உங்களுக்கு லோ பிபி இருக்கா? அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...

குறைந்த இரத்த அழுத்த பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கவும், இரத்த அழுத்தத்தை சரியான அளவில் பராமரிக்கவும் உணவுகள் பெரிதும் உதவுகின்றன.

Foods For Low Blood Pressure In Tamil: நாம் அனைவரும் உயர் இரத்த அழுத்தம் தான் ஆபத்தானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் தான் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல உயிரைப் பறிக்கும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் இந்த உயர் இரத்த அழுத்தத்தை விட குறைந்த இரத்த அழுத்தம் தான் மிகவும் ஆபத்தானது. இப்பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் இரத்த அழுத்தத்தை சரியான அளவில் பராமரிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது சட்டென்று உயிரைப் பறித்துவிடும். ஒருவரது இரத்த அழுத்தம் 90/60 mm Hg-க்கு குறைவாக இருந்தால், அவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம்.

Foods For Low Blood Pressure In Tamil

குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையானது உடல் வறட்சி முதல் சில மருத்து நிலைகளால் ஏற்படலாம். இந்த லோ பிபி பிரச்சனை இருந்தால், அது அடிக்கடி தலைச்சுற்றல், கடுமையான சோர்வு, குமட்டல், கவனச்சிதறல், மங்கலான பார்வை போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டும். குறைந்த இரத்த அழுத்த பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கவும், இரத்த அழுத்தத்தை சரியான அளவில் பராமரிக்கவும் உணவுகள் பெரிதும் உதவுகின்றன. இப்பிரச்சனை உள்ளவர்கள் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்த உட்கொண்டு வர வேண்டியது முக்கியம்.

மேலும் இவர்கள் மது அருந்துவது மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பதைக் குறைக்க வேண்டும். இப்போது லோ பிபி அல்லது குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய சில முக்கியமான உணவுகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலர் திராட்சை

உலர் திராட்சை

உலர் திராட்சை குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையை சரிசெய்ய உதவும் அற்புதமான உணவுப் பொருளாகும். ஏனெனில் இது அட்ரீனல் சுரப்பியின் செயல்பாட்டிற்கு ஆதரவாக இருந்து, இரத்த அழுத்த அளவை சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது. இத்தகைய உலர் திராட்சையை 30-40 எடுத்து ஒரு கப் நீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை நீருடன் உட்கொள்ள வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பால் மற்றும் பாதாம்

பால் மற்றும் பாதாம்

குறைந்த இரத்த அழுத்த பிரச்சனைக்கான ஒரு பாரம்பரிய கை வைத்தியம் தான் பாதாம் மற்றும் பால். அதற்கு 4-5 பாதாமை இரவு நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு அரைத்து பேஸ்ட் செய்து, ஒரு கப் வெதுவெதுப்பான பாலில் கலந்து, தினமும் காலையில் குடிக்க வேண்டும். இப்படி சில வாரங்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

கேரட்டைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இரத்த அழுத்த அளவை சீராக பராமரிக்கவும் உதவும். இன்னும் சிறப்பான பலனைப் பெற ஒரு டம்ளர் கேரட் ஜூஸில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் குடிக்க வேண்டும்.

உப்பு

உப்பு

உப்பு குறைந்த இரத்த அழுத்தத்தை சரிசெய்ய உதவுகிறது. ஏனெனில் இதில் உள்ள சோடியம், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆனால் அதற்காக அளவுக்கு அதிகமாக உப்பை உட்கொள்க்கூடாது. இல்லாவிட்டால், அது பிற பிரச்சனைகளை வரவழைத்துவிடும்.

துளசி

துளசி

துளசி இலைகளில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் சி மற்றும் வைட்டமின் பி5 போன்றவை நிறைந்துள்ளன. இவை சீரான இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவி புரியும். அதற்கு 4-5 துளசி இலைகளை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இதனால் லோ பிபி கட்டுப்பாட்டில் இருக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ் உடல் வறட்சியால் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது. இதற்கு எலுமிச்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். இது தான் இரத்த அழுத்தத்தை சீராக்கி, பராமரிக்கிறது. உங்களுக்கு லோ பிபி-யால் தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஏற்பட்டால், ஒரு டம்ளர் உப்பு, சர்க்கரை சேர்த்த எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

பூண்டு

பூண்டு

நமது சமையலறையில் உள்ள மருத்துவ குணம் கொண்ட மற்றொரு பொருள் தான் பூண்டு. பூண்டில் உள்ள உட்பொருட்கள் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுவதோடு, உடலுக்கு பிற நன்மைகளையும் வழங்குகின்றன. அதற்கு தினசரி சமையலில் பூண்டு சேர்க்கலாம் அல்லது தினமும் இரவு தூங்கும் முன் 1 பல் பூண்டு சாப்பிடலாம்.

காப்ஃபைன் உணவுகள்

காப்ஃபைன் உணவுகள்

காப்ஃபைன் என்னும் பொருளானது காபி, டீ, ஹாட் சாக்லேட் போன்ற பொருட்களில் உள்ளன. இந்த காப்ஃபைன் தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே நீங்கள் அடிக்கடி லோ பிபியால் மயங்கி விழுகிறீர்கள் என்றால், சாக்லேட் சாப்பிடுங்கள் அல்லது காபியை அடிக்கடி குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, December 22, 2022, 13:41 [IST]
Desktop Bottom Promotion