For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 6 காய்களை சாப்பிட்டா தொப்பை போடுமாம்? அதுல முட்டைகோசும் ஒன்னு... அத சாப்பிடாதீங்க

By Mahibala
|

பொதுவாகவே காய்கறிகள் நம்முடைய உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதே காய்கறிகளை நாம் பயன்படுத்தும் சில முறைகளால் தான் அவை ஆரோக்கியமற்றதாக மாறிவிடுகின்றன.

Vegetables

சில காய்கறிகள் உங்களுடைய உடலின் கிளைசெமிக் குறியீட்டு எண்ணை குறைத்து விடுகின்றன. அதாவது உங்களுடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்து விடுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் அது உங்களுடைய முறையான பசியை ஒடுக்கிவிட்டு நொறுக்குத் தீனியைத் தேடிச் செல்ல சொல்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சில காய்கறிகள்

சில காய்கறிகள்

பொதுவாக எல்லா காய்கறிகளிலும் ஒரே மாதிரியான சத்துக்கள் இருப்பது கிடையாது. சில காய்கறிகளில் அதிக அளவில் ஸ்டார்ச் இருக்கிறது. அதனால் அது சுவையானதாக இருக்கிறது. நம்மை அதிகமாகச் சாப்பிடத் தூண்டுகிறது. அது நம்முடைய உடலில் ஜீரணமாவதற்கு கடினமாகவும் அதிக சர்க்கரையை உற்பத்தி செய்து அவற்றை கொழுப்பாகவும் மாற்றிவிடுகிறது.

MOST READ: தொடர்ந்து 7 நாள் எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா? தெரிஞ்சிட்டு குடிங்க...

தொப்பை

தொப்பை

சில காய்கறிகள் சாப்பிட்டு முடித்த பின், வாயுத்தொல்லையும் ஏற்படுத்தும். வயிறை கடமுடவென உருட்டும். அது தொப்பையை உண்டாக்கும். அதாவது சில காய்கறிகள் கூட உங்களுடைய தொப்பையை அதிகப்படுத்தும்.

பொரிக்கவே கூடாது

பொரிக்கவே கூடாது

வெஜிடேரியன் உணவு பிரியர்கள் அதிகமாக பொரித்த காய்கறிகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதாவது உருளைக்கிழங்கு சிப்ஸ், ஆனியன் ரிங்க்ஸ், பிரெஞ்ச் பிரைஸ், பொரித்த வெண்டைக்காய் ஆகியவை சாப்பிடவே கூடாது. குறிப்பாக, பிரெட் கிரம்ஸ் சேர்த்து பொரிக்கப்பட்ட காய்கறிகளுக்கு முதலில் நோ சொல்லுங்கள். வெள்ளை மாவுப் பொருள்கள் பயன்படுத்தி பொரித்தவைகளை தொடவே கூடாது. அப்படி சாப்பிட்டால் தொப்பையை நீங்களே வா வா என அழைப்பதற்குச் சமம்.

அதோடு பொரிக்கும் உணவுகளில் இயல்பாகவே உப்பு கொஞ்சம் கூடுதலாகத் தான் இருக்கும். அதன் சுவை நம்மை நிறுத்தாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தூண்டும். பிறகு அவதிப்பட வேண்டியது தான்.

முட்டைகோஸ்

முட்டைகோஸ்

என்ன வாயைப் பிளக்கிறீர்கள். முட்டைகோஸ் சாப்பிட்டால் தொப்பை போடுமா என்று யுாசிக்கிறீங்களா? உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். நிச்சயம் போடும். எப்படினு கேட்கறீங்களா? இதோ சொல்றேன்.

முட்டைகோஸ், பிரக்கோலி ஆகிய காய்கறிகளட மிகவும் ஆரோக்கியமானவை தான். ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அதேசமயம் இந்த காய்கறிகள் வாயுத்தொல்லையும் வயிறு உப்புசத்தையும் (வீக்கம்) ஏற்படுத்தும். அதனால் முட்டைகோஸை சாப்பிடும்போது கட்டாயம் வாயுத்தொல்லைக்கு ஆளாவீர்கள். நீங்களே நன்றாகக் கவனித்துப் பாருங்கள். எப்போதாவது வேறு வழியில்லாமல் சாப்பிடுவது வேறு. வழக்கமான காய்கறிகளாக இவை இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

MOST READ: உங்க அயர்ன் பாக்ஸ் இப்படி இருக்கா? இத ஒரே நிமிஷத்துல எப்படி பளிச்னு சுத்தம் செய்யலாம்?

 வெஜ் சாலட்

வெஜ் சாலட்

நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம் வெஜ் சாலட் சாப்பிடுவது உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கும். மிக ஆரோக்கியமானது என்று. ஆனால் அது உண்மையல்ல. ஏனென்றால் ரெடிமேடாக ஏற்கனவே கடைகளில் வெட்டி வைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட சாலட்களில் நிச்சயம் ஏதாவது ஒரு டாப்பிங்க்ஸ் வைக்கப்பட்டிருக்கிறது.

கடைகளில் ரெடிமேடாக வாங்கும் சாலட்களில் பொதுவாக டிரான்ஸ் ஃபேட் அதிகமாக இருக்கும். நிச்சயம் பதப்படுத்தப்பட்டதாகவும் சர்க்கரை சேர்க்கப்பட்டதாகவும் இருக்கும். அதிலும் குறிப்பாக இந்த குரோட்டன் வகை காய்கறிகள் பட்டர் மற்றும் டிரான்ஸ் ஃபேட் பொருள்கள், வெள்ளை மாவுப்பொருள்கள் நிச்சயம் சேர்க்கப்பட்டிருக்கும்.

அதேபோல் சீஸ், இனிப்பு கலந்த நட்ஸ் வகைகள், பழங்கள் ஆகியவை மேல்புறத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அப்படி ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்ட, பேக் செய்யப்பட்ட காய்கறிகள் கலவையான வெஜ் சாலட்டை கையில் தொடாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது.

ஸ்வீட் கார்ன்

ஸ்வீட் கார்ன்

வெயில் காலத்தில் கிரிஸ்டு பர்கர், ஸ்வீட் கார்ன், கூல் ட்ரிங்க்ஸ் மிக அதிகமாக விற்பனையாகும். நம்மாலும் சாப்பிடாமல் இருக்க முடியாது. அதிலும் ஸ்வீட் கார்னை பார்த்ததும் தாவி விடுவோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஸ்வீட் கார்ன் ஸ்டார்ச்சும் அதிக அளவிலான கிளைசெமிக்கும் கொண்டது. இது ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுப்பதோடு ரத்தத்தின் சர்க்கரை அளவையும் அதிகரிக்கச் செய்து விடும். அதுமட்டுமா இதில் பட்டரும் உப்பும் சேர்க்காமல் நம்மால் சாப்பிட முடியாது. அப்புறம் என்ன நடக்கும்னு நீங்களே யோசிச்சிக்கோங்க.

அதனால் முடிந்தவரை நீங்கள் சாப்பிடும் கார்ன் அளவை பாதியாகவும் அதில் சேர்க்கப்படும் பட்டரையும் குறைத்து சாப்பிடுங்கள்.

வேர்க் காய்கள்

வேர்க் காய்கள்

மண்ணுக்குக் கீழே வேர்களில் விளைகின்ற காய்கறிகளில் பொதுவாக ஸ்டார்ச் அதிகமாகவே இருக்கும். அதில் வெறும் உருளைக்கிழங்கு மட்டுமல்லாது, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீட்ரூட், டர்னிப், கேரட் ஆகிய எல்லாமே தான் அடங்கும்.

இந்த காய்கறிகளை அதிகமாகவோ, பொரித்தோ அல்லது அதிக அளவில் பட்டர், உப்பு சேர்த்தோ இந்த காய்கறிகளைச் சாப்பிட்டீர்கள் என்றாலோ தொப்பை அதிகரிக்கும்.

குறிப்பாக, கேரட், உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு பயன்படுத்துவது இன்னும் மோசமான விளைவைத் தரும். இதன் தோலில் தான் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதை நீக்கிவிட்டால் நீங்கள் முழுக்க முழுக்க ஸ்டார்ச்சையே சாப்பிட வேண்டியிருக்கும்.

MOST READ: ஒருத்தர முழுசா நம்பறதுக்கு முன்னாடி அவர்கிட்ட இந்த அறிகுறி இருக்கான்னு மொதல்ல பாருங்க

உலர்ந்த காய்கறிகள்

உலர்ந்த காய்கறிகள்

உலர வைக்கப்பட்ட, உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட காய்கறிகள் பொதுவாகவே ஆரோக்கியமற்றவை. இவற்றை சாப்பிட்டால் முதலில் நம்முடைய உடலில் இருக்கின்ற தண்ணீர் முதலில் வெளியேற்றப்படும். நமக்குத் தேவையான கலோரிகள் மற்றும் சர்க்கரை அளவில் கவனமாக இருக்க வேண்டும்.

உருளைக் கிழங்கு சிப்ஸை காட்டிலும் மற்ற காய்கறிகளில் செய்யப்பட்ட சிப்ஸ் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் கூட, ஓரளவுக்கு மேல் அதை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றா்ல இதிலும் அதே அளவு எண்ணெயும் உப்பு, சர்க்கரை மற்றும் மசாலாக்கள் சேர்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Vegetables You MUST Avoid To Lose Your Belly Fat

Veggies are generally very healthy for you. Most of the time it is what you do to them that makes them unhealthy. Other vegetables may spike your glycemic index, meaning your body increases your blood sugar. As your blood sugar drops you’ll feel hungry and want to snack.
Story first published: Saturday, March 9, 2019, 13:45 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more