பைன் பீன்ஸ் சாப்பிடுவது நல்லதா? அதனால் என்னென்ன பிரச்னைகள் வரும்?

Subscribe to Boldsky

அமெரிக்காவை தாயகமாக கொண்ட பின்டோ (அ) பைன் பீன்ஸ் பொதுவாக சூப்கள் மற்றும் அரிசி உணவுகள் உடன் பயன்படுத்தக்கூடிய மலிவான, சத்தான பீன் ஆகும். இந்த பருப்பு பொதுவாக மெக்சிகன் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

Pinto Beans Nutrition Facts

பல டெக்ஸ்-மெக்ஸ் (மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா எல்லை) சமையல்காரர்கள் சமைக்கப்பட்ட பீன்ஸ் மாஷ் மற்றும் அவற்றை ஃப்ரைஜோல்ஸ் அல்லது வறுக்கப்பட்ட பீன்ஸ் உடன் பரிமாறுவர்கள். பைன் பீன்ஸ் பலவகைப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை கொடுள்ளதால் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பின்டோ பீன்ஸ்

பின்டோ பீன்ஸ்

Image Courtesy

பின்டோ பீன்ஸ் ஆரோக்கியமான மற்றும் சிக்கலான கார்போ ஹைட்ரேட்டினை கொண்டுள்ளது. ஒரு வேளை பைன் பீன்ஸ் உணவு கிட்டத்தட்ட 30 கிராம் ஸ்டார்ச் கொண்டுள்ளது. ஸ்டார்ச் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகள் உடலுக்கு மிக விரைவாக ஆற்றலை அளிக்கின்றன.

நீங்கள் ஒரு கப் பைன் பீன்ஸ் நுகரும்போது நீங்கள் 15 கிராம் ஃபைபர் பெற்று பயனடைவீர்கள். ஃபைபர் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் இதில் ஒரு கிராம் அளவுக்கு குறைவாகவே இயற்கையாகவே சர்க்கரையை கொண்டுள்ளது.

பின்டோ பீன்ஸ்ஸின் கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜி.ஐ.) சுமார் 39 ஆகும்.

ரத்த குளுக்கோஸ்

ரத்த குளுக்கோஸ்

குறிப்புகளின் படி, 55 அல்லது அதற்கு குறைவான GI கொண்ட உணவுகள் குறைவான கிளைசெமிக் உணவுகளாக கருதப்படுகின்றன. பிண்டோ பீன்ஸ் கிளைசெமிக் சுமை 15 மட்டுமே ஆகும். இரத்த சர்க்கரை மீதான உணவு விளைவுகளை மதிப்பிடும் போது கிளைசெமிக் சுமை கணக்கில் எடுத்துக் கொள்கிறது. 10 க்கும் குறைவான கிளைசெமிக் சுமை இரத்த குளுக்கோஸ் அளவில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை.

கொழுப்புகள்

கொழுப்புகள்

பைன் பீன்ஸ்ஸில் கொழுப்பு ஒரு கிராம் மட்டுமே உள்ளது, எனவே இது ஒரு இயற்கையாக குறைந்த கொழுப்பு கொண்ட உணவு. எடை இழப்பு அல்லது ஆரோக்கியமான எடை பராமரிப்புக்கு குறைந்த கொழுப்பு உணவுகள் பயன்படுத்துவதை எதிர்த்து சில ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கையுடன் இருக்க கூறினாலும் அது பொதுவாக கொழுப்பு அகற்றிய உணவைக் குறிப்பிடுகின்றன. எனவே இயற்கையாக நல்ல ஊட்டச்சத்து மற்றும் கொழுப்பு இல்லாத உணவுகள் எந்த உணவிற்கும் ஒரு நல்ல கூடுதலாகும்.

இருப்பினும், பல பதப்படுத்தப்பட்ட பீன்ஸ்-களில் கொழுப்புகள் கூடுதலாகும். உதாரணமாக, நீங்கள் பதப்படுத்தப்பட்ட வறுக்கப்பட்ட பீன்ஸ் அல்லது ஃப்ரைஜோலை வாங்கினால் அதில் மூன்று மடங்கு கொழுப்பு அதிகமாக காணப்படும். இதற்க்கு காரணம் அதில் உபயோகிக்கப்படும் எண்ணெய் ஆகும். எனவே கொழுப்பு குறைவான எண்ணெய் மூலம் பதப்படுத்தப்பட்ட பொருள்களை வாங்குவது நல்லது.

பின்டோ பீன்ஸ் – புரோட்டீன்

பின்டோ பீன்ஸ் – புரோட்டீன்

பிண்டோ பீன்ஸ் ஒவ்வொரு வேலை உணவுக்கும் ஆரோக்கியமான 15 கிராம் புரதத்தை வழங்குகிறது. இந்த காரணத்திற்காக, பல சைவ உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் காய்கறி உணவுகள் உண்ணுபவர்கள் தேவையான புரதச்சத்துக்களை பெற இவற்றை உட்கொண்டால் நல்லது.

இருப்பினும், பைன் பீன்ஸ் முழுமையான புரதமாக கருதப்படுவதில்லை ஏனெனில் அத்தியாவசிய அமினோ அமிலங்களை இது உடலுக்கு கொடுப்பதில்லை. எனவே இதனை பிற முழு தானியத்தோடு சேர்த்து உண்ணும்போது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் பெறுவதற்கு உதவும்.

பின்டோ பீன்ஸ்ஸில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

Image Courtesy

பின்டோ பீன்ஸ் சத்துக்களை நிரம்பியுள்ளது. இதை ஒரு கப் சாப்பிட்டால், உடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட 74 சதவிகிதம் நுண்ணூட்ட சத்துக்கள் (294 mcg) கிடைக்கும், மேலும் இது உடலுக்கு தேவையான 25 சதவிகிதம் பாஸ்பரஸ் (251 மி.கி.), மற்றும் மாங்கனீஸின் பரிந்துரைக்கப்பட்ட அளவின் 39 சதவிகிதம் (0.8 மிகி) ஆகியவற்றை கொடுத்து, நரம்பு மண்டலம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

ஒரு கப் பீன்ஸ்ஸில் உடலுக்கு தேவையான இரும்பு சத்தில் 20 சதவிகிதம் (3.6 மிகி), 21 சதவிகிதம் (85.5 mg) மெக்னீசியம், 20 சதவிகிதம் (0.4 mg) வைட்டமின் B6, 22% (0.3 mg) தயமின் மற்றும் சுமார் 20% பொட்டாசியம் மற்றும் தாமிரம் ஆகியவை உள்ளது.

சுகாதார நலன்கள்

பருப்பு உணவான பின்டோ பீன்ஸ் உலகம் முழுவதும் பொதுவாக பல ஆண்டுகளாக ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்களால், இதை உட்கொள்வதால் பல உடல்நல நன்மைகள் கிடைக்கின்றன என்று ஆராய்ச்சி பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளனர்.

உடல் பருமன்

உடல் பருமன்

உடல் பருமன் உள்ளவர்களின் ஊட்டச்சத்து மதிப்பீட்டின் ஆய்வின் படி "ஆற்றல் நிறைந்த உணவுகளுக்கு பதிலாக பருப்பு மற்றும் பீன்ஸ் உண்ணும் போது அதிக உடல் பருமனை கொண்டுள்ளவர்களுக்கு வரும் மற்ற உடல்நலக்குறைவு, நீரிழிவு, மற்றும் வளர்சிதை மாற்றமடைதல் போன்றவற்றை மேலாண்மை செய்யலாம்"

கனடா நாட்டின் மருத்துவச் சங்கம் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கையில், உங்கள் உணவில் உள்ள பீன்ஸ் LDL கொழுப்பை என்ற கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.

பீன்ஸ், பட்டாணி, பருப்பு போன்றவற்றை அதிகமாக உட்கொண்டால் நீரிழிவு நோயாளிகளுக்கும், மற்றவர்களுக்கும் நீண்டகால கிளைசெமிக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த மற்றும் மேம்படுத்த உதவுவதாக பிற ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொதுவான கேள்விகள்

பொதுவான கேள்விகள்

Image Courtesy

பின்டோ பீன்ஸ் வாங்கும் போது நாம் என்ன கவனிக்க வேண்டும்?

நீங்கள் எந்தப் பருப்பை வாங்கும்போதும் உடைக்கப்படாத தூசி அல்லது ஈரப்பதம் இல்லாத முழு பருப்பை வாங்குவது நல்லது. இதை முன்பே பேக் செய்த பைகள் அல்லது பெட்டிகள் போன்றவற்றில் வாங்கலாம். ஆனால் பல கடைகளில் நீங்கள் உங்களுக்கு தேவையான அளவு வாங்கவும் வசதி உள்ளது.

நீங்கள் பதப்படுத்தப்பட்ட (அ) வறுக்கப்பட்ட முழு பைன் பீன்ஸ் வாங்கலாம். பல பிரபலமான மெக்சிகன் உணவு தயாரிப்பாளர்கள் பல்வேறு வகைகளில் இந்த பீன்ஸை விற்கிறார்கள். உங்கள் கொழுப்பு அல்லது உப்பு அளவை சரியான அளவு வைத்துக்கொள்ள நீங்கள் வாங்குவதற்கு முன் ஊட்டச்சத்து உண்மைகளை உள்ள லேபிள்களை சரிபார்க்கவும். உப்பு மற்றும் கொழுப்பு பொதுவாக பதப்படுத்த பயன்படுகிறது.

சேமிக்கும் முறை

சேமிக்கும் முறை

Image Courtesy

குளிர்ந்த இருண்ட இடத்தில் அல்லது காற்று புகாத கொள்கலனில் இதை வைக்கலாம். ஒழுங்காக சேமிக்கப்பட்டால், பருப்பு 12 மாதங்கள் வரை நல்ல நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் பைன் பீன்ஸ் சமைத்து வைக்க விரும்பினால், அவை ஒரு கற்று புகாத கொள்கலனில் குளிரூட்டப்பட்ட நிலையில் சுமார் மூன்று நாட்களுக்கு புதியதாக இருக்கும்.

எப்படி பைன் பீன்ஸ் சமைக்க வேண்டும்?

எப்படி பைன் பீன்ஸ் சமைக்க வேண்டும்?

Image Courtesy

சமைக்கும் முன், நீங்கள் அழுக்கு அல்லது தூசி ஆகியவற்றை நீக்க அவற்றை நன்கு கழுவ வேண்டும் மேலும் உடைந்த மற்றும் கேடான பீன்ஸ் இருந்தால் நீக்க வேண்டும். மூன்று கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பீன்ஸ் சேர்க்கவும். சமையல் நேரம் உங்கள் சுவை விருப்பம் சார்ந்தது என்றாலும், சுமார் 20 நிமிடங்கள் இளம் சூட்டில் சமைக்கவும்.

சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்புகள்

இந்த ஆரோக்கியமான உணவை மிகச் சிறப்பாக செய்ய செய்முறையை உங்களுக்கு தேவையில்லை. உங்களுக்கு பிடித்த சூப் அல்லது சாலட் செய்யம் போது, சுவை மற்றும் ஊட்டச்சத்து சேர்க்க பீன்ஸ் தேவையான அளவு அதனுடன் சேர்த்து சமைக்கவும். பின்டோ பீன்ஸ் இருப்பு இல்லை என்றல் நீங்கள் வேறு பீன்ஸ் வகைகளையும் பயன்படுத்தலாம்.

நீங்கள் உப்பு சேர்த்து முழு சமைத்த அல்லது பதப்படுத்தப்பட்ட பீன்ஸ் உபயோகிக்காமல், தேவையான அளவு உப்பு சேர்த்து பீன்ஸ் சமைத்து உங்கள் வீட்டில் ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளலாம். தேவையான பொது தேவையான அளவு உங்கள் சமையலில் அதை கலந்து சமைக்கலாம்.

பின்டோ பீன்ஸ் - எளிய வீட்டு செய்முறை

பின்டோ பீன்ஸ் - எளிய வீட்டு செய்முறை

தேவையான பொருள்கள்

• 1 (அ) 1.5 கிலோ பீன்ஸ் - தூய்மையாக்கி நன்கு கழுவ வேண்டும்

• 1 வெங்காயம் - வெட்டப்பட்டது

• 2 பல் பூண்டு

அனைத்து பொருட்களையும் தண்ணீரில் நிரப்பப்பட்ட பெரிய பானைக்குள் வைக்கவும். பீன்ஸ் மென்மையானது, 60-90 நிமிடங்கள் வரை ஒரு கொதிநிலை மற்றும் இளங்கொதிக்கு கொண்டு வாருங்கள், பீன்ஸ் சாப்பிடும் நிலைக்கு வேகும் வரை.

நீங்கள் வேகவைத்த பீன்ஸ் செய்ய விரும்பினால், நடுத்தர சூட்டில் ஓர் கனமான வாணலியை வைக்கவும், எண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். நீங்கள் சுவை விரும்பினால் நீங்கள் இந்த நேரத்தில் கூடுதல் பூண்டு சேர்க்க முடியும், பீன்ஸ் பல கப் சேர்க்க மற்றும் 5-7 நிமிடங்கள் சமைத்து நன்றாக பொடித்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும்.

மிளகாய் தூள் அல்லது சீரகம் போன்ற சுவைகளை ருசிக்கச் செய்யும் பொருள்களை சேர்த்து உங்கள் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். நீங்கள் அடுப்பு கொண்டு இதை செய்ய நேரம் இல்லை என்றல் அதற்கு பதிலாக எளிதாக குக்கர் கொண்டு பைன் பீன்ஸ் செய்யலாம்.

ஒவ்வாமை

ஒவ்வாமை

அமெரிக்க ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் நோய்த்தாக்கம் ஆகியவற்றின் அகாடமி படி, பைன் பீன்ஸ் மூலம் வரும் ஒவ்வாமைகள் கடந்த காலத்தில் அரிதாகவே கருதப்பட்டன, ஆனால் இப்போது பெரியவர்களிலும் குழந்தைகளிலும் பொதுவாக சில அறியப்படுகின்றன. அனால் இந்த வகை ஒவ்வாமை சோதனைகள் ஆய்வு கூடங்களில் செய்வதை விட நீங்கள் உங்களுக்கு பீன் பீன்ஸ் ஒவ்வாமை இருந்தால் தவிப்பது நல்லது.

ஒரு சில ஒவ்வாமை அறிகுறிகள் முகம் வீக்கம் , சுவாசம் விட சிரமம், கடுமையான ஆஸ்துமா, வயிற்று வலி, குமட்டல் அல்லது வாந்தியெடுத்தல் முதலியவை ஆகும்.

ஒவ்வாமை உங்களுக்கு இருப்பதாக நீங்கள் சந்தேகிக்கிறீர்கள் என்றால், சரியான மருத்துவ பரிசோதனைக்காக உங்கள் டாக்டரிடம் பேசுங்கள். பின்டோ பீன்ஸ்ஸில் உள்ள ஆன்டி-நியூட்ரியன்ட்ஸ்

இரும்புச்சத்து குறைபாடு

இரும்புச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கக்கூடிய சேர்மங்கள் பொதுவாக "ஆன்டி -நியூட்ரியன்ட்ஸ்" என்று குறிப்பிடப்படுகின்றன. இருப்பினும், அனைத்து தாவரங்களும் இந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன, அவை மிகப்பெரிய அளவிலான அளவை உட்கொண்ட போது மட்டுமே கேடு விளைகின்றன. இந்த ஊட்டச்சத்தின் விளைவுகள் நீங்கள் பைன் பீன்ஸில் உட்கொள்ளும் அளவுகளில் குறைவாகவே இருக்கும்.

கூடுதலாக, சில நுகர்வோர்கள் தானியம் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றில் உள்ள ஆன்டி-நியூட்ரியன்ட்ஸ் பற்றி கவலைப்பட்டாலும், இவை பீன்ஸின் நம் சமையல் மூலம் செயலிழக்கப்படுகின்றன. எனவே, இந்த ஊட்டச்சத்துக்களால் (இரும்பு குறைபாடு இரத்த சோகை போன்றவை) பாதிக்கப்படக்கூடிய ஒரு நிலை இல்லாவிட்டால், அவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படவேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Pinto Beans Nutrition Facts

    Pinto Beans consumed more nutrients and it is contained low cholestrol food. you should eat and stay health.
    Story first published: Thursday, August 30, 2018, 17:10 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more