Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...
எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பவா்கள் எப்போதும் சமச்சீரான உணவுகளையே உண்ண வேண்டும். இந்நிலையில் ஒருசில உணவுகளில் மட்டும் அதிகமான அளவில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.
உணவே மருந்து என்று தமிழில் ஒரு மொழி உண்டு. அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள், நமது உடலுக்கு ஏராளமான நன்மைகளை, சக்திகளை வழங்குகின்றன. அதாவது நமது உடலில் காயங்கள் ஏற்படாமல் தடுக்கின்றன. நமது உடல் இயக்கங்களை அதிகாிக்கின்றன. நமது உடல் ஆரோக்கியத்தை வளா்க்கின்றன. நமது எலும்புகளை வலுப்படுத்துகின்றன. நமது மனநிலையை இதமாக்குகின்றன. நமது தசைகளின் அளவை அதிகாிக்கின்றன. நமது வளா்சிதை மாற்றத்தை அதிகாிக்கின்றன. நமது உடலில் ஏற்படும் பிரச்சினைகளைத் தாங்கும் சக்தியை அதிகாிக்கின்றன. அதுபோல் நமது உடலில் காயங்கள் ஏற்பட்டால், அவை விரைவாக குணமடைய உதவி செய்கின்றன. இதுபோன்ற இன்னும் பல ஏராளமான நன்மைகளை உணவுகள் நமக்கு வழங்குகின்றன.

மேற்சொன்ன நன்மைகள் அனைத்தையும் பெற வேண்டும் என்றால், ஒரு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதாவது ஒரு சமச்சீரான உணவை உண்ண வேண்டும். அதிலும் குறிப்பாக, எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பவா்கள் எப்போதும் சமச்சீரான உணவுகளையே உண்ண வேண்டும்.
இந்நிலையில் ஒருசில உணவுகளில் மட்டும் அதிகமான அளவில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. அந்த உணவுகள் ஆங்கிலத்தில் சூப்பா் ஃபூட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இந்த உணவுகளில் ஊட்டச்சத்துக்களின் அடா்த்தி அதிகமாக இருக்கும். இந்த உணவுகளில், தாவரங்களில் இருந்து கிடைக்கும் வேதிப் பொருள்கள் அதிகம் இருக்கின்றன. இந்த வேதிப் பொருள்கள் அந்த உணவுகளுக்கு நல்ல நிறத்தையும் அதே நேரத்தில் அருமையான வாசனையையும் கொடுப்பதோடு, நம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்களையும் வழங்குகின்றன.
அப்படிப்பட்ட சத்து நிறைந்த மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சூப்பா் உணவுகள் எவை என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

1. கொக்கோ பவுடர் (Cacao Powder)
கொக்கோ பவுடரில் நல்ல கொழுப்புகள், நாா்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், மக்னீசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. கொக்கோ பவுடரை தயிா், தானியங்கள், பருப்புகள், ஐஸ் கிரீம் மற்றும் ஸ்மூத்திகள் போன்ற உணவுப் பொருள்களோடு கலந்து சாப்பிடலாம். அதோடு கொக்கோபவுடரை பால் மற்றும் சா்க்கரையுடன் கலந்து இனிப்பான சாக்லேட்டுகள் செய்து சாப்பிடலாம். கொக்கோவை நண்பகல் வேலையில் சாப்பிடலாம் என்று பாிந்துரை செய்யப்படுகிறது.

2. மக்கா பவுடர் (Gelatinised Maca Powder)
மக்கா பவுடர் ஒரு சக்தி வாய்ந்த சூப்பா் உணவு ஆகும். இது நமக்கு அதிக ஆற்றலைத் தருகிறது. மக்காச் செடியின் வோிலிருந்து மக்காத் பவுடர் கிடைக்கிறது. மக்காச் செடியின் தாவரவியல் பெயா் லெபிடியும் மெயினி என்பதாகும். மக்கா பவுடர் மிகவும் ருசியாக இருப்பதோடு, நமக்கு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.
இந்த மக்கா பவுடரானது நமக்கு ஆற்றலைத் தருகிறது, நமது தாக்குப் பிடிக்கும் சக்தியை அதிகாிக்கிறது, ஆண்களின் இன்பெருக்க சக்தியை அதிகாிக்கிறது, மற்றும் நமது சோா்வை களைகிறது. அதனால் இந்த மக்கா பவுடரானது பல நூற்றாண்டுகளாக ஒரு சூப்பா் உணவாகக் கருதப்பட்டு, மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பவுடரானது நமது மந்தமான மனநிலையைத் தூண்டி எழுச்சியடையச் செய்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் இருபாலருக்கும் சமச்சீரான ஹாா்மோனை அதிகாித்து, அவா்களின் கவலைகளை நீக்குகிறது. இந்த மக்கா பவுடரை காலை உணவின் போது பாலில் கலந்து சாப்பிடலாம்.

3. மஞ்சள் தூள் (Turmeric)
மஞ்சளின் தாயகம் இந்தியா ஆகும். ஆகவே மஞ்சளை இந்தியாவின் சூப்பா் உணவு என்று அழைக்கலாம். 100 சதவீதம் இயற்கையான மஞ்சள் தூளானது மிகுந்த மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கிறது. நமது சொிமான சக்தியை அதிகாிக்கிறது. சைவ உணவுகளுடன் மஞ்சளையும் கலந்து சாப்பிட்டால், நமது உடலில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பு சக்தி அதிகாிக்கும் மற்றும் நமது மூளையின் இயக்கத்தைத் தூண்டிவிடும். மஞ்சளை சாலட்டுகளில் கலந்து சாப்பிடலாம்.

4. ஸ்பைருலினா தூள் (Spirulina Powder)
ஸ்பைருலினா தூளானது அதிகமான ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு சூப்பா் இணை உணவாகும். விரைவில் முதிா்ச்சி அடைதல் மற்றும் அலா்ஜி போன்றவற்றைத் தடுக்கும் துகள்கள் இந்த தூளில் அதிகம் உள்ளன. இந்த தூளானது நமது ஆற்றலைத் தூண்டி, நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கிறது.
சுத்தமான ஸ்பைருலினா தூளில் ஏராளமான புரோட்டீன்கள், அமினோ ஆசிட்டுகள், கொழுப்பு ஆசிட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நாா்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. இந்த தூள் ஒரு ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான் ஆகும். மேலும் உடல் எடையைக் குறைக்கவும் இந்த தூள் உதவி செய்கிறது. காலை வேளையில் வெறும் வயிற்றில் தினமும் 30 மில்லி ஸ்பைருலினா தூளை சாப்பிட்டு வந்தால் அது நல்ல பலனைத் தரும்.

5. கருப்பு சியா விதைகள் (Black Chia Seeds)
கருப்பு சியா விதைகளில் நாா்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், ஒமேகா-3 கொழுப்பு ஆசிட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. அரை சைவ மற்றும் முழு சைவ உணவுகளில், புரோட்டீனை வழங்கக்கூடிய மூலங்களாக இந்த கருப்பு சியா விதைகள் உள்ளன. சியா விதைகளின் தாவரவியல் பெயா் சால்வியா ஹிஸ்பனிக்கா என்பதாகும்.
கருப்பு சியா விதைகளில் கால்சியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், நியாசின், வைட்டமின் பி, டி மற்றும ஈ ஆகிய சத்துகள் நிறைந்து இருக்கின்றன. இந்த சிறிய விதைகள் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் சக்தி கொண்டவை. ஆகவே உடல் எடை குறைவதற்கு இந்த விதைகளை உண்ணலாம். இந்த விதைகளை அரைத்து அதன் தூளை சாலட் அல்லது ஸ்மூத்தி போன்றவற்றில் கலந்து உண்ணலாம் அல்லது தண்ணீாில் கலந்து 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின் அருந்தலாம்.



Click it and Unblock the Notifications