For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்காளி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள்

தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது அது உடலில் பலவித எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. தக்காளி செடியின் இலைகளை சமையலுக்கு பயன்படுத்தும் பழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆபாத்த

|

சில காய்கறிகள் மட்டுமே அனைவரும் விரும்பும் சுவையான காய்கறியாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அதில் ஒன்றுதான் தக்காளி. சோலனேசே குடும்பத்தை சேர்ந்த இந்த பழத்தை விரும்பாதவர்கள் மிகவும் சொற்பமே. உணவிலிருந்து, அழகு வரை அனைத்திற்கும் பயன்படும் இந்த அழகான பழத்தில் நிறைய ஆபத்துக்களும் உள்ளது.

Side effects of tomatoes

தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது அது உடலில் பலவித எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. தக்காளி செடியின் இலைகளை சமையலுக்கு பயன்படுத்தும் பழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆபாத்தான ஒன்றாகும். இந்த பதிவில் தக்காளியை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்ளும்பது ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

சாப்பிட்டவுடன் உங்கள் மார்பு பகுதியில் எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படுகிறதா? அப்படி ஏற்பட்டால் நீங்கள் திட்ட வேண்டியது இந்த அழகான பழத்தைதான். தக்காளியில் அதிக அளவு மாலிக் மற்றும் சிட்ரிக் அமிலங்கள் உள்ளது. தக்காளி உங்கள் உடலில் பல அமில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. செரிமானம் தொடங்கியவுடன் தக்காளி இரைப்பையில் அதிக அமிலத்தாக்கங்களை ஏற்படுத்தும். இதனால் உணவுக்குழாயில் அதிக அமிலப்போக்கு ஏற்பட்டு நெஞ்செரிச்சல் ஏற்படும். இதனை தவிர்க்க விரும்பினால் அதிகளவு தக்காளி சாப்பிடுவதை தவிருங்கள்.

குடல் வீக்கம்

குடல் வீக்கம்

தக்காளியின் செரிமானம் அடையாத தோல் மற்றும் விதைகள் உங்கள் வயிற்றின் செயல்பாடு மற்றும் குடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இவை குடலில் ஒட்டிக்கொண்டு வீக்கத்தை ஏற்படுத்தும். உலகளவில் குடல் இயக்கங்களை பாதிக்கும் முக்கிய உணவாக தக்காளி நம்பப்படுகிறது. எனவே அதிகளவு தக்காளி சாப்பிடாமல் இருங்கள்.

அலர்ஜிகள்

அலர்ஜிகள்

ஹிஸ்டமைன் என்பது தக்காளியில் உள்ள முக்கியமான சேர்மம் ஆகும். இதுதான் நமது உடலில் ஏற்படும் பலவித அலர்ஜிகளுக்கான காரணமாகும். வாய் மற்றும் நாக்கில் வீக்கம், இருமல், சருமம் சிவப்பாக தடித்தல், தொண்டை எரிச்சல் போன்றவை இதனால் ஏற்படும் விளைவுகளாகும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக தக்காளி சாப்பிடுவதை நிறுத்திவிடவும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

கால்சியம் மற்றும் ஆக்சலேட் அதிகம் உள்ள இந்த பழம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியது. ஆனால் இதற்கு எதிர்மறையாக இந்த சத்துக்களை உறிஞ்சுவதும், அவற்றை வெளியேற்றுவதும் மிகவும் கடினமான ஒன்று. இது நம் உடலில் அதிகம் சேர்வது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும், இது மிகவும் ஆபத்தான ஒன்று.

உடல் வலி மற்றும் வாதம்

உடல் வலி மற்றும் வாதம்

இதில் உள்ள ஹிஸ்டமைன் மற்றும் சாலமைன் உடலில் கால்சியம் திசுக்களை உருவாக்கக்கூடியது. இது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். மூட்டுகளில் ஏற்படும் இந்த வீக்கம் அதிக வலியை ஏற்படுத்துவதுடன் தினசரி வேலைகள் செய்வதையே கடனமாக்கிவிடும். தொடர்ந்து அதிக தக்காளி சாப்பிடும்போது அது வாதம் ஏற்பட வழிவகுக்கும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

அதிகளவு அமிலங்கள் உள்ளதால் தக்காளி உங்கள் வயிற்றில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம். தக்காளியில் உள்ள சலாமெனல்லா உங்களுக்கு அதிகளவு வயிற்றுப்போக்கை ஏற்படுத்த கூடிய ஒன்றாகும்.

கார்டியோவாஸ்குலர் பிரச்சினைகள்

கார்டியோவாஸ்குலர் பிரச்சினைகள்

அடைக்கப்பட்ட தக்காளியானது மற்ற தக்காளியை விட அதிகளவு சோடியத்தை கொண்டிருக்கும். உடலில் அதிக அளவு சோடியம் சேர்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, அது கார்டியோவாஸ்குலர் பிரச்சினைகளை உண்டாக்கும். இதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் பல இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

லிகோபேண்டோர்மியா

லிகோபேண்டோர்மியா

தக்காளியில் லிகோபேன் என்ற சேர்மம் உள்ளது. உடலில் அதிகளவு லிகோபேன் சேர்வது லிகோபேண்டோர்மியா என்னும் நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த னாய் ஏற்பட்டால் சருமத்தில் ஆங்காங்கே அடர் மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் தோன்றும். இது ஆரோக்கியத்தை பாதிக்க விட்டாலும் தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோய்

ஆண்கள் அதிகளவு தக்காளி உட்கொள்ளும்போது அது அவர்கள் உடலில் அதிகளவு லிகோபேனை சேர்க்கிறது. இது உடலில் அதிகம் சேரும்போது ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது வலியை ஏற்படுத்துவதுடன் புரோஸ்ட்ரேட் சுரப்பியையும் பாதிக்கும். இதன் விளைவு புரோஸ்ட்ரேட் புற்றுநோய்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side effects of tomatoes

Tomato is a widely used healthy and juicy vegetable. But it can create many harmful effects on health. Especially eating too much tomato can lead to prostate cancer in men.
Story first published: Friday, September 7, 2018, 17:31 [IST]
Desktop Bottom Promotion