Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
காலையில் குடிக்கும் காபியுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா?
காபியில் பல நன்மைகளும் சில பக்க விளைவுகளும் இருக்கின்றன. அந்த காபியுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் தினசரி காலையில் எழுந்ததும் காபி குடிக்காமல் இருக்க மாட்டோம். காரணம் உலகத்தில் உள்ள முக்கால் வாசி நபர்கள் காபி பிரியர்களாக இருக்கின்றனர். இந்த காபியில் நிறைய நன்மைகளும் அதே நேரத்தில் பக்க விளைவுகளும் இருக்கின்றன.

சாக்லேட் காபி, மஸ்ரூம் காபி, ஜஸ் காபி இப்படி நிறைய வகையான காபி வகைகளும் உள்ளன. ஆனால் நீங்கள் காபியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடித்தது உண்டா? ஆமாங்க இந்த தேங்காய் எண்ணெய் காபியில் நிறைய நன்மைகள் உள்ளன. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

காபியின் அளவு
நீங்கள் ஒவ்வொரு நாளும் சரியான அளவு மட்டுமே காபியை எடுத்துக் கொள்வது முக்கியம். அப்பொழுது தான் அதனால் வரும் பக்கவிளைவுகளை நாம் தடுக்க முடியும். ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் அளவு அதாவது 4 கப் காபி வரை பெரியவர்கள் குடிக்கலாம்.

அபாயம்
4 கப் காபிக்கு அதிகமாக குடிக்கும் போது இதயம் செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரித்தல், ஏன் சில சமயங்களில் இறப்பு கூட நிகழலாம். இன்ஸோமினியா, தலைவலி, சீரணமின்மை, ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி,உடம்பு சூடாக உணர்தல் , இரவில் வியர்த்தல், எலும்பு முறிவு போன்றவற்றை ஏற்படுத்த கூடும்.

பயன்கள்
தினசரி சரியான அளவு காபி குடித்து வருவதால் நமது ஆற்றல் அதிகரிக்கும், எடை குறையும், மன அழுத்தம் குறையும், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும், ஆல்கஹாலிக் கொழுப்பில் லாத பொருட்கள் கல்லீரலில் சேருவதை தடுத்து கல்லீரல் அழற்சி நோய் வராமல் காக்கிறது. மேலும் நரம்பு மண்டலம் சம்பந்தமான நோயான அல்சீமர் நோய் வராமல் காக்கிறது , சரியான அளவு காபி குடிப்பது இதய நோய்கள் வராமல் தடுக்கிறது மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய் காபி
நாம் நார்மலாக குடிக்கும் காபியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிக்கும் போது நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. இந்த தேங்காய் எண்ணெய் காபி குடிப்பதால் அப்படி என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைப் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

மெட்டபாலிசம்
காபியுடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடிக்கும் போது நமது உடல் மெட்டா பாலிசம் அதிகரிக்கிறது. தேங்காய் எண்ணெய் நல்ல கொழுப்புகளை உடம்பில் தக்க வைத்து பிறகு அதை ஆற்றலாக மாற்றி எரித்து விடுகிறது. இதனால் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. 12 வாரமாக 40 பெண்களிடம் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த 20-40 வயதுள்ள இந்த பெண்கள் எல்லாரும் அடிவயிற்று தொப்பை போட்டவர்களாக இருந்தனர்.
இவர்களில் கொஞ்ச பேருக்கு தேங்காய் எண்ணெய்யும் சில பேருக்கு சோயா எண்ணெய்யும் மாத்திரைகளாக கொடுக்கப்பட்டது. தேங்காய் எண்ணெய்யை உட்கொண்ட பெண்களின் உடல் எடை குறைந்ததோடு நல்ல கொழுப்பின் அளவும் அவர்களுக்கு அதிகரித்து இருந்தது. சோயா எண்ணெய் சாப்பிட்டவர்களுக்கு இத்தகைய மாற்றம் நிகழவில்லை. எனவே தேங்காய் எண்ணெய் காபி உங்கள் உடல் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

இரத்த சர்க்கரை
இந்த தேங்காய் எண்ணெய் காபி உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் காபி சேர்ந்த கலவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இன்சுலின் செல்களை நல்ல முறையில் செயல்பட வைக்க உதவுகிறது. இதனால் உங்கள் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சீரண சக்தி
காபி உடலில் சர்க்கரை உறிஞ்சிதலை குறைப்பதன் மூலம் மலச்சிக்கலை தடுத்து செரிமானத்தை அதிகரிக்கிறது.
தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கையான மலமிளக்கி என்பதால் குடல் ஊட்டச்சத்துகளை எளிதில் உறிஞ்சி மலத்தை இலகுவாக வெளியேற்றுகிறது.
இந்த இரண்டும் சேர்ந்த கலவை நமது மலச்சிக்கலை போக்கி நன்மை அளிக்கிறது. மேலும் குடலில் ஏற்படும் அழற்சியையும் போக்குகிறது.

நோயெதிர்ப்பு சக்தி
காபி நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள பாலிபினோல், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவை இதய நோய்கள், புற்றுநோய், ஆஸ்ட்ரோபோரோஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
தேங்காய் எண்ணெய்யில் 50% லாரிக் அமிலம் உள்ளது. இதில் உள்ள நல்ல கொழுப்பு தாய்ப்பாலுக்கு இணையானது. இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் நமது உடலில் நுழையும் கிருமிகளை அழித்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மனநிலை மாற்றம்
காபி நம்மை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்க உதவுகிறது. இது நமது எண்ணத்தை ஒழுங்குபடுத்துகிறது.
இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிக்கும் போது நமது உடல் உடனடி எனர்ஜி மாற்றான கீட்டோனாக மாறிகிறது. இந்த கீட்டோன் அப்படியே நமது கல்லீரல் க்கு சென்று நமது மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. இதனால் நினைவாற்றல், எண்ணச் செறிவு அதிகரிக்கிறது.
எனவே காபியுடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடிக்கும் போது நமது உடலில் கீட்டோன்கள் அதிகமாகிறது என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேங்காய் எண்ணெய் காபி
தேவையான பொருட்கள்
சூடான காபி - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
உங்கள் டம்ளரில் உள்ள சூடான காபியில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட்டு குடியுங்கள். தினசரி நன்மைகளால் பயனடையுங்கள். இவ்வளவு ஈஸியா ஒரு நல்ல ஆரோக்கியமான காபி குடிக்க முடீயும்னா அப்புறம் எதுக்கு தயக்கம். தினமும் குடிங்க. ஆரோக்கியமா இருங்க...



Click it and Unblock the Notifications











