For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எவ்ளோ சாப்பிட்டாலும் நோஞ்சானாவே இருக்கீங்களா? இத சாப்பிடுங்க சும்மா கும்முனு ஆகிடுவீங்க...

உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவு இணைகள் பற்றி இங்கே விளக்கமாக்க கொடுக்கப்பட்டுள்ளது.

|

நம்முடைய உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இருந்தால் தான் நாம் ஆரோக்கியமான எடையுடன் இருக்கிறோம் என் அர்த்தம். அதற்குக் குறைவாகவோ கூடுதலாகவோ எடை இருந்தால், அதனால் நமக்கு நிறைய ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம்.

these 10 food combinations that can help you gain weight

நாட்டில் எவ்வளவு பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்களோ அதேபோல், பெரும்பாலானோர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடையே ஏறாமல் நோஞ்சானாக இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை கூட்ட

எடை கூட்ட

எடையைக் கூட்டுவதற்கு படாதபாடு படுகிறார்கள். கண்டதையும் சாப்பிடுகிறார்கள். எடையைக் கூடு்ட வேண்டும் என்பதற்கான கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தேடி சாப்பிடுவதும் ஆரோக்கியக் கேடான விஷயம் தான். ஆரோக்கியமான முறையில் என்ன சாப்பிட்டால், உடல் எடை உங்களுடைய உயரத்துக்கு ஏற்றபடி கூடும் என்பதையும் அதற்கான உணவுமுறைகளையும் இங்கே பார்ப்போம்.

MOST READ: இந்த கிழங்கை ஏன் வாசலில் கட்டுகிறார்கள் தெரியுமா? இதோட மகத்துவம் தெரிஞ்சா விடமாட்டீங்க

காரணங்கள்

காரணங்கள்

உடல் உயரத்துக்கு தக்கபடி எடையில்லாமல் மிகவும் ஒல்லியாக இருப்பதற்கு சில காரணங்கள் உண்டு. அவை,

அதிகப்படியான உடற்பயிற்சி

விரதம் இருப்பது

சாப்பிடுவதை தவிர்ப்பது

மன அழுத்தம்

ஊட்டச்சத்து குறைபாடு

புற்றுநோய்

நீரிழிவு நோய்

மரபணு காரணிகள்

போதிய தூக்கமின்மை

ஜீரண சக்தி குறைபாடு

ஆகியவற்றாலும் கூட உடல் எடை தேறாமல் இருக்கும். அவற்றை எப்படி சரிசெய்யலாம்.

உணவுமுறைகள்

உணவுமுறைகள்

சில உணவுகள் வெறுமனே சாப்பிடும் போது சில குறிப்பிட்ட கலோரி அளவிலும் அதுவே சில துணைப் பொருள்களுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் கலோரி அளவிலும் அபரிமிதமான மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அப்படி எந்தெந்த உணவுப் பொருளுடன் எவற்றை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடையில் நல்ல மாற்றம் உண்டாகும் என்று தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள். அத்தகைய பெரும் மாற்றங்களை உண்டாக்கும் உணவு இணைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

அரிசி சாதம்

அரிசி சாதம்

தினமும் இரவு நேர உணவாக, ஒரு கப் அரிசி சாதத்தையும் அதோடு வெண்ணெயையும் சேர்த்து சாப்பிட்ட வாருங்கள். மிக வேகமாக உங்களுடைய உடல் எடையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பகலை விட இது இரவு உணவில் தான் நல்ல பயனைத் தரும்.

பீநட் பட்டர்

பீநட் பட்டர்

வேர்க்கடலையில் கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. அது உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பாகத் தான் இருக்கிறது என்பதால் பயப்பட வேண்டாம். தினமும் தாராளமாக உங்களுடைய டயட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். பிரட், சாலட், மில்க்க்ஷேக், ஸ்மூத்தி என எல்லாவற்றிலும் சுவைக்கான இந்த பீநட் பட்டரை சாப்பிடுங்கள். ஆரோக்கியமான முறையில் சீராக உங்களுடைய உடல் எடை கூட ஆரம்பிக்கும்.

MOST READ: சுகாதாரமான முறையில் ஆணின் பிறப்புறுப்பை சுத்தம் செய்வது எப்படி?

மாம்பழமும் பாலும்

மாம்பழமும் பாலும்

தினமும் ஒரு நன்கு பழுத்த மாம்பழமும் ஒரு கப் வெதுவெதுப்பான பாலும் ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால் போதும் உடல் எடை கூடும். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை இதைத் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் உடல் எடை கூடும்.

வாழைப்பழமும் தேனும்

வாழைப்பழமும் தேனும்

பாதுகாப்பான முறையில், இயற்கையான வழியில் உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்றால், வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். ஆரோக்கியமான முறையில், சீராக உடல் எடை அதிகரிக்க வேண்டும்.

வறுத்த முந்திரி

வறுத்த முந்திரி

நெய் சேர்த்து பிரௌன் கலரில் நன்கு மொறுமொறுவென வறுத்த முந்திரியைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வாருங்கள். பிறகு உங்கள் எடையை செக் பண்ணிப் பாருங்க. சும்மா கும்முனு எடை கூடியிருக்கும்.

MOST READ: அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா... ஒரே வாரம் ட்ரை பண்ணுங்க...

அத்தியும் உலர் திராட்சையும்

அத்தியும் உலர் திராட்சையும்

உலர்ந்த அத்திப்பழங்கள் கடைகளில் கிடைக்கும். தினமும் 7 உலர் அத்திப் பழத்தையும் 30 கிராம் அளவுக்கு உலர் திராட்சையும் எடுத்துக் கொண்டு, இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் ஊற வைத்த உலர் பழங்களைச் சாப்பிட்டு வாருங்கள். அந்த தண்ணீரையும் கூட குடிக்கலாம். தொடர்ந்து ஒரு மாதத்துக்கு இதை செய்து வாருங்கள். நீங்கள் நினைத்தபடி உங்கள் உடல் எடையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

வெண்ணெய்

வெண்ணெய்

தினமும் மூன்று வேளை உணவுக்குப் பின்னும் ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். வேகமாக எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

தினமும் ஒரு வேகவைத்த உருளைக் கிழங்கை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு சாப்பிட்டு வந்தால் எடை வேகமாக அதிகரிக்கும். அந்த வேகவைத்த உருளைக் கிழங்கை பட்டரில் வதக்கியும் சாப்பிடலாம்.

வாழைப்பழமும் பாலும்

வாழைப்பழமும் பாலும்

தினமும் காலையில் ஒரு வாழைப்பழமும் அதோடு, ஒரு கப் வெதுவெதுப்பான பாலில் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.

MOST READ: எழுதும்போது உங்களுக்கு கை நடுங்குதா? அது ஏன்? எப்படி ஈஸியா சரி பண்ணலாம்னு தெரியுமா?

பாதாமும் பாலும்

பாதாமும் பாலும்

நன்கு கொதிக்க வைத்த ஒரு கப் பாலுடன் நன்கு துருவிய ஒரு கை நிறைய பாதாம் பருப்பை எடுத்து அதில் போட்டுக் குடிக்க வேண்டும். இந்த பாலை மிதமான தீயில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வரையில் கொதிக்க வையுங்கள். பின் இறக்கி, வெதுவெதுப்பான நிலையில், ஒரு மாதத்துக்கு தினமும் காலையில் குடித்து வாருங்கள். உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக ஆரோக்கியமான முறையில் கூடிக்கொண்டே போகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

these 10 food combinations that can help you gain weight

here we are give some combination foods that can help you gain weight.
Story first published: Tuesday, October 30, 2018, 17:27 [IST]
Desktop Bottom Promotion