Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
Face Wash vs Face Scrub: முகத்தில் உள்ள அழுக்கை நீக்க பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு சரும பராமரிப்பு பொருள் தான் ஃபேஸ் வாஷ். எப்படி ஃபேஸ் வாஷ் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க உதவுகிறதோ, அதேப் போல் சருமத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் மற்றொரு பொருள் தான் ஃபேஸ் ஸ்க்ரப்.

இரண்டுமே ஒரே மாதிரியான வேலையை செய்வதால், பலருக்கும் இவ்விரண்டில் சருமத்தை சுத்தம் செய்ய சிறந்தது எது என்ற கேள்வி எழுவதோடு, இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? எந்த சருமத்தினர் எதை பயன்படுத்துவது நல்லது என்பன போன்ற கேள்விகளும் எழும். எனவே உங்களுக்காக ஃபேஸ் வாஷ் மற்றும் ஃபேஸ் ஸ்க்ரப் குறித்த விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஃபேஸ் வாஷ் என்றால் என்ன?
ஃபேஸ் வாஷ் என்பது சருமத்தின் மேற்பரப்பில் உள்ள அழுக்கு, எண்ணெய் மற்றும் தூசிகளை அகற்ற தினசரி பயன்படுத்த ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட பொருளாகும். இது பொதுவாக லேசானதாகவும், க்ரீம், ஜெல் போன்ற தோற்றத்திலும் இருக்கும். இந்த ஃபேஸ் வாஷ்ஷில் சாலிசிலிக் அமிலம், ட்-ட்ரீ ஆயில், கிளைகோலிக் அமிலம் அல்லது ஈரப்பதமூட்டும் பொருள் இருக்கும். பெரும்பாலும் இந்த ஃபேஸ் வாஷ் அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் இருக்கும்.
ஃபேஸ் ஸ்க்ரப்
ஃபேஸ் ஸ்க்ரப் என்பது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், சருமத் துளைகளில் உள்ள அடைப்புக்களை நீக்கவும், சரும அமைப்பை மென்மையாக்கவும் தயாரிக்கப்பட்ட பொருளாகும். இந்த ஸ்க்ரப்பானது குருணைகள் அல்லது துகள்கள் நிறைந்த க்ரீம் அல்லது ஜெல் போன்று இருக்கும். இந்த ஸ்க்ரப் சருமத்திற்கு புத்துயிர் அளித்து பொலிவான தோற்றத்தைத் தருகிறது. இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பை சரும வகையைப் பொறுத்து வாரத்திற்கு 1-3 முறை பயன்படுத்தலாம்.
ஃபேஸ் வாஷ்ஷை எப்போது பயன்படுத்த வேண்டும்?
* ஃபேஸ் வாஷ்ஷை தினமும் பயன்படுத்தலாம். ஏனெனில் சோப்பிற்கு ஒரு சிறந்த மாற்றுப் பொருளாகும். எப்படி சோப்பு சருமத்தில் இருக்கும் அழுக்குகள், எண்ணெய் போன்றவற்றை நீக்க உதவுகிறதோ, அதேப் போல் தான் இதுவும் செயல்படும். எனவே வெளியே சென்று சுற்றி திரிந்துவிட்டு வீட்டிற்கு வந்ததும், முகத்திற்கு சோப்பிற்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம்.
* இந்த ஃபேஸ் வாஷ் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது.
ஃபேஸ் ஸ்க்ரப்பை எப்போது பயன்படுத்தலாம்?
* ஃபேஸ் ஸ்க்ரப்புகள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்திற்கு ஒரு பொலிவையும், மென்மைத்தன்மையையும் தருகிறது. குறிப்பாக இதைப் பயன்படுத்தும் போது, கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் வருவது தடுக்கப்படும்.
* ஃபேஸ் ஸ்க்ரப்புகளைக் கொண்டு சருமத்தை சுத்தம் செய்வதனால், சருமத்தின் அமைப்பு மேம்படுகிறது மற்றும் சருமத்தில் பயன்படுத்தப்படும் சீரம், மாய்ஸ்சுரைசர்களை சருமத்தால் திறம்பட உறிஞ்ச உதவுகிறது.
* ஃபேஸ் ஸ்க்ரப்பை சரும வகையைப் பொறுத்து வாரத்திற்கு 1-3 முறை பயன்படுத்தலாம்.
ஃபேஸ் வாஷ் மற்றும் ஃபேஸ் ஸ்க்ரப் இரண்டையும் பயன்படுத்தலாமா?
நிச்சயம், ஃபேஸ் வாஷ் மற்றும் ஃபேஸ் ஸ்க்ரப் ஆகிய இரண்டையும் சரும பராமரிப்பில் ஒன்றாக பயன்படுத்தலாம். அதுவும் சருமத்தில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய தினமும் ஃபேஸ் வாஷ்ஷை பயன்படுத்தலாம். அதுவே சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய நினைத்தால் வாரந்தோறும் ஃபேஸ் ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம்.
அதாவது, காலையில் சருமத்தில் அழுக்குகள் அதிகம் இருக்காது. எனவே அப்போது வெறும் ஃபேஸ் வாஷ்ஷை பயன்படுத்தலாம். மாலை அல்லது இரவு வேளையில் தினமும் இரவு ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதோடு, வாரத்திற்கு 1-3 முறை ஃபேஸ் ஸ்க்ரப்பையும் சேர்த்து பயன்படுத்தலாம்.
எந்த சருமத்தினர் எதை பயன்படுத்தலாம்?
* காம்பினேஷன் சருமத்தைக் கொண்டவர்கள் மென்மையான, கெமிக்கல் அதிகம் இல்லாத ஃபேஸ் வாஷை தினமும் பயன்படுத்தலாம் மற்றும் வாரத்திற்கு ஒருமுறை ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம்.
* எண்ணெய் பசை அல்லது முகப்பரு சருமத்தினர் சாலிசிலிக் அமிலம் கொண்ட ஃபேஸ் ஸ்க்ரப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
* பொலிவிழந்த அல்லது சரும சுருக்கங்களைக் கொண்டவர்கள் ஸ்க்ரப்புகளை பயன்படுத்துவது சிறந்தது.
செய்யக்கூடாதவைகள்
* ஃபேஸ் ஸ்க்ரப் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது என்பதற்காக, அதிகமாக ஸ்க்ரப்களை பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக அதிக அழுத்தம் கொடுத்து தேய்த்து கழுவ கூடாது.
* ஸ்க்ரப் பயன்படுத்திய பின் தவறாமல் சரும வகைக்கேற்ப மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
* சென்சிடிவ் சருமத்தினர் சருமத்திற்கு கெமிக்கல் அதிகம் நிறைந்த ஸ்க்ரப்களை தேர்ந்தெடுக்காமல், மிதமான ஸ்க்ரப்களை தேர்ந்தெடுத்து மென்மையாக ஸ்க்ரப் செய்து சருமத்தை கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

