For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா?... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...

By Mahibala
|

உலக அளவில் கிட்டதட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே டீ குடிக்கும் வழக்கம் உலக நாடுகளில் இருந்திருக்கிறது. இந்தியாவில் அது மிகவும் பின்னாட்களில் தான் வந்தது. குறிப்பாக, சீனாவில் தான் முதன்முதலில் டீ கொண்டு வரப்பட்டது. உலக நாடுகளில் அதிகம் குடிக்கும் பானமாக இருப்பது காபியும் டீயும் தான். அதிலும் பால் சுர்க்காத ஒரிஜினல் டீ தான் உங்களுக்கு உண்மையான டீயின் சுவையையும் பலன்களையும் தரும்.

அப்படி பால் மற்றும் வேறு எதுவும் சேர்க்காத ஒரிஜினல் பிளாக் டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும். அதேபோல் பிளாக் டீ பற்றி உங்களுக்குத் தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றித் தான் இந்த தொகு்பபில் பார்க்கா் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெட்டுக்காயங்கள் மறைய

வெட்டுக்காயங்கள் மறைய

பிளாக் டீ வெட்டுக் காயங்களில் இருந்து வருகின்ற ரத்தப் போக்கினைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஒரு குளிர்ச்சியாக ஃபீரிசரில் வைக்கப்பட்ட பிளாக் டீ பேக்கை எடுத்து அந்த இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்திருந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் வீக்கமும் குறைய ஆரம்பிக்கும்.

MOST READ: நீங்க ரொம்ப ஸ்டிராங்கான ஆளா இருக்கணுமா? இந்த 10 விஷயத்த மனசுல வெச்சிக்கங்க...

கால் துர்நாற்றத்தை போக்க

கால் துர்நாற்றத்தை போக்க

சிலருக்கு என்ன தான் கால்களைச் சுத்தமாக வைத்துக் கொண்டாலும், துர்நாற்றம் வீசும். அப்படி கால் பாதங்களில் ஏற்படுகின்ற துர்நாற்றத்தைப் போக்குவதில் பிளாக் டீ மிகச் சிறப்பாக வேலை செய்கின்றது.

பிளாக் டீயில் உள்ள டேனிக் என்னும் அமிலம் பாக்டீரியாக்களைக் கொல்லுகின்ற ஆற்றல் கொண்டது. சருமத்தில் உள்ள துளைகளை மூடி, வியர்வையை அதிகப்படுத்தாமல் தடுக்கிறது. அதனால் ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரில் பிளாக் டீ கலவையைக் கலந்து, அதற்குள் கால்களை 15 நிமிடங்கள் ஊற வைத்திருந்து பின் சுத்தமான நீரினால் கழுவினால் கால்களில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கிவிடும். அதோடு பாதம் துர்நாற்றம் இல்லாமல் இருந்தால், எசன்ஷியல் ஆயில் எதாவது பயன்படுத்தினால் கால்கள் வாசனையாக இருக்கும்.

பல் ஈறுகளை பாதுகாக்க...

பல் ஈறுகளை பாதுகாக்க...

என்னதான் தினமும் 2 முறை பல் துலக்கினாலும் கூட, பல் ஈறுகளில் வீக்கம், ஈறுகளில் ரத்தப் போக்கை நீக்கக் கூடியது. ஈரமான பிளாக் டீ பேக்கை பல் மற்றும் ஈறுகளில் உள்ள வீக்கத்தைக் குறைப்பதற்கு, அதன்மீது வைத்து சிறிது நேரம் அழுத்திக் கொண்டிருந்தால் அதனால் வீக்கம் குறையும்.

நோய் எதிர்ப்பு தன்மை

நோய் எதிர்ப்பு தன்மை

நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துவதற்குப் பயன்படுகிறது பிளாக் டீ. தேயிலையின் பண்புகள் 22 காய்கறிகளுடன் சேர்த்து ஆய்வு செய்யப்பட்டது. பிளாக் டீக்கு ஆக்சிஜனேற்றத் திறன் அதிகம்.

கண் எரிச்சலைப் போக்க

கண் எரிச்சலைப் போக்க

பத்து நிமிடங்களுக்கு சூடான நீரில் இரண்டு பிளாக் டீ பைகளை ஊற வைத்து அதிகப்படியான திரவத்தை அழுத்தி கண் எரிச்சல் உள்ள பகுதிகளில் வைத்தால் வேகமாகக் குணமடையும். எரிச்சலூட்டும் கண்களுக்கு இந்த வைத்தியம் மிகவும் உதவியாக இருக்கும்.

MOST READ: காபி குடிச்ச கறை பல்லுல இருக்கா?... அத எப்படி சரி பண்றது?...

பனி வெடிப்பு

பனி வெடிப்பு

பிளாக் டீ பேக்கில் உள்ள டீயில் உள்ள டேனிக் அமிலம் தேவையில்லாத வைரஸ் கிருமியின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. பனி வெடிப்பு உள்ள இடத்தில் வெதுவெதுப்பான டீ பேக்கை 10 நிமிடங்கள் வரை அழுத்திப் பிடித்தபடி வைத்திருங்கள். ஒரு நாளைக்கு 4 முறையாவது இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பனி வெடிப்பு விரைவிலேயே குணமாகும்.

அழற்சி குறைய

அழற்சி குறைய

ஒவ்வாமை என்னும் அழற்சியில் இருந்து விடுபட, பிளாக் டீ சிறப்பாக வேலை செய்யும். அதற்கு மிகச்சிறந்த மருந்தாக கருப்பு தேயிலை செயல்படுகிறது. தேயிலையில் அதிகமாக ஃபிளாவனாய்டுகள் நிறைந்திருக்கின்றன. பிளாக் டீ சருமத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டது. அடிக்கடி அழற்சி ஏற்படுகிறவர்கள் அடிக்கடி தேநீர் குடிப்பதாலும் அழற்சியிலிருந்து விடுபட முடியும்.

சொறி சிரங்கிலிருந்து பாதுகாக்க

சொறி சிரங்கிலிருந்து பாதுகாக்க

சருமம் தொடர்புடைய நோய்களுக்கு மூன்று முதல் ஐந்து தேநீர் பைகளை தண்ணீர் ஒரு நிரப்பப்பட்ட ஒரு பக்கெட்டில் போட்டு ஊற வையுங்கள். தேநீரில் உள்ள tannic அமிலங்கள் வீக்கம் மற்றும் நமைச்சலுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக உதவும்.

வயிற்று போக்கு

வயிற்று போக்கு

பிளாக் டீயில் உள்ள டானின்கள் குடலில் உள்ள சவ்வுகளில் தேங்கும் சளியால் சிலருக்கு வயிற்றுப் போக்கும் அழற்சியும் உண்டாகும். உடலில் உள்ள திரவங்களை உறிஞ்சி உடலில் ஏற்படுகின்ற அழற்சியை சரிசெய்யும்.

சூட்டு கொப்பளங்கள்

சூட்டு கொப்பளங்கள்

ஸ்டேஹைலோக்கோகல் என்னும் பாக்டீரியாவால் தான் சூட்டுக் கொப்பளங்களும் கட்டிகளும் உருவாகின்றன. பொதுவாக முகம், கழுத்து, தோள்கள், கயிறுகள் மற்றும் புட்டப் பகுதி ஆகியவற்றில் தோன்றும். பிளாக் டீயில் உள்ள இயற்கையான டானின்கள் ஆன்டி பாக்டீரியல் இத்தகைய பண்புகளைக் கொண்டிருக்கின்றன. சூடான தேநீர் பையில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து தடவை வரை பயன்படுத்தப்பட வேண்டும்.

MOST READ: குரு பெயர்ச்சி 2019 - 20: தனுசு லக்னத்திற்கு பாக்யங்களை அள்ளித் தரும் ஜென்மகுரு

மூலத்தை குணப்படுத்த

மூலத்தை குணப்படுத்த

மூலத்தால் பலரும் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். மூல நோயால் அவதிப்படுகின்றவர்களுக்கு மிகச்சிறந்த தீர்வுகளில் ஒன்று தான் இந்த பிளாக் டீ. பிளாக் டீ மூல நோயுள்ளவர்களுக்கு வெளி மருந்தாகப் பயன்படுகிறது. ஒரு சூடான, பிளாக் டீ பேக்கை எடுத்து நேரடியாக வலி உள்ள இடத்தில வைக்கவும். முன்பே கூறியது போல, பிளாக் டீயில் உள்ள tannic அமிலம் வீக்கம் குறைக்க உதவுகிறது, இப்படி அடிக்கடி வைத்து வந்தால், மூலத்தால் உண்டாகும் ரத்தப்போக்கு குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Some Facts Not Yet Known About Black Tea

Aside from water, black tea is one of the most consumed beverage in the world. It comes from the Camellia sinensis plant and is often blended with other plants for different flavors, such as Earl Grey, English breakfast or chai.
Story first published: Thursday, October 10, 2019, 16:45 [IST]