Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மீந்து போன சப்பாத்திய வெச்சு இந்த நாவூறும் ரெசிபிக்களை செய்யலாம் தெரியுமா?
தற்போது நிறைய பேர் ரோல், பிட்சா, சாண்ட்விச், நூடுல்ஸ் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இவை ஆரோக்கியமற்றவை மற்றும் இந்த மாதிரியான உணவுகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.
பெரும்பாலானோரது வீட்டில் தினமும் சப்பாத்தி செய்து சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். அப்படி சப்பாத்தி செய்யும் போது பல நேரங்களில் சப்பாத்தியானது மீந்து போயிருக்கும். மீந்து போன சப்பாத்தியை நிறைய பேர் பாதுகாப்பாக எடுத்து வைத்து, மறுநாள் காலையில் மீண்டும் தோசைக்கல்லில் போட்டு சூடேற்றி சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிட பலருக்கு போரடித்திருக்கும். நீங்கள் மீந்து போன சப்பாத்தியைக் கொண்டு என்ன ரெசிபிக்களையெல்லாம் சமைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

தற்போது நிறைய பேர் ரோல், பிட்சா, சாண்ட்விச், நூடுல்ஸ் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இவை ஆரோக்கியமற்றவை மற்றும் இந்த மாதிரியான உணவுகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. ஆனால் இந்த மாதிரியான உணவுகளை சப்பாத்தியைக் கொண்டு தயாரித்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? ஆம், கீழே எஞ்சிய சப்பாத்தியை கொண்டு செய்யக்கூடிய சில சுவையான ரெசிபிக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சப்பாத்தி ரோல்
நீங்கள் ரோலை விரும்பி சாப்பிடுபவரானால், அந்த சப்பாத்தியில் விரும்பிய காய்கறிகளை வதக்கி அல்லது வேக வைத்த சிக்கன் அல்லது பன்னீரை சப்பாத்தியில் பரப்பி, மேலே சிறிது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவி இறுக்கமாக சுருட்டினால், சப்பாத்தி ரோல் தயார்.

சப்பாத்தி நூடுல்ஸ்
உங்கள் குழந்தைகள் நூடுல்ஸை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் சப்பாத்தி நிறைய எஞ்சியுள்ளதா? அப்படியானால் அவற்றை நீள நீளமாக வெட்டிக் கொண்டு, வெங்காயம், தக்காளி, பிற மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி, நூடுல்ஸிற்கு பதிலாக சப்பாத்தியை சேர்த்து கிளறினால், சப்பாத்தி நூடுல்ஸ் தயார்.

சில்லி சப்பாத்தி
இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்து, அது நிறைய மீந்து போயிருந்தால், மறுநாள் காலையில் அந்த சப்பாத்திகளை சிறு துண்டுகளாக வெட்டி, அவற்றைக் கொண்டு ருசியான சில்லி சப்பாத்தியை செய்து சாப்பிடலாம். இந்த சில்லி சப்பாத்தி ஒரு நல்ல காலை உணவாக இருக்கும்.

சப்பாத்தி லட்டு
உங்கள் வீட்டில் உள்ளோர் இனிப்புகளை விரும்பி சாப்பிடுவார்களா? குறிப்பாக லட்டுவை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் சப்பாத்தி மீந்து போயிருந்தால், அந்த சப்பாத்தியைக் கொண்டு சப்பாத்தி லட்டு செய்யுங்கள். இந்த லட்டு ஒரு வித்தியாசமான சுவையில், விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
ரெசிபிக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்..

சப்பாத்தி பிட்சா
நீங்கள் பிட்சா பிரியரா? உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகமாக எஞ்சியுள்ளதா? அப்படியானால் அந்த சப்பாத்தியைக் கொண்டு பிட்சா செய்து சாப்பிடலாம். இந்த பிட்சாவில் விருப்பமான காய்கறிகளைக் கொண்டு அற்புதமான சுவையில் ஆரோக்கியமான பிட்சாவை தயாரிக்கலாம்.



Click it and Unblock the Notifications
