For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலாவதியான இந்த 9 உணவுகளை தவிறிக்கூட தொட்டு விடாதீர்கள்..! மீறி தொட்டால்..?!

|

எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அதற்கென்று ஒரு காலாவதி தேதி இருக்கும். மனிதனின் தற்போதைய வாழ்நாள் 60- 70 என்கிற கணக்கில் இருப்பது போன்றே இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் காலாவதி தேதி உண்டு. ஒரு சில பொருட்களை காலாவதி ஆன பின்னரும் நாம் சாப்பிடலாம். இவற்றால் பெரிதாக ஆபத்து உண்டாகாது.

காலாவதியான இந்த 9 உணவுகளை தவிறிக்கூட தொட்டு விடாதீர்கள்..! மீறி தொட்டால் மரணம் தான்..!

ஆனால், சில உணவுகளை அதன் காலாவதி தேதிக்கு பிறகு தொட்டால் கூட ஆபத்து நமக்கு தான். அப்படிப்பட்ட உணவுகளை அன்றாடம் நாம் சாப்பிட்டும் வருகின்றோம். பெரும்பாலும் சாப்பிட கூடிய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றிற்கு கூட தனிவிதமான காலாவதி தேதிகள் உண்டு. இதனை அறியாமல் நாம் சாப்பிட்டு வருகின்றோம்.

இதனால் மரணம் கூட நேரலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. அந்த அளவிற்கு காலாவதியான உணவு பொருட்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம். இவற்றை தொட்டால் கூட ஆபத்து என்பதை மறக்காதீர்கள்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கீரை

கீரை

அதிக சத்துக்கள் கொண்ட கீரை வகைகளுக்கும் தனி காலாவதி தேதி உண்டு. காலாவதி ஆன கீரைகளை சமைத்து உண்டால் அவற்றில் ஈ.கோலி என்கிற பாக்டீரியா வகை குடியேறி உங்களின் முழு ஆரோக்கியத்தையும் கெடுத்து விடும். எனவே கீரைகளை, வாங்கிய ஓரிரு நாட்களிலே சாப்பிட்டு விடுங்கள்.

சிப்ஸ்

சிப்ஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் சிப்சை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். சில சிப்ஸ் பேக்கட்டுகளில் காலாவதி தேதிகள் குறிப்பிடுவது கிடையாது. அவ்வாறு இருக்க இதில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யின் தன்மை விஷமாக மாற வாய்ப்புகள் உண்டு. ஆதலால் ஒரு வித காலாவதி ஆகின வாடை ஏற்பட்டால் அதை தூக்கி போட்டு விடுங்கள்.

முட்டை

முட்டை

சில வீடுகளில் 1 மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கும் போது, அவற்றுடன் முட்டை போன்றவற்றையும் சேர்த்து வாங்கி விடுவர்.

அவ்வாறு வாங்குவது உங்களுக்கு தான் பேராபத்தை உண்டாக்குகிறதாம். முட்டை காலாவதி ஆகிவிட்டதா இல்லையா என்பதை அறியவும் எளிய வழி உள்ளது.

எப்படி..?

எப்படி..?

குளிர்ந்த நீரை 1 பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு முட்டையை ஒன்று ஒன்றாக அதிலிடவும். இப்படி செய்யும்போது அந்த முட்டைகள் மூழ்கினால் காலாவதி ஆகவில்லை என்று அர்த்தம்.

இதுவே அவை மிதந்தால் காலாவதி ஆகிவிட்டது என்று அர்த்தமாம். எனவே, காலாவதி ஆகின முட்டையை சாப்பிட்டால் உடல் நல கோளாறுகள் நிச்சயம் உண்டாகும்.

MOST READ: இந்த உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் என்ன விதமான விளைவுகள் உடலில் உண்டாகும்..?

மீன்

மீன்

சாப்பிட கூடிய மீன்கள் காலாவதி ஆகிவிட்டால் கட்டாயம் தவிர்த்திட வேண்டும். இதில் சிலர் கெட்டு போகவில்லை என்று எண்ணி அதனை ஃபிரிட்ஜில் சேமித்து வைப்பர்.

இப்படி மீனை சேமித்து வைத்து சாப்பிட்டால் வயிற்று உபாதைகள் ஏற்படும். கூடுதலாக வாந்தி, மயக்கம், போன்ற பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

முளைகட்டிய உணவுகள்

முளைகட்டிய உணவுகள்

பொதுவாக முளைகட்டிய உணவுகள் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும். இவற்றை சாப்பிடுவதால் பல நன்மைகளே கிடைக்கும். ஆனால், இந்த உணவுகளை காலாவதி ஆகின பின்னர் சாப்பிட்டு வந்தால் நமக்கு தான் ஆபத்து.

ஏனெனில் முளைகட்டிய உணவுகளில் ஈ.கோலி பாக்டீரியாக்கள் அதிக அளவில் குடி இருக்கும். இவற்றை நாம் சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சோர்வு, வயிற்று போக்கு போன்ற கோளாறுகள் உண்டாகும்.

சீஸ்

சீஸ்

பால் பொருட்களில் பலருக்கும் பிடித்தமான ஒன்று சீஸ் தான். இதற்கும் காலாவதி தேதி உண்டு என்பதை மறவாதீர்கள். சுவையாக உள்ளது என்பதற்காக காலாவதி ஆகின பின்னரும் இதை சாப்பிட்டால் பின்விளைவுகள் அதிகம்.

சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு நாள் கணக்கில் கழிவுகள் வெளியேறாமல் போக கூடிய நிலையும் உண்டாகலாம்.

இறைச்சி

இறைச்சி

சாப்பிட கூடிய எல்லாவித உணவுகளுக்கும் காலாவதி தேதிகள் உண்டு. ஆனால், நம் வீடுகளில் சில உணவுகளை பல நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்து உண்ணும் பழக்கம் உள்ளது.

இந்த பழக்கம் மோசமான பாதிப்பை உடலுக்கு ஏற்படுத்தும். இறைச்சிகளை இப்படி சாப்பிடவதால் அவற்றின் தன்மை திரிந்து விஷயமாக மாறி விடும்.

MOST READ: தினமும் 2 தக்காளியை சாப்பிட்டால் அதிகபட்சமாக உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்..?

பழங்கள்

பழங்கள்

ஒவ்வொரு பழங்களுக்கும் வெவ்வேறு விதமான தன்மை உண்டு. பழங்கள் சில வெளியே கேட்டு போகாத மாதிரியும் உள்ளே கேட்டு போன மாதிரியும் இருக்கும். இது போன்ற பழங்களை சாப்பிட்டால் ஆபத்து நமக்கு தான்.

அடைப்பட்ட உணவுகள்

அடைப்பட்ட உணவுகள்

பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், கேனில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை உடலுக்கு பேராபத்தை தர கூடியவை. காரணம், இந்த வகை உணவுகள் எல்லாம் ஆயுளை குறைக்கும் தன்மை கொண்டது.

எனவே, மேற்சொன்ன உணவுகளை காலாவதி தேதி தாண்டிய பின் ஒரு போதும் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Should Never Eat Past The Expiration Date

This article talks about foods You Should Never Eat Past The Expiration Date.
Desktop Bottom Promotion