Latest Updates
-
உடல் சூட்டை டக்கென்று குறைக்கும் டாப் 3 உணவுகளை பட்டியலிட்ட சித்த மருத்துவர் - அது என்னென்னன்னு பாருங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..!
நிம்மதியான தூக்கமும், கொரோனாவை எதிர்க்கும் சக்தியும் கிடைக்கணுமா? அப்ப தினமும் இத சாப்பிடுங்க...
நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டுமானால், ஒருவருக்கு போதுமான தூக்கம் கிடைக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கத்தின் மூலம் உடலைத் தாக்கும் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு செல்களான T-செல்களின
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், 16 லட்சத்திற்கும் அதிகமானோரைத் தாக்கியதோடு, 93 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது. இதனால் பலரது மனதிலும் அச்சம் அதிகமாக உள்ளது. லாக்டவுன் காலத்திலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சமூக பரவல் கட்டத்திற்கு இந்தியா வந்துவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

என்ன தான் வீட்டில் பாதுகாப்பாக இருந்தாலும், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, பலரும் தூக்கத்தை இழந்து தவிக்கக்கூடும். நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருந்தால், கொரோனாவை தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டுமானால், ஒருவருக்கு போதுமான தூக்கம் கிடைக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கத்தின் மூலம் உடலைத் தாக்கும் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு செல்களான T-செல்களின் அளவு அதிகரிக்கும்.
ஆகவே நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற்று, நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க வேண்டுமானால், தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளைத் தவறாமல் உட்கொண்டு வாருங்கள். இப்போது அந்த உணவுகள் எவையென்று காண்போம்.

பாதாம்
பாதாமில் மெலடோனின் என்ற ஹார்மோன் அதிக அளவு உள்ளது. இது தூக்கம் மற்றும் விழித்திருக்கும் சுழற்சியை சீராக்க உதவுகிறது. பாதாமில் வளமான அளவு மக்னீசியம் மற்றும் கால்சியம் உள்ளது. இச்சத்துக்கள் தசை தளர்வு மற்றும் தூக்கத்தை மேம்படுத்த உதவும்.

வெதுவெதுப்பான பால்
இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலைக் குடித்தால், இரவில் எளிதில் தூக்கத்தைப் பெறலாம். ஏனெனில் பாலில் தூக்கத்தைத் தூண்டும் உட்பொருட்களான ட்ரிப்டோஃபேன், கால்சியம், வைட்டமின் டி மற்றும் மெலடோனின் போன்றவை அதிகம் உள்ளது.

கிவி பழம்
ஆய்வு ஒன்றில் கிவி பழத்தை இரவு தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் உட்கொண்டவர்கள், இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிவிப் பழத்தை உண்டவர்கள் மிகக்குறைந்த நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற்றுள்ளார்கள். ஏனெனில் இந்த பழக்கத்தை தூக்கத்தைத் தூண்டும் உட்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளன.

சீமைச்சாமந்தி டீ
தூக்கமின்மைக்கான பாரம்பரிய நிவாரணப் பொருள் தான் சீமைச்சாமந்தி. இதில் உள்ள அபிஜெனின் என்னும் ப்ளேவோனாய்டு கலவை, தூக்கத்தை தூண்டும் பண்புகளுக்கு காரணமானவையாக அறியப்படுகிறது. ஆகவே இரவு தூங்குவதற்கு முன், நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற ஒரு கப் சீமைச்சாமந்தி டீயைக் குடியுங்கள்.

வால்நட்ஸ்
வால்நட்ஸில் உள்ள குறிப்பிட்ட சில உட்பொருட்கள், தூக்கத்தை மேம்படுத்துவதோடு, சீராக்கவும் செய்யும். ஏனெனில் வால்நட்ஸில் மெலடோனின், செரடோனின் மற்றும் மக்னீசியம் போன்றவை ஏராளமாக உள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு வால்நட்ஸ் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் தூக்கம் கிடைப்பதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

செர்ரி பழங்கள்
செர்ரிப் பழங்களில் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளது. இது தூக்க-விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்தும் பினியல் சுரப்பியால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 10-12 செர்ரிப் பழத்தை உட்கொண்டால், இது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் தூக்கத்தைத் தூண்டும் மிகச்சிறப்பான உணவுகளுள் ஒன்று. இதில் செரடோனின் அதிகம் உள்ளது. இது நரம்பு மற்றும் மனதை அமைதியடையச் செய்து, இரவில் நல்ல தரமான தூக்கத்தைப் பெற உதவும். ஆகவே நீங்கள் தூக்கம் வராமல் அவஸ்தைப்பட்டு வந்தால், ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள்.

வாழைப்பழம்
வாழைப்பழம் கூட நல்ல சௌகரியமான தூக்கத்தைப் பெற உதவும். இதில் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. எனவே நீல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற நினைப்பவர்கள், வாழைப்பழத்தை தினமும் இரவு சாப்பிடுங்கள்.

ஓட்ஸ்
ஓட்ஸ் உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருள் மட்டுமின்றி, நல்ல தூக்கத்தைப் பெறத் தூண்டும் சிறப்பான உணவுப் பொருளும் கூட. ஏனெனில் இதில் தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் உள்ளது. ஓட்ஸை சாப்பிடும் போது, அத்துடன் சிறிது பெர்ரிப் பழங்கள் மற்றும் தேன் போன்றவற்றை கலந்து, இரவு வேளையில் உட்கொண்டால், நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications