For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செரிமான மண்டலம் ஆரோக்கியமா இருக்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

செரிமான மண்டலமானது காலை உணவில் இருந்து தான் செயல்பட ஆரம்பிக்கிறது. எனவே காலை உணவு சிறப்பானதாக இருந்தால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு எவ்வித கேடும் ஏற்படாது.

|

செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது மிகவும் கடினமான பணி. ஏனெனில் செரிமான மண்டலத்தை நாம் மேற்கொள்ளும் டயட், தூக்க சுழற்சி மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை பாதிக்கின்றன. உதாரணமாக, உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக இருப்பதற்கு பல ஃபேன்ஸி டயட்டுகளை மேற்கொள்வது மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களில் திடீர் மாற்றத்தை உண்டாக்குவது இரைப்பை, சிறு குடல் மற்றும் பெருங்குடல் போன்றவற்றின் செயல்பாட்டில் பாதிப்பை உண்டாக்கும்.

Breakfast Foods For Healthy Digestive System

இருப்பினும், நாம் எப்போதும் ஒருசில உணவுகளை தவறாமல் உட்கொண்டு வந்தால், அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். செரிமான மண்டலமானது காலை உணவில் இருந்து தான் செயல்பட ஆரம்பிக்கிறது. எனவே காலை உணவு சிறப்பானதாக இருந்தால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு எவ்வித கேடும் ஏற்படாது.

MOST READ: இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா?

இந்த கட்டுரையில் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலை உணவின் போது சாப்பிட வேண்டிய சில முக்கிய உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உங்கள் காலை உணவில் சேர்த்து நன்மை பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளி

பப்பாளி

ஒரு நாளில் காலை உணவு மிகவும் முக்கியமானது. அதுவும் பப்பாளி பழத்துடன் ஒரு தினத்தை ஆரம்பித்தால், குடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவின் போது பப்பாளியை ஒருவர் தங்களின் உணவில் சேர்க்கும் போது, அது நாள் முழுவதும் செரிமான செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க உதவும். இதற்கு பப்பாளியில் உள்ள செரிமான நொதியான பாப்பைன் தான் காரணம்.

MOST READ: ஏன் காலையில் எழுந்ததும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிக்க சொல்றாங்க தெரியுமா?

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஏராளமான கனிமச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதை காலை உணவின் போது உட்கொண்டால், இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்குவதோடு, செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக பராமரிக்கப்படும்.

MOST READ: கல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

கோடையில் அதிகம் கிடைக்கும் வெள்ளரிக்காயில் எரெப்சின் என்னும் நொதி உள்ளது. இது முறையான செரிமானத்திற்கு உதவக்கூடிய நொதிப்பொருள். இந்த வெள்ளரிக்காயை அன்றாட காலை உணவில் சேர்த்து வந்தால், அது அசிடிட்டி, இரைப்பை குடல் பிரச்சனை மற்றும் பெப்டிக் அல்சர் போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

MOST READ: முதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா? அப்படின்னா இத செய்யுங்க...

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, அஜீரண பிரச்சனையில் இருந்து விடுவிக்க பெரிதும் உதவியாக இருக்கும். நல்ல குடலியக்கத்திற்கு நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. காலை உணவின் போது ஒற்றை வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும், அது வயிறு நிறைந்த உணர்வுடன், திருப்தியையும் அளிக்கும்.

MOST READ: பெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...

எலுமிச்சை-தேன்

எலுமிச்சை-தேன்

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அதோடு இந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் உங்கள் உடல் எடையை குறைக்கும் பயணத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

MOST READ: தினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Breakfast Foods For Healthy Digestive System

There are some simple foods that can be incorporated in our diet to ensure a healthy digestive tract. These are best had in the morning as breakfast.
Desktop Bottom Promotion