For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதாம் பால் குடிப்பது உங்க ஆரோக்கியத்துல எப்படிப்பட்ட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா?

பல நன்மைகளை வழங்கும் பாதாம் பால் உங்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக விதைகள் மற்றும் கொட்டைகள் ஒவ்வாமை இருந்தால் இதனை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளக்கூடாது.

|

பாலின் மிகச்சிறந்த மற்றொரு பரிமாணம் பாதாம் பால் ஆகும். பால் மற்றும் பாதாம் ஆகியவற்றின் ஆரோக்கிய நன்மைகளை ஒருங்கிணைப்பதால் இது மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அனைவரும் விரும்பும் ஒரு பானமாக இது இருக்கிறது. பாதாம் பால் புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் பிற முக்கிய தாதுக்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது. இது கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது மற்றும் சர்க்கரை சேர்க்காமல் செய்தால், அது உடல் எடையை குறைக்க உதவும்.

Side Effects Of Almond Milk

இதன் மருத்துவ பயன்களுக்காக உங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பலாம். ஆனால் பல நன்மைகளை வழங்கும் இது உங்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக விதைகள் மற்றும் கொட்டைகள் ஒவ்வாமை இருந்தால் இதனை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளக்கூடாது. பாதாம் பாலினால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நட் அலர்ஜி

நட் அலர்ஜி

பாதாம் மிகவும் பிரபலமான ஒவ்வாமை கொட்டைகள் பட்டியலில் ஒன்றாகும். எனவே நட்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதனால் முகத்தில் வீக்கம், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

தைராய்டு சுரப்பியில் விளைவுகள்

தைராய்டு சுரப்பியில் விளைவுகள்

பாதாம் ஒரு கோயிட்ரோஜெனிக் உணவு, அதாவது தைராய்டு சுரப்பியை பாதிக்கும் பொருட்கள் இதில் உள்ளன. இது சுரப்பியின் அயோடின் ஒருங்கிணைப்பை பாதிக்கும், இதனால் இந்த சுரப்பி விரிவடையும். பாதாம் பால் குடிப்பது ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்,ஆனால் இந்த பக்க விளைவைவுடன் ஒப்பிடும்போது இதனை அதிகம் குடிக்காமல் இருப்பதே நல்லது.

சர்க்கரை அளவை அதிகரிக்கும்

சர்க்கரை அளவை அதிகரிக்கும்

பாதாம் பால் உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது உங்களின் ஆரோக்கியத்திற்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

MOST READ: உங்கள் பெயரோட முதல் எழுத்துப்படி உங்களோட ' அந்த ' வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

குழந்தை பருவ சிக்கல்கள்

குழந்தை பருவ சிக்கல்கள்

பாதாம் பால் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் என்று அனைவரும் நினைக்கிறார்கள், ஆனால் உண்மை இதற்கு எதிர்மாறானதாகும். பாதாம் பால் குடிப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, மாறாக நாளடைவில் அவர்களின் செயல்பாடுகளில் இது சிக்கல்களை ஏற்படுத்தும்.

பால் ஒவ்வாமை

பால் ஒவ்வாமை

லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் பாதாம் பால் அதிகம் குடிப்பது பல பக்க விளைவுகளை உண்டாக்கும். அத்தகைய நபர்கள் பாதாம் பாலை உட்கொண்ட பிறகு ஒவ்வாமை ஏற்படலாம், எனவே, அதை முழுமையாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

சரும பாதிப்புகள்

சரும பாதிப்புகள்

பாதாம் பாலை உட்கொள்வது அரிப்பு, சரும அழற்சி மற்றும் படை நோய் போன்ற தோல் எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும். இந்த எதிர்வினைகள் பெரும்பாலும் பாதாம் பாலை உட்கொண்ட 10 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்குள் தோன்றும்.

MOST READ: இஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா?

வயிற்று பிரச்சினைகள்

வயிற்று பிரச்சினைகள்

பாதாம் பாலில் ஒவ்வாமை உள்ளவர்கள் வயிற்றுப் பிடிப்பை எதிர்கொள்ள நேரிடும், ஏனெனில் இந்த பாலை ஜீரணிப்பது கடினம்.

சுவாசக் கோளாறுகள்

சுவாசக் கோளாறுகள்

பாதாம் பாலின் பக்க விளைவுகளில் மூச்சுத்திணறல் மற்றும் சுவாச பிரச்சினைகள், மூச்சுத்திணறல் மற்றும் சிக்கலான சுவாசம் ஆகியவையும் அடங்கும். குறிப்பாக ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் பாதாம் பால் குடிப்பது அவர்கள் நோயின் தீவிரத்தை அதிகரிக்கும்.

செரிமானக் கோளாறுகள்

செரிமானக் கோளாறுகள்

பாதாம் சுவை கொண்ட பாலை ஜீரணிக்க முடியாதவர்களுக்கு வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படலாம்.

MOST READ: உங்க காதலில் இந்த விஷயங்கள ஒருபோதும் எதிர்பார்க்காதீங்க... ஏனா கண்டிப்பா இதெல்லாம் கிடைக்காது...!

சளி

சளி

பாதாம் பால் குடிப்பது சளி, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வழிவகுக்கும். நட்ஸ் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும். ஏற்கனவே சளி பிடித்து இருப்பவர்கள் பாதாம் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects Of Almond Milk

Here is the list of serious side effects of almond milk.
Story first published: Tuesday, November 5, 2019, 13:18 [IST]
Desktop Bottom Promotion