஆகும். இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் உடலில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்துகின்றன மற்றும் தலைவலிக்கு நிவாரணம் அளிக்கும். 2014 இல் நியூட்ரிஷனல் நியூரோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சல்மான் மீன் உங்கள் தலைவலியை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பங்கேற்பாளர்களில் ஒரு நாளைக்கு 2 கிராம் மீன் எண்ணெயை உட்கொள்பவர்கள், அடிக்கடி மற்றும் தீவிரமான தலைவலி இரண்டிலும் குறிப்பிடத்தக்க குறைப்பைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தது.

புதினா தேநீர்
புதினா தேநீர் உடலுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமின்றி, உங்களின் தலைவலியையும் தணிக்கிறது. புதினாவில் இருக்கும் மெந்தோல் என்ற கலவை, வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தேநீர் பொதுவாக கவலை மற்றும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது ஒட்டுமொத்த அமைதியான விளைவைக் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications