For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காஃபைன் இருக்கும் காபி குடிப்பது புற்றுநோயை ஏற்படுத்துமா? புதிய ஆய்வு சொல்லும் உண்மை என்ன தெரியுமா?

காஃபின் என்பது உலகளவில் 63 க்கும் மேற்பட்ட தாவர இனங்களின் இலைகள், விதைகள் மற்றும் பழங்களில் காணப்படும் இயற்கையான பொருள்.

|

காஃபின் என்பது உலகளவில் 63 க்கும் மேற்பட்ட தாவர இனங்களின் இலைகள், விதைகள் மற்றும் பழங்களில் காணப்படும் இயற்கையான பொருள். தேநீர், காபி மற்றும் சில குளிர்பானங்கள் போன்ற காஃபின் தயாரிப்புகளை உலகம் முழுவதும் பெருமளவிலான மக்கள் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்கிறார்கள். அதிக அளவு காஃபின் கொண்ட பானங்கள் ஆற்றல் பானங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. காஃபின் சோர்வை தற்காலிகமாக தாமதப்படுத்த ஒரு தூண்டுதலாக செயல்படுகிறது.

Myths and Facts About Caffine

காஃபின் ஒரு லேசான டையூரிடிக் ஆக செயல்படுகிறது, அதாவது அது நீரின் எடையை குறைக்க செய்கிறது. காஃபின் பற்றிய பல விரிவான ஆய்வுகள் இருந்தபோதிலும்,இதனைப் பற்றிய பல தவறான கருத்துக்கள் பரவலாக உள்ளன. நீங்கள் நம்பும் காஃபின் பற்றிய கட்டுக்கதைகள் பற்றிய உண்மை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை: காஃபின் போதைப்பொருள் போன்றது

கட்டுக்கதை: காஃபின் போதைப்பொருள் போன்றது

மக்கள் தாங்கள் காஃபின்-க்கு அடிமை என்று அடிக்கடி சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். உண்மையில் நிபுணர்களின் கூற்றுப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகளின் படி காஃபினால் அடிமையாக்க முடியாது. காஃபின் நுகர்வு திடீரென நிறுத்தப்படும் போது, சில நபர்கள் தலைவலி, சோர்வு மற்றும் தூக்கத்தை அனுபவிக்கலாம். இந்த அறிகுறிகள் பொதுவாக ஒரு நாளுக்கு அதிகபட்சம் நீடிக்கும் மற்றும் படிப்படியாக காஃபின் உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் எளிதாக இதனை நிர்வகிக்க முடியும்.

கட்டுக்கதை: காஃபின் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது

கட்டுக்கதை: காஃபின் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது

பல பெரிய அளவிலான ஆய்வுகள் காஃபின் நுகர்வு இருதய நோயின் அபாயத்தை அதிகரிக்காது மற்றும் கொலஸ்ட்ரால் அல்லது இதயத் துடிப்பில் எந்த எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது என்பதைக் காட்டுகிறது. அதிக உணர்திறன் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தில் சிறிதளவு அதிகரிப்பு காஃபின் நுகர்வுடன் தொடர்புடையது. இருப்பினும், இந்த உயர்வு மாடிப்படி ஏறுவது போன்ற இயல்பான செயல்பாட்டின் விளைவாக இருக்கும். இருப்பினும், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் காஃபின் உட்கொள்ளலை குறைத்துக் கொள்ள வேண்டும்.

MOST READ: இந்தியாவின் மன்னிக்க முடியாத துரோகிகள்... இவர்களின் துரோகத்தால்தான் இந்தியா பிரிட்டிஷாரிடம் தோற்றது!

கட்டுக்கதை: காஃபின் புற்றுநோயை ஏற்படுத்தும்

கட்டுக்கதை: காஃபின் புற்றுநோயை ஏற்படுத்தும்

காஃபின் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்காது என்பதை நிரூபிக்க போதுமான அறிவியல் சான்றுகள் உள்ளன. நார்வே மற்றும் ஹவாயில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பெரிய அளவிலான ஆய்வுகளில் 20,000 க்கும் மேற்பட்ட மக்களிடையே எடுக்கப்பட்ட தரவுகளின் படி உட்பட வழக்கமான காபி நுகர்வு/தேநீர் நுகர்வு மற்றும் புற்றுநோய் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

கட்டுக்கதை: கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு காஃபின் சேர்த்துக் கொள்ளக்கூடாது

கட்டுக்கதை: கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு காஃபின் சேர்த்துக் கொள்ளக்கூடாது

இனப்பெருக்க செயல்பாடுகளில் காஃபின் கொண்ட பானங்களின் விளைவுகளை ஆய்வுகள் உன்னிப்பாக கவனித்துள்ளன. மிதமான காஃபின் நுகர்வு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் மற்றும் பிறக்காத குழந்தைக்கும் பாதுகாப்பானது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காஃபின் உட்கொள்ளல் மற்றும் கருத்தரிக்கும் திறன் ஆகியவற்றுக்கு இடையே எந்த உறவையும் கண்டறிய உறுதியான ஆதாரங்கள் இல்லை. கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 300 மிகி அல்லது குறைவாக காஃபின் உட்கொள்வது நல்லது.

MOST READ: ஆண்கள் நீண்ட காலத்திற்கு விந்தணுக்களை வெளியேற்றாமல் இருந்தால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா?

கட்டுக்கதை: காஃபின் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்

கட்டுக்கதை: காஃபின் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்

குழந்தைகளின் உடல்கள் பெரியவர்களைப் போலவே காஃபின் செயலாக்கும் திறனைக் கொண்டுள்ளன. மிதமாக உட்கொள்ளும் போது காஃபின் கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள் குழந்தைகளின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணர்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அதிக அளவு காஃபின் எரிச்சல், உற்சாகம் அல்லது பதட்டம் போன்ற தற்காலிக விளைவுகளை ஏற்படுத்தும்.

காஃபின் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கும்

காஃபின் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கும்

காஃபின் உட்கொள்வது சிறுநீரில் கால்சியம் இழப்பை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த இழப்பும் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது மற்றும் காஃபின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இருப்பது கால்சியம் சமநிலை அல்லது எலும்பு அடர்த்தியை பாதிக்காது. காஃபின் உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸுக்கு ஆபத்து காரணி அல்ல என்பதை மேலும் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Myths and Facts About Caffine

Check out the most common myths about caffeine that you need to stop believing.
Story first published: Wednesday, August 25, 2021, 17:58 [IST]
Desktop Bottom Promotion