Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தினமும் காலையில 3 உலர்ந்த பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இந்த 7 வகை பிரச்சினையும் தீரும்
இங்கே உலர் பேரிச்சம்பழம் பற்றிய 7 அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் குறிப்பாக அதனால் உண்டாகும் எலும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் பார்க்கலாம்.
உலர் பேரீச்சம்பழத்தை உண்பதால் உடலில் ஏற்படும் 7 அற்புத மாற்றங்கள்: எலும்பு முதல் எனர்ஜி வரை நடக்கும் அதிசயம். ஆம். பழ வகை சம்பந்தப்பட்ட உணவுகளை விரும்புபவர்களுக்கு குளிர்காலம் என்றாலே நினைவுக்கு வருவது மிருதுவான, ருசியான பேரீச்சம் பழங்களே. குளிர்காலத்துக்கு தேவையான அத்தனை சத்துக்களையும் கொண்டிருப்பது பேரிச்சை.
ஆனால் உலர் பேரீச்சம்பழங்களால் ஏதாவது நன்மை இருக்கிறதா என்றால் பேரீச்சம்பழங்களுக்கு சற்றும் குறையாத இன்னும் சொல்ல போனால் மேலான சத்துக்கள் இருக்கிறது என்பது ஆச்சர்யமானது. நன்கு உலர்த்தப்பட்டதால் சற்று கடினமாக, ஈரத்தன்மை இல்லாமல், சுருங்கி இருக்கும் இவற்றில் இருக்கும் அளப்பரிய வைட்டமின்களும் தாது உப்புக்களும் உங்கள் உடலை நோயின்றி, புத்துணர்வோடு வைக்க வல்லவை.

எடை குறைக்க நினைப்பவர்கள்
டெல்லியை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் கூறுகையில், "உலர்ந்த பேரீச்சம் பழங்களுடன் ஒப்பிடுகையில், ஈரப்பதம் இல்லாததால் இவை நீண்ட காலம் கெடாது. உலர் பேரீச்சம்பழங்களில் கலோரி அதிகமாக உள்ளதால் எடை குறைப்பு முயற்சிகளில் ஈடுபடுவோர் சற்று குறைவாக உட்கொள்ள வேண்டும். அதிக புரதச்சத்தும் நார்ச்சத்தும் இருப்பதால் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் சி அதிகம் கிடைக்கும் உணவுகளில் இது முக்கியமானது.
தினம் இதை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் அற்புதங்களை கீழே பாருங்கள்:

இதயத்திற்கு
இதில் உள்ள கொழுமியபுரதம் என்னும் லைப்போப்ரோடீன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த வல்லவை. அதனால் இதயத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

ஜீரணத்திற்கு
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் எடை குறைப்பை ஊக்கப்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து ஜீரண மண்டலத்தை தூண்டி உணவை செரிக்க செய்கிறது.

மலச்சிக்கல்
மலச்சிக்கல் மனிதனுக்கு பலச்சிக்கல் என்று நம்ம சூர்யா சொலவது போல எல்லா வியாதிக்கும் இது மலச்சிக்கல் ஒரு காரணமாகிறது. உலர் பேரீச்சையில் உள்ள நார்ச்சத்து இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு இதை தீர்க்கிறது.
MOST READ: இந்த மூன்று லக்கி ஜோடிகளுக்கு தான் 2019- ல் திருமண யோகம் அமோகமா இருக்குமாம்...

சக்தியை அதிகரிக்கும்
இயற்கை சர்க்கரை (குளுக்கோஸ் மற்றும் பிரக்ட்டோஸ்) உள்ளதால் சார்ந்திருக்கும் போது இரண்டு பழங்கள் உள்ளே தள்ளினாள் புது எனர்ஜி கிடைக்கும்.

எலும்புகளை பாதுகாக்கிறது
கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது. கால்சியம் குறைபாட்டால் வரும் எலும்புப்புரை மற்றும் முடக்குவாதத்தை தடுக்க ஒரு கையளவு உலர் பேரீச்சை போதும்.

தோல் பளபளக்க
பி5 வைட்டமின்கள் அதிகம் உள்ளதால் செல் சிதைப்பான் எனப்படும் ஆன்டி ரேடிக்கல் ஐ எதிர்க்கிறது. உடைந்த செல்களை சீராக்குகிறது. உங்களை தோலின் பளபளப்பை கூடி இளமையாக தோன்ற செய்கிறது.

முடி உதிர்வதை தடுக்கிறது
இதில் உள்ள பி5 வைட்டமின்கள் முடி உதித்தலை கட்டுப்படுத்தி வேர்களை வலுவாக்குகிறது. உடைந்த முடிமுடிகளை சீர் செய்கிறது.
அப்புறம் என்ன பாஸ், இவ்வளவு சிறப்பு இருக்கிற உலர் பேரீச்சையை உங்கள் தினசரி உணவில் சேர்த்து வாழ்வில் வளம் பெறுங்கள்



Click it and Unblock the Notifications

