For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடல் பகுதி முழுக்க சுத்தம் செய்ய, இந்த 8 உணவில் ஏதேனும் ஒன்றையாவது சாப்பிட்டால் போதும்..!

|

மனித உடல் அமைப்பு மற்ற ஜீவ ராசிகளை விட வித்தியாசமானது. மனித உடல் அமைப்பை பற்றி பல புதிர்கள் இன்றளவும் ஆய்விலே உள்ளது. காரணம் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொரு சிறப்பு தன்மை உள்ளது தான். சில உறுப்புகள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும் தன்மை கொண்டது. ஆனால், ஒரு சில உறுப்புகள் சிறிது பாதிக்கப்பட்டாலும் அதன் பின் பழைய நிலைக்கு கொண்டு வருவது மிக கடினம்.

குடல் பகுதி முழுக்க சுத்தம் செய்ய, இந்த 8 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்..!

அத்தகைய வகையை சேர்ந்தது தான் இந்த குடல் பகுதியும். நாம் நினைப்பதை விட முக்கியமான உறுப்பாக இது உள்ளது. நாம் வாழ்வதற்கு அடிப்படை தேவையே உணவு தான். இவற்றை சரியான முறையில் செரிமானம் செய்து இதிலுள்ள சத்துக்களை எல்லா உறுப்புகளுக்கும் பிரித்து கொடுக்கும் தன்மை இதற்குண்டு.

குடல் பகுதியே பாதிக்கப்பட்டால் மற்ற உறுப்புகளும் ஒன்றன் பின் ஒன்றனாக பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தாகி விடும். இந்த பதிவில் குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீரகம்

சீரகம்

செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள மிக சிறந்த உணவு பொருள் சீரகம் தான். தினமும் சீரகத்தை அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான பகுதியில் எந்தவித நோய் தாக்குதல்களும் ஏற்படாது.

அத்துடன் வயிற்றில் ஏற்பட கூடிய பிரச்சினைகளையும் இது தடுத்து விடும் தன்மை கொண்டது. மேலும் வயிற்று புண் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.

மோர்

மோர்

குடல் பகுதியில் வேதி பொருட்கள் அதிகரித்தால் அது மற்ற உறுப்புகளையும் பாதிக்க கூடும். முக்கியமான இதன் நச்சு தன்மை குடல் பகுதியை சேதமடைய செய்து செரிமான கோளாறுகளை தரும். இதை தடுக்க மோர் சிறந்த உணவாக உள்ளது. தினமும் மோர் குடித்து வந்தால் நீர்சத்து அதிகரிப்பதோடு குடல் பகுதி ஆரோக்கியமாக இருக்கும்.

MOST READ: முடி உதிர்வை உடனே தடுக்க வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெய்யை தடவினாலே போதும்..!

பூண்டு

பூண்டு

அல்லிசின் என்கிற மூல பொருள் பூண்டில் உள்ளதால் குடல் பகுதியை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும். வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்கவும் இது பயன்படுகிறது. மேலும், செரிமானம் விரைவாக நடைபெற பூண்டு தான் சிறந்த உணவு.

பப்பாளி

பப்பாளி

ஏராளமான வைட்டமின்கள் பப்பாளியில் நிறைந்து உள்ளது. முக்கியமாக இதில் உள்ள பாப்பைன் என்கிற மூல பொருள் செரிமானத்தை தூண்டும் நொதியை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் ஜீரண கோளாறு இல்லாமல் உணவு விரைவிலே செரிமானம் அடையும்.

எலுமிச்சை

எலுமிச்சை

1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை 1 ஸ்பூன் தேனுடன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வருவதன் மூலமாக குடல் பகுதியில் உள்ள அழுக்குகள் வெளியேறி விடும்.

அத்துடன் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளும். இந்த சாற்றை வாரத்திற்கு 3 முறையாவது சாப்பிட்டு வருவது நல்லது.

MOST READ: தூங்க போகும் முன்னர் இதை கொஞ்சம் சாப்டுட்டு தூங்குங்க! அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு..!

இஞ்சி

இஞ்சி

பாரம்பரிய உணவு பொருளாக கருதப்படுவது இஞ்சி தான். இஞ்சியை உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக வயிற்றில் உண்டாக கூடிய புண்களை தடுக்க முடியும்.

அத்துடன் பசியை தூண்டிய குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். பெருங்குடல் புற்றுநோய், குடல் வாழ்வு புற்றுநோய் ஆகியவற்றில் இருந்து நம்மை காக்கும் தன்மை இதற்குண்டு.

புதினா

புதினா

புதினாவின் மென்தால் என்கிற மூலப்பொருள் தான் புதினாவின் முழு ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணம். வயிற்று உப்பசம், குடல் புண், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு இது சிறந்த மருந்தாக அமையும். குடல் வழியை சுத்தம் செய்யவும் இந்த உணவு பொருள் உதவும்.

சியா விதைகள்

சியா விதைகள்

குடல் பகுதியில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை இதற்கு உண்டு. மேலும், காலையில் ஏற்பட கூடிய மலச்சிக்கல் பிரச்சினைக்கும் இந்த விதைகள் சிறந்த தீர்வாக இருக்கும். நார்ச்சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் மிக சுலபமாக செரிமானத்தை ஊக்குவிக்கும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

குடல் பகுதி பாதிக்கப்படுவதற்கு சில உணவுகள் தான் முக்கிய காரணியாக இருக்கிறது. குறிப்பாக இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவை தான் குடல் பகுதியை பெரிய அளவில் பாதிக்க செய்கின்றன.

MOST READ:தினமும் அரை கைப்பிடி பிஸ்தா சாப்பிட்டால் உடல் எடையை சில வாரங்களிலே குறைக்கலாம்..!

ஆகையால் இது போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Foods for a Healthy Intestinal Tract

Here we listed some of the foods for a healthy intestinal tract.
Desktop Bottom Promotion