ஆணுறுப்பின் ஆரோக்கியத்திற்காக ஒவ்வொரு ஆண்களும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

நம் உடலில் உள்ள இதயம், கல்லீரல், மூளை, சிறுநீரகங்கள் போன்றவற்றைப் போன்று அந்தரங்க உறுப்புக்களும் சில முக்கியமான செயல்பாட்டைச் செய்கின்றன. அதில் வெளியேற்றம் மற்றும் இனப்பெருக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளால் அந்தரங்க உறுப்புக்கள் சரியாக செயல்படாமல் போனால், அதனால் அந்தரங்க உறுப்புக்களின் செயல்பாடுகளில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

Surprising Foods That Can Boost The Health Of Your Penis

ஆகவே மற்ற உறுப்புக்களின் ஆரோக்கியத்திற்காக நாம் எடுக்கும் முயற்சிகளைப் போன்றே, அந்தரங்க உறுப்புக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியிலும் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியம். ஒருவரது உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், மேம்படுத்தவும் ஆரோக்கியமான மற்றும் சரிவிகித டயட்டை மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. இதை அந்தரங்க உறுப்புக்களின் ஆரோக்கியத்திற்கும் பின்பற்ற வேண்டும்.

ஆம், நாம் சாப்பிடும் சில உணவுகள் நம் அந்தரங்க உறுப்புக்களின் ஆரோக்கியத்தையும், செயல்பாட்டையும் மேம்படுத்தி, நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும். இக்கட்டுரையில் ஆணுறுப்பின் ஆரோக்கியத்திற்காக ஒவ்வொரு ஆண்களும் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிளை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், ஆணுறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆணுறுப்பில் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு உதவி, பாலுணர்ச்சியை அதிகரித்து, உடலுறவின் போது சிறப்பாக செயல்பட உதவும். மேலும் ஆப்பிளில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆணுறுப்பைச் சுற்றி கட்டிகள் ஏதும் வளர்ச்சி பெறாமல் தடுக்கும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ சூப்பர் உணவுகளுள் ஒன்று. உடல்நல நிபுணர்களும், அவகேடோ பழத்தை உலகிலேயே ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளுள் ஒன்றாக கூறுகின்றனர். இதில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள், உடல் எடையைக் குறைப்பது முதல், புற்றுநோய் போன்ற பெரிய நோய்களைத் தடுக்க உதவும். ஆண்கள் அவகேடோ பழத்தை அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பாலுணர்ச்சியைத் தூண்டி, நீண்ட நேர உறவில் சிறப்பாக செயல்பட உதவும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த மற்றும் ருசியான பழங்களுள் ஒன்றான வாழைப்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களுள் ஒன்றாகும். இதில் உள்ள வளமான அளவிலான பொட்டாசியம், உடலுறவின் போது நீண்ட நேரம் விறைப்பை மேம்படுத்தும். மேலும் இதில் உள்ள புரோமிலைன் என்னும் நொதிப் பொருள், உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை மேம்படுத்தும் மற்றும் இந்த ஹார்மோன் ஆணுறுப்பின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதும் கூட.

பீட்ரூட்

பீட்ரூட்

ஆண்களே உங்கள் ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆசைப்பட்டால், பீட்ரூட்டை அடிக்கடி சாப்பிடுங்கள். இதில் உள்ள நைட்ரேட்டுகள், உடலில் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை தடையின்றி ஓடச் செய்யும். ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால், அது ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை இதயத்திற்கு மட்டுமின்றி, ஆணுறுப்பிலும் ஊக்குவித்து, ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பாலுணர்ச்சியை ஊக்குவிக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலி ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓர் அற்புதமான காய்கறியாகும். பல்வேறு ஆய்வுகளில் ப்ராக்கோலியை ஒருவர் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், அது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதோடு ஆணுறுப்பின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதற்கு ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் சி தான் காரணம். ஏனெனில் வைட்டமின் சி ஆணுறுப்பில் மட்டுமின்றி, அனைத்து உறுப்புக்களிலும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும்.

கேரட்

கேரட்

கேரட் மிகவும் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறியும் கூட. இந்த கேரட்டை பச்சையாகவோ, வேக வைத்தோ அல்லது ஜூஸ் வடிவிலோ உட்கொள்ளலாம். பொதுவாக கேரட்டை ஒருவர் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆண்கள் கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால், அது ஆண் ஹார்மோனின் உற்பத்தியை மேம்படுத்தி உதவி, ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

முந்திரி

முந்திரி

பெரும்பாலானோருக்கு முந்திரி ஆரோக்கியமான ஓர் நட்ஸ் என்பது தெரியும். இதை தினமும் ஸ்நாக்ஸாக சிறிது சாப்பிட்டு வருவதன் மூலம், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். முந்திரியை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்கும். ஆண்கள் முந்திரியை தினமும் சாப்பிட்டால், அதில் உள்ள ஜிங்க் விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தி, இனப்பெருக்க மற்றும் ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.

செர்ரி

செர்ரி

பெர்ரிப் பழங்களுள் ஒன்றான செர்ரிப் பழம் சுவையானது மட்டுமின்றி, ஊட்டச்சத்து நிறைந்ததும் கூட. செர்ரிப் பழத்தை அன்றாட டயட்டில் தொடர்ந்து சேர்த்து வருவதன் மூலம், ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, அதில் உள்ள அந்தோசையனின்கள், இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை தடையின்றி ஓடச் செய்யும்.

தோல் நீக்கப்பட்ட சிக்கன்

தோல் நீக்கப்பட்ட சிக்கன்

தோல் நீக்கப்பட்ட சிக்கனில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவது, கொழுப்புக்களை கரைப்பது, ஆற்றலை மேம்படுத்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதற்கு சிக்கனில் உள்ள புரோட்டீன் தான் காரணம். மேலும் தோல் நீக்கப்பட்ட சிக்கனில் வைட்டமின் பி3 அதிகம் உள்ளது. இது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகமாக பாயச் செய்யும் மற்றும் இதன் விளைவாக ஆணுறுப்பின் ஆரோக்கியம் மேம்படும். இதனால் உடலுறவின் போது சிறப்பாக நீண்ட நேரம் செயல்பட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Foods That Can Boost The Health Of Your Penis

Here is a list of foods which can help boost the health of your penis and improve libido during intercourse.